<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Friday, September 09, 2005
  ஆபாச விளையாட்டுக்கள்

கிரிக்கெட்டைத் தவிர மற்றவற்றை எதிர்ப்போம்.
ஏன் என்று கேட்கிறீர்களா? கிரிக்கெட்டில் மட்டுமே மனிதர்கள் மனிதர்களாக விளையாடுகிறார்கள். மற்றவற்றில் அவர்கள் மனிதர்களாக விளையாடுவதில்லை. நான் உடையைப் பற்றிப் பேசுகிறேன்.

மற்ற விளையாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
சானியா மிஸ்ரா விளையாடும் tennis ஆக இருக்கலாம்.
Beckham விளையாடும் உதைபந்தாட்டமாக இருக்கலாம்.
ஏன் எந்தவொரு தடகள விளையாட்டுப் போட்டியாயுமிருக்கலாம்.
ஆண் பெண் என எல்லோருமே அரைகுறை ஆடைகளுடன் வந்துதான் விளையாடுகின்றனர்.



அதுவும் ஓட்டப்பந்தய வீரர்கள் வீராங்கனைகள் இருக்கிறார்கள் பாருங்கள். வயிறும் தொடையும் தெரியத்தக்கதாகத்தான் உடை உடுத்துகிறார்கள். அதுவும் எவ்வளவு இறுக்கமாக உடுத்துகிறார்கள். இதுவெல்லாம் ஆபாசம் என்று அவர்களுக்குத் தெரியாதா? அவை பார்வையாளர்களை எந்தளவுக்குக் குழப்புகின்றன?அவர்களுக்கெல்லாம் நம் கிரிக்கெட் வீரர்கள்போல் முழுவதும் மறைத்த உடையுடுத்து ஓடுவதற்கு என்ன வந்தது?



உதைபந்தாட்ட வீரர்கள் வீராங்கனைகளை எடுத்தால் தொடை தெரியத்தக்கதாக காற்சட்டை போடுகிறார்கள். இது பார்வையாளரை மயக்கவல்லாமல் வேறென்னத்துக்கு? இவர்கள் முழுநீளக் காற்சட்டையும் முழுநீளக் கைச்சட்டையும் அணிந்து தொப்பியும் போட்டு விளையாடினால் என்ன? தொப்பி போடுவதால் பந்தைத் தலையால் இடிக்கும்போது தலை பாதுகாப்பாக இருக்குமே?மேலும் உயரம் பாய்தல், ஈட்டியெறிதல், தடை தாண்டல், ஓட்டங்கள் என்று எதையெடுத்தாலும் அரைகுறை ஆடைகளுடன்தான் ஆண்களும் பெண்களும் வலம் வருகிறார்கள். அவர்களை முதலில் தமது உடையை மாற்றச் சொல்ல வேண்டும்.



Gymnastic எனப்படும் விளையாட்டில் படு ஆபாசமாகப் பங்குபற்றுகிறார்கள். இவர்கள் சேலையுடுத்தோ அல்லது உடம்பை முழுவதும் மறைக்கும் உடையுடனோ விளையாடினால் என்ன குறைந்தா போய்விடுவர்? இவ்விளையாட்டில் பங்குபற்றும் ஆண்களும் தம்மை முழுமையாய் மறைக்கும் ஆடையில்தான் விளையாட வேண்டும்.



குத்துச் சண்டை வீரர்களைப் பாருங்கள். உடம்பைக் காட்டிக் காசு பார்க்கிறார்கள். முக்கியமாக நீச்சல் வீரர் வீராங்கனைகள் படுபயங்கர ஆபாசமாக உடையணிகிறார்கள். அப்படி உடுத்தால்தான் நீச்சல் வருமா? உடம்பை முழுவதும் மூடி உடுத்தால் நீச்சல் வராதா? (அப்படிச் சொன்னால் இறுக்கமான உடையுடுத்து கவர்ச்சி காட்டுவார்கள்.)



இவற்றைவிட footy, rugby, volley ball என்று எதையெடுத்தாலும் ஆண்களும்சரி பெண்களும்சரி ஆபாசமாகவே உடையணிந்து விளையாடுகின்றனர். அவர்கள் தம் உடையை மாற்றச் சொல்லி குறிப்பிட்ட விளையாட்டுக்களை நடத்துபவர்களை நாம் நச்சரிக்க வேண்டும். ஆணழகன் போட்டியெல்லாம் உடம்பை முழுமையாக மறைத்துத்தான் நடத்தப்பட வேண்டும்.

யாரோ ஒருவர் சொன்னார், உடையின் எடை 150 கிராம் அதிகரித்தால் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 0.4 செக்கன் தாமதம் ஏற்படுமென்று.இருக்கலாம். ஆனால் எல்லோரையும் உடம்பை மூடி ஓடு என்று வைத்துவிடடால் எல்லோருக்கும் ஒரேயளவுதானே பிரச்சினை தானே வரப்போகிறது?

இப்படி உடுத்தினால் தடுக்கி விழவேண்டிவருமென்று பலர் கூறக்கூடும். மனித இனத்தின் தன்மானத்தை விடவா தடுக்கிவிழுவது பெரிதாகப் போய்விட்டது?
இப்படி அரைகுறையாய் உடுத்தும் வீரர் வீராங்கனைகளைப் பார்க்கும் மிருகங்கள் என்ன நினைக்கும். (இப்போது நாய் பூனை போன்ற சில பிராணிகள் நேரடியாகவும் தொலைக்காட்சி வழியாகவும் பார்க்கின்றன.) அவற்றின் மத்தியில் எமது மதிப்பு இறங்கிவிடாதா?



கவனிக்க: நான் ஆணாதிக்க வாதியல்ல. அதனால்தான் ஆண்களையும் உடம்பு முழுவதையும் மறைக்கச் சொல்கிறேன். தலையைத் தொப்பி போட்டு மறைக்கச் சொல்கிறேன்.

பட உதவிகள்: கூகிள் மற்றும் மூக்கன்.

 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
எழுதிக்கொள்வது:

பாசு இந்த கோல்பு (கால்ப்ப்??) கிரிகட்டவிட ரொம்ப ரேசண்டான் அவிளைடாட்டு.

8.0 9.9.2005
 
எழுதிக்கொள்வது: சமூகக் காவலன்

சமூக பொறுப்பிலும் ஆணாதிக்க வக்கிரத்திற்கு எதிராகவும் உண்மையச் சொன்னீர்கள். நன்றி பெடியா!

16.8 9.9.2005
 
fool
 
அருமையான பதிவு. நடுநிலையோடு எழுதப்பட்டு ஆணாதிக்கத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளீர்கள்.

ஒய்யாரே, ஃபூல் என்று திட்டுவது எளிது. ஆனால் நடுநிலையோடு சிந்திப்பது மிகவும் கடினம். படக்கென்று வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள்.
 
எழுதிக்கொள்வது: யாரோ

தலிபான் றேஞ்சுக்கு போகாட்டடி சரிதான்

23.53 9.9.2005
 
எழுதிக்கொள்வது: vazhi pokkan

அப்படியானால் கோல்ப் விளையாட்டுக்கு கிரிகெட்டை விட அதிக வரவேற்ப்பு இருக்க வேண்டும், அல்லவா?

20.52 9.9.2005
 
எழுதிக்கொள்வது: அரசு

நல்லடியார் இப்படி எழுதி இருந்தா கொஞ்சம் பரபரப்பா இருக்கும் பொடிசு.

இப்ப மகளீரும் கிரிக்கட் ஆடுகிறார்கள் கொஞ்சம் பொருத்திருந்து பார்ப்போம் எப்படி உடை உடுத்துகிறார்கள் என்று.

2.10 27.9.2005
 
எழுதிக்கொள்வது: tt

அப்படி போடு


17.23 26.9.2005
 
எழுதிக்கொள்வது: The man in the Mirror!.....

undefined

22.49 3.10.2005
 
எழுதிக்கொள்வது: The man in the Mirror!.....

எழுதிக்கொள்வது: The man in the Mirror!.....

undefined

22.49 3.10.2005

22.54 3.10.2005
 
who is this Taliban an uncivilized stupid whojust would like watch the body of the person, but not what the person is doing!..... Go to afghan moun tins!.....
 
கருத்துக்கூறிய அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக ஒய்யாரோ ஒய்யாரோவுக்கு.
 
அப்போ!
நீச்சலுக்கு ஆண்களுக்கு 8 முழவேட்டியும்; நசனலுமா,,,??பெண்களுக்குக் காஞ்சிபுரம் பட்டு; எம்.எஸ்.எஸ் அம்மா நீலம் நல்ல எடுப்பா! இருக்கும்; நான் தமிழ் நீச்சல் வீரர்கள்; வீராங்கனைகள் பற்றிச் சொன்னேன்.
யோகன் பாரிஸ்
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது