ஸ்ரீரங்கனின் பதிவுக்கு ஒரு விளக்கம்.
ஸ்ரீரங்கன் அவர்கள், அநாமதேயமாகவும் பிறர் பெயரில் வந்தும் பின்னூட்டங்களிட்டு பிறரைத் துன்புறுத்துபவரைப் பற்றி
பதிவொன்று எழுதியுள்ளார். அதில் பெடியன்கள் பதிவையும் குறிப்பிட்டுள்ளார்.
முகமூடியுடன் எழுதுவதில் சில சௌகரியங்கள் உள்ளன. எல்லோரையும் முகமூடியைக் கழற்றிவைத்துவிட்டு வா என்று சொல்ல முடியாது. அதைவிட இராயகரன் அவர்ளுக்கும் எமக்கும் பிரச்சினையே இல்லை. அவரது பெயரைக் கும்பல் என்ற சொல்லுடன் சேர்த்துச் சொல்லியது தவறென்று நாம் சொல்லிவிட்டோம். இதுபற்றி
ஒரு பதிவு ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளது. மேலும் எமது குற்றச்சாட்டு இராயகரன் அவர்களுக்கோ அவரது சித்தாந்தங்களுக்கோ அவரது கருத்துக்களுக்கோ எதிரானதன்று. பிறகேன் வெளிப்படையாக இராயகரன் அவர்களின் கருத்துக்களை வாதிக்க வரச்சொல்லி அழைக்கிறீர்கள்?
அந்தப்பிரச்சினைபற்றி ஏற்கெனவே
பதிவு போட்டாயிற்று. அங்கு சென்று சில விசயங்களைத் தெரிந்துகொள்ளவும். மாற்றாரின் பெயரில் பின்னூட்டமிடுவது மிகக் கேவலம் என்று சொல்லும் நீங்கள், அப்படி எமது பெயரில் உங்கள் பதிவில் பின்னூட்டமிடப்பட்டதால்தான் அந்தப் பதிவு எம்மால் எழுதவேண்டி வந்தது என்பதையும் உணர்ந்திருப்பீர்கள்.
ஸ்ரீரங்கன் எழுதியது:
“பெடியன்களின் வருகைக்குப் பின் பற்பல மாறாட்டங்கள்இஅநாமதேயங்கள்-கருத்துக்கள் வந்தவண்ணமுள்ளன.இதன் வாயிலாகப் பின்னூட்டப் பெட்டிகள் யாவும் பதிவுசெய்த வாசகரையே அனுமதிக்கும் நிலைக்கு மாற்றவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.அனைவரும் கருத்தாடும் நிலை வலுவிழந்து போனவொரு சூழலில் எழுத்தினது பெறுமானம் வெறும் சிலருக்காக எழுத்தப்படும் நிலையில் ஆரோக்கியமானவொரு கருத்துநிலை வளர்வு இல்லாது போகின்றது.”
நீங்கள் சொல்லும் விளைவுகளனைத்தும் உண்மை. ஆனால் 'பெடியன்களின் வருகையின் பின்' என்று குறிப்பிட்டுள்ளதுதான் பிசகுகிறது. இந்தவியாதி சில மாதங்களுக்கு முன்பேயே வலைப்பதிவுகளில் ஆரம்பித்துவிட்டது. ரோசாவசந்தின் பெயரில் பின்னூட்டம் இடப்பட்டது முதல் இன்று வரை அது படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. டோண்டுவுக்கான பிரச்சினையும் எப்போதோ ஆரம்பித்துவிட்டது. பெடியன்கள் பதிவு ஆரம்பித்து சில நாட்களே ஆன நிலையில் எம் வருகைக்குப்பின் எனக்குறிப்பிடுவது சரியா என்று சொல்லுங்கள்.
அநாமதேயப் பின்னூட்ட வசதி அடைக்கப்பட்டது யாரால்?
இதற்கும் பெடியன்கள் பதிவுக்கும் என்ன சம்பந்தம்?
அனைவரும் கருத்தாடும் நிலையை நாமும் வரவேற்கிறோம். அதிலும் அநாமதேயக் கருத்துக்கள் வசதியை முகமூடி போட்டிருக்கும் எங்களை விட யார் வரவேற்க முடியும்?
ஆனால் தவிர்க்கவியலாக் காரணங்களால் நாங்களும் அவ்வசதியை அடைத்துவைத்துள்ளோம். நீங்கள் தேவையற்ற விதத்தில் 'பெடியன்களின் வருகைக்குப்பின்’ எனப் பாவித்துள்ளீர்கள்.
எங்களைப்பற்றி நீங்கள் தீர்க்கமான ஒரு தீர்மானத்தில் இருக்கிறீர்கள். கொழுவியின் பதிவில் நாம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என்று சொல்லியதிலிருந்து அதன் பின் நீங்கள் போட்ட பதிவுகளிலும் அடிக்கடி சுட்டிக்காட்டியமை இதற்குச்சான்று. இருந்தாலும் உங்கள் மேல் எமக்கு மரியாதையுண்டு. 'வலைப்பதிவாளருக்கு எச்சரிக்கை' என்ற எம் பதிவில், எல்லோரும் எம்மைக் கோமாளிகளாகப் பார்த்தபோது, நீங்களும் சுந்தரவடிவேல் ஐயாவும் தான் எம்மை ஒரு பொருட்டாக மதித்து எதிர்ப்பையும் விமர்சனத்தையும் அளித்தீர்கள். (இதற்கிடையில் இனிமேல் எம்மைக் கண்டுகொள்ளப் போவதில்லையென்று சொல்லியுள்ளீர்கள். நாங்கள் எங்கே போவோம்? யார் இனி எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து கருத்துச்சொல்வார்கள்?;-(
வலைப்பதிவுகளை முடக்குதல் என்ற கதையை நாம் விட்டுவிடுகிறோம். கொழுவியின் வலைப்பக்கம் வேலை செய்கிறது. ஆனால் பதிவுகள் போடப்படாத காரணம் என்னவென்று தெரியவில்லை. சிலவேளை சுற்றுலா போயிருக்கலாம். அவர் வெளிநாட்டிலிருந்திருந்தால் இலங்கை சென்றிருக்கலாம். அதைவிடுத்து நாம் சொன்ன ஈழப்பிரச்சினைக்கான தீர்வுகள் விடயங்கள் பற்றி ஏதாவதுசொல்ல இருந்தால் சொல்லுங்கள். (ஏற்கெனவே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்வதாகச் சொல்லிவிட்டீர்கள்)
எங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லையென்று சொன்னாலும் உங்களுக்காகப் பதிலொன்று போடவேண்டிய கடமை எங்களுக்குண்டு. எங்களைப்பற்றிய உங்கள் ஆரம்பக் கண்ணோட்டத்தினடிப்படையில் நாங்கள் எவ்விதத்திலும் காரணமேயில்லாத பெயர்மாற்றப்பிரச்சினைக்கு எங்களை நோக்கிக் கைகாட்டியுள்ளீர்கள் என்பதைச் சொல்லி இப்பதிவை முடிக்கிறோம்.
குறிப்பு: (சே. உருப்படியா ஏதாவது எழுதுவோம் எண்டு வெளிக்கிட்டா இப்படிச் சிக்கலில போய் முடியுது. இனி நாங்களும், படங்கள் காட்டி, முதுகு சொறிஞ்சு, பட விமர்சனம் எழுதி, நையாண்டி பண்ணி, பிழைப்பைப் பாக்க வேண்டியதுதான்.)
நன்றி.
பாசமுடன்
-உம்மாண்டி-