$BlogRSDURL$>
கிரிக்கெட்டைத் தவிர மற்றவற்றை எதிர்ப்போம்.
மற்ற விளையாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
சானியா மிஸ்ரா விளையாடும் tennis ஆக இருக்கலாம்.
Beckham விளையாடும் உதைபந்தாட்டமாக இருக்கலாம்.
ஏன் எந்தவொரு தடகள விளையாட்டுப் போட்டியாயுமிருக்கலாம்.
ஆண் பெண் என எல்லோருமே அரைகுறை ஆடைகளுடன் வந்துதான் விளையாடுகின்றனர்.
அதுவும் ஓட்டப்பந்தய வீரர்கள் வீராங்கனைகள் இருக்கிறார்கள் பாருங்கள். வயிறும் தொடையும் தெரியத்தக்கதாகத்தான் உடை உடுத்துகிறார்கள். அதுவும் எவ்வளவு இறுக்கமாக உடுத்துகிறார்கள். இதுவெல்லாம் ஆபாசம் என்று அவர்களுக்குத் தெரியாதா? அவை பார்வையாளர்களை எந்தளவுக்குக் குழப்புகின்றன?அவர்களுக்கெல்லாம் நம் கிரிக்கெட் வீரர்கள்போல் முழுவதும் மறைத்த உடையுடுத்து ஓடுவதற்கு என்ன வந்தது?
உதைபந்தாட்ட வீரர்கள் வீராங்கனைகளை எடுத்தால் தொடை தெரியத்தக்கதாக காற்சட்டை போடுகிறார்கள். இது பார்வையாளரை மயக்கவல்லாமல் வேறென்னத்துக்கு? இவர்கள் முழுநீளக் காற்சட்டையும் முழுநீளக் கைச்சட்டையும் அணிந்து தொப்பியும் போட்டு விளையாடினால் என்ன? தொப்பி போடுவதால் பந்தைத் தலையால் இடிக்கும்போது தலை பாதுகாப்பாக இருக்குமே?மேலும் உயரம் பாய்தல், ஈட்டியெறிதல், தடை தாண்டல், ஓட்டங்கள் என்று எதையெடுத்தாலும் அரைகுறை ஆடைகளுடன்தான் ஆண்களும் பெண்களும் வலம் வருகிறார்கள். அவர்களை முதலில் தமது உடையை மாற்றச் சொல்ல வேண்டும்.
Gymnastic எனப்படும் விளையாட்டில் படு ஆபாசமாகப் பங்குபற்றுகிறார்கள். இவர்கள் சேலையுடுத்தோ அல்லது உடம்பை முழுவதும் மறைக்கும் உடையுடனோ விளையாடினால் என்ன குறைந்தா போய்விடுவர்? இவ்விளையாட்டில் பங்குபற்றும் ஆண்களும் தம்மை முழுமையாய் மறைக்கும் ஆடையில்தான் விளையாட வேண்டும்.
குத்துச் சண்டை வீரர்களைப் பாருங்கள். உடம்பைக் காட்டிக் காசு பார்க்கிறார்கள். முக்கியமாக நீச்சல் வீரர் வீராங்கனைகள் படுபயங்கர ஆபாசமாக உடையணிகிறார்கள். அப்படி உடுத்தால்தான் நீச்சல் வருமா? உடம்பை முழுவதும் மூடி உடுத்தால் நீச்சல் வராதா? (அப்படிச் சொன்னால் இறுக்கமான உடையுடுத்து கவர்ச்சி காட்டுவார்கள்.)
இப்படி உடுத்தினால் தடுக்கி விழவேண்டிவருமென்று பலர் கூறக்கூடும். மனித இனத்தின் தன்மானத்தை விடவா தடுக்கிவிழுவது பெரிதாகப் போய்விட்டது?
இப்படி அரைகுறையாய் உடுத்தும் வீரர் வீராங்கனைகளைப் பார்க்கும் மிருகங்கள் என்ன நினைக்கும். (இப்போது நாய் பூனை போன்ற சில பிராணிகள் நேரடியாகவும் தொலைக்காட்சி வழியாகவும் பார்க்கின்றன.) அவற்றின் மத்தியில் எமது மதிப்பு இறங்கிவிடாதா?