<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Sunday, December 24, 2006
  கூகிளில் கைவைத்த புலிகள் சிறிரங்கனிலும்....

ஏற்கனவே கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள் என்ற தலைப்பில் கட்டுரையொன்று எழுதியிருந்தோம். அப்போது அதை நையாண்டி பண்ணினர் தமிழர்கள். அதன்பின்னும் அமெரிக்கத் தேர்தலில் எப்படி பாசிசப் புலிகளின் கை விளையாடியிருந்ததென்றும் எழுதியிருந்தோம். இப்போது அது இன்னும் நிதர்சனமாக வெளிப்பட்டுவிட்டது.

ஆம், புலிகளை தன் எழுத்துத் திறமையால் நையப்புடைத்துக்கொண்டிருக்கும் தோழர் சிறிரங்கனின் வலைப்பதிவைத் தமிழ்மணத் திரட்டியில் தெரியவிடாமல் செய்வதற்காக கூகிள்காரங்கள் சுத்துமாத்துச் செய்திருக்கிறார்கள்.

இதை தோழர் சிறிரங்கன் மிகவும் மனமுடைந்து பதிவாக்கியிருக்கிறார்.
பார்க்க: சதிகாரக் கூகிள் கணக்கு...

தோழர் சிறிரங்கனை பழைய புளொக்கரிலிருந்து கூகிள் கணக்குக்கு மாறவைத்து (ஆசைகாட்டி மோசம் செய்து) விட்டு பின் தமிழ்மணத்திரட்டியில் தெரியவிடாமல் செய்துவிட்டார்கள்.
தோழரின் காத்திரமான, அறிவுபூர்வமான விமர்சனங்களையும் சாட்டையடிகளையும் எதிர்கொள்ள முடியாத புலிகள் முன்பு அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பதை சிறிரங்கன் வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழ் வலைப்பதிவர்களின் ஏகோபித்த ஆதரவாலும் பெடியங்களின் சில இரகசிய நடவடிக்கைகளாலும் அச்சதித்திட்டம் கைகூடாமற் போய்விட்டது.
இந்நிலையில்தான் தோழரின் சனநாயகத்துக்கான குரலை ஒடுக்க கூகிள் நிறுவனத்தைக் கொண்டே சதிசெய்திருக்கிறார்கள்.

இருந்தபோதும் எப்படி இவரின் பதிவு தமிழ்மணத்தில் தெரிகிறது என்று சிந்திக்கத் தெரிந்த யாராவது கேட்கலாம். அதற்கும் கைவசம் பதிலிருக்கிறது. தமிழ்மணத்திரட்டியை நிர்வகிக்கும் புலியெதிர்ப்புத் தோழர்கள் சிலரின் தயவால் சிறிரங்கனது பதிவு இப்போது மக்கள் பார்வைக்கு வந்துள்ளது(என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன). இதன்மூலம் புலிப் பாசிசத்தின் இன்னொரு சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

தோழர் சிறிரங்கன் இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவரல்லர்.
அவர் தொடர்ந்தும் தன் பொன்னான கருத்துக்காளால் புலிப்பாசிசத்தை எதிர்கொள்வார் என்று நம்புகிறோம்.

கூகிள் இனியும் தொடர்ந்து புலிகளுக்கு விலைபோய்க்கொண்டிருக்கக் கூடாது.
கூகிளின் இவ் அடாவடித்தனத்தை எதிர்த்து புதிய சனநாயக மக்கள் புரட்சியைத் தோற்றுவிக்க எமது தலைமையில் அணிதிரளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
______________
இப்பதிவு தமிழ்மணத்திரட்டி மேலான துவேசப் பதிவாக இனங்காணப்படாது என்று நம்புகிறோம். திரட்டிக்குரியோர் தொடர்பு கொள்ளின் பின்னூட்டமாகவே இடவும். வெளிப்படுத்தப்படாது.
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Saturday, December 02, 2006
  இயக்கத்துக்கு ஆட்சேர்க்கிறோம்

புதிய உலகொன்றிற்கான மக்கள் ஜனநாயகப் புரட்சியினை வேண்டிநிற்கும் நாம் உங்கள் முன் ஒரு மனித விடுதலைக்கான கோரிக்கையை முன் வைக்கிறோம். இன்றைய நாளில் புலிகளின் பாசிசக் கரங்கள் அமெரிக்கா கூகுள் ஐரோப்பிய நாடுகள் எங்கணும் பரந்து உழைக்கும் மக்களின் குரல் வளையை நெரித்துத் தள்ளுகிறது.

இந்த ஜனநாயக விரோத சக்திகளின் கொடும் முகமூடியைக் கிழித்தெறிய மக்களின் புதிய ஜனநாயகப் புரட்சியை உருவாக்க உழைக்கும் மக்களே எம்மோடு இணைந்து கொள்ளுங்கள். புதிய ஜனநாயகப் புரட்சியொன்றினை அவாவும் நாம் தனித்தனிய தனித்திருப்பதை விட பெடியன்கள் என்ற அமைப்பினூடு செய்றபடுவதே சாலச் சிறந்தது என்றறிந்து தமிழ்மணத்தில் தனது புரட்சிகர எழுத்துக்களால் புலிப்பாசிசத்தின் முகமூடியை கிழித்தெறிந்த புதிய மக்கள் ஜனநாயகப் புரட்சியை விரும்பி நிற்கும் ஒருவர் எம்மோடு இணைந்துள்ளமையானது எமக்கு புதிய பலத்தை தருகிறது.

ஆகவே நீங்களும் எம்மோடு இணைந்து கொள்வதன் மூலம் புலிப்பாசிசத்தை வேரொடு தறித்து புதிய மக்கள் ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்த தோள் கொடுங்கள். அதுமட்டுமல்லாது இந்த இணையத்தளத்தை பலருக்கும் அறிமுகப்படுத்துங்கள். அதன் மூலம் சமூக விடுதலைக்கு பங்களியுங்கள்..

நன்றி
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது