<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Sunday, June 26, 2005
  ஈழப்பிரச்சினைக்கான தீர்வு -2.

முழு உலகத்துக்குமானதும் கூட.

ஏற்கெனவே நாம் இது பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளோம். அனைவரும் புத்த மதத்தைத் தழுவுவது என்பதுதான் அதன் சாராம்சம். ஆனால் அதிலும் சில நடைமுறைச்சிக்கல்கள் இருப்பதை நாம் கண்டுள்ளோம். அதில் யாரோ (இது பதிவரின் பெயர்) சொன்னதுபோல் தமிழ்ப்பௌத்தன் சிங்களப்பௌத்தன் என்ற பிரச்சினை வர வாய்ப்புள்ளது. அதை நிவர்த்தி செய்வதும், மேலும் தனியே ஈழத்துக்கு மட்டுமன்றி, உலகம் முழுவதும் பல சிக்கல்களைத் தீர்க்கக்கூடியதுமான ஒரு தீர்வு பற்றி இப்போது பார்ப்போம்.

முதலில் இலங்கையை எடுத்துக்கொண்டால் ஏறத்தாள எழுபத்திரண்டு சதவீதம் பேர் சிங்களத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள். ஆனால் சிங்களத்தைப் பேசுபவர்கள் என்று பார்த்தால் ஏறத்தாள எண்பத்தைந்து சதவீதத்துக்கும் மேல். புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மட்டுமே சிங்களத்தைப் பேசாதவர்கள். ஏனைய பிரதேசங்களில் (தமிழர்கள் கூட) பெரும்பாலும் எல்லோருமே சிங்களம் பேசக்கூடியவர்கள். (வவுனியா மற்றும் மன்னாரில் குறிப்பிட்டளவானோர் சிங்களம் பேசத் தெரியாதவர்கள்) கொழும்பிலுள்ள தமிழர்களையோ முஸ்லீம்களையோ (முஸ்லீம்கள் தமிழர்களல்லர் என்பது என் கருத்து) எடுத்துக்கொண்டால், அவர்கள் சிங்களம் பேசுவார்கள். சொல்லப்போனால் தமிழைவிட சிங்களமே அவர்களின் அன்றாடப் பேச்சுமொழியாக இருக்கும்.

ஆக, மிகமிகப் பெரும்பான்மையோரால் பேசப்படும் மொழி சிங்களம். (சிங்களவர் யாரும் தமிழ் பேசுவதில்லை. பேச முயற்சிப்பதுமில்லை.) தமிழ் பேசுவோரும் தமிழ் பேசவேண்டிய கட்டாயத்திலிருப்போரும் மிகமிகச் சொற்பமே.

இலங்கையின் பிரச்சினை மொழிவாரியாகவே தொடங்கப்பட்டது. ஆனால் இடையில் அது திசை திரும்பி தமிழர்களுக்குத்தான் பிரச்சினை என்ற தொனியில் வந்துவிட்டது. (தமிழைத் தாய்மொழியாக்கொண்ட ஒரு சமூகம் தாம் தமிழர்கள் என்று அடையாளங்காணப்படுவதை வெறுத்துக் கொண்டது.) தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது முதல், தரப்படுத்தல் சட்டம் வரை, மொழி தான் பிரச்சினையாக இருந்தது. (ஆங்கிலத்திலே பரீட்சையெழுதியிருந்தாலும், சிங்களவர், தமிழர்கள் என்றால் அந்த இனத்துக்குரிய வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில்தான் பல்கலைக்கழகம் போக முடியும். (1971) ஆனால் இச் சட்டம் தமிழர்களுக்குப் பெரும் தீங்கு விளைவித்தது என்று சொல்வதெல்லாம் அவ்வளவு சரியல்ல. விகிதாசார அடிப்படையில்தான் இடங்கள் ஓதுக்கப்பட்டன.) சிங்களம் கற்றிருந்தால்தான் வேலை வாய்ப்பு என்ற பிரச்சினைகள் எழுந்ததெல்லாம் மொழியை வைத்துத்தானே ஒழிய வேறில்லை.

ஆகவே மொழிதான் இனப்பிரச்சினையின் தோற்றுவாய். பெரும்பான்மையோர் பேசும் மொழியை எல்லாரும் பேச முயல்வது இலகுவானதுதான். அப்படிப் பேசமுடியும்போது ஏராளமான சிக்கல்கள் குறைந்துவிடுகின்றன. நாடு முழுவதும் ஒரே மொழி பாவனையில் இருந்தால் நல்லதுதானே. குறிப்பாக அரசகரும மொழியாக ஒரே மொழியைப்பாவித்தால் எந்தச்சிக்கலும் தோன்ற வாய்ப்பில்லை. இந்த இனப்பிரச்சினையும் எழுந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இலங்கையில் அனைவரும் சிங்களத்தைப் பேசக் கற்றுக்கொள்வதுடன் அதை (மட்டுமே) அரச கரும மொழியாகப் பாவிப்பதும் இனப்பிரச்சினையைத் தீர்க்க எளிய வழி.

இந்தத் தீர்வை இலங்கையில் மட்டுமன்று, எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தலாம். எமக்கு மிக அண்மையில் இருக்கும் இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே இந்தியை அனைவரும் பயின்றாலே இந்தியாவின் பாதிச்சிக்கல்கள் குறைந்துபோய்விடும். அது பலமொழிகளைப் பேசும் நாடாக இருப்பதால் தான் அது இன்னும் உலகில் 'நம்பர் ஒண்' வல்லரசாக வர முடியவில்லை. இந்தியை அனைவரும் பேசத் தொடங்கினால் இந்தியா வல்லரசாக வருவதை யாராலும் தடுக்க முடியாது. நாடு முழுவதும் 68 மொழியை வைத்திருக்காமல் ஒரே மொழியைப்பாவிப்பதன் மூலம் நிர்வாக விரைவாக்கம் நடைபெறும். மேலும் மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்து வளங்களைப்பிரித்து முடக்க வேண்டிய தேவையில்லை. மாநிலத்துக்கு மாநிலம் சண்டைபோட வேண்டிய தேவையில்லை. மொழிவாரி மாநிலங்கள் தனி நாடாக மாறிவிடுமோ என்று இந்தியா அஞ்சத் தேவையில்லை. பல மொழிகளாகச் சிதறிக்கிடக்கும் இந்திய சினிமா ஒரே மொழிக்கு மாறுவதன் மூலம் உலகின் அதி உன்னத சினிமாத்தளமாக மாறும். பெரும் சந்தை வாய்ப்பைப் பெறும்.

எனவே இந்தியாவில் ஒரு மொழியே எல்லோரும் பாவிக்கும் நிலை வரவேண்டும். இதன்மூலம் தார்பூசும், பெயர் மாற்றும் போராட்டங்கள் நடைபெற வாய்ப்பில்லாமற் போகும். அனைவருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும். இதேபோல் இலங்கையிலும் சிங்களத்தை அனைவரும் பேசத் தொடங்குவதூடாக இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம். பல மொழிகளைக்கொண்ட இந்தியாவை விட ஒப்பீட்டளவில் இரு மொழிகளை மாத்திரமே கொண்ட இலங்கையில் இத்திட்டம் மிக இலகுவாக நடைமுறைப்படுத்தப்படலாம்.

இங்கே, ஒரே மொழியைப் பேசத்தொடங்குதல் என்று சொல்லியிருந்தோம். ஆனால் தனியே பேசத்தொடங்குதல் மட்டும் பூரண பலன் தராது. தமது பழைய தாய்மொழியைக் கைவிட வேண்டும். சிங்களம் பேசிக்கொண்டு அதே நேரம் தமிழையும் பேசிக்கொண்டிருந்தால் ஏதோ ஒரு வழியில் தாம் தமழர்கள் என்ற அடையாளத்தைப் பேணிக்கொண்டிருப்பார்கள். படிப்படியாக தம் பழைய தாய்மொழியை மறந்துவிட வேண்டும். இது ஆரம்பத்தில் கடினமாயிருந்தாலும் முயற்சித்தால் சாத்தியப்படக் கூடியதே. அதேபோல் இந்தி பேசத்தெரிந்தும் தமிழையும் வைத்துக்கொண்டிருந்தால் இது நிரந்தரத் தீர்வாகாது. இந்தி மட்டுமே தெரியும் என்ற நிலை எப்போது எல்லோருக்கும் வருகிறதோ, அன்றுதான் இத்திட்டத்தின் பூரண வெற்றி அடங்கியுள்ளது. அதுபோலவே இலங்கையிலும்.

குறிப்பாக தாய்மொழியில் வாசிக்கும் திறமையை இழக்கும் போதே எமது பாரம்பரியக் குணங்களும் மாறிவிடுகின்றன. பழைய நூல்களில் எமக்குச் சொல்லப்பட்ட எம் வரலாற்றையும் எம் வீரம், தீரம் போர் முறைகள், பெருமைகள் என்பவற்றையும் அறிந்துகொள்ளும் ஆற்றலை இழக்கிறோம். இதுதான் இன ஐக்கியமாதலின் முக்கிய அம்சம். அதன்பின், நாம் கடாரம் வென்றோம் என்றோ, நாம் தான் பூர்வ குடிகள் என்றோ, யாரும் சண்டை போட மாட்டோம். எல்லாம் மறந்து ஜோதியில் ஐக்கியமாகி விடுவோம்.

இந்தியாவிலும் இந்தி மட்டுமே அனைவருக்கும் தெரியும் என்ற நிலைவரும் போது, அந்த மொழிமூலமான வரலாறே அனைவருக்கும் போதிக்கப்படும். ஆதலால், திராவிடர்தான் மூத்தகுடியென்றோ, ஆரியர் ஏதோ கால்வாய் வழி வந்தவரென்றோ, தமிழர் இமயம் வென்றவரென்றோ, சரஸ்வதி ஆற்றுப்படுக்கை என்பதெல்லாம் பொய்யென்றோ யாரும் ஒப்பாரி வைக்க முடியாது. அனைவரும் ஒரே கொள்கையுடனும், ஒரே வரலாற்றறிவுடனும் இருப்பர். வீண் சண்டைகள் வராது. மிகுதி மொழிகளெல்லாம் செத்த மொழிகள் என்ற இலக்கணத்துள் அடைக்கப்பட்டுவிடுமாகையால் அதன் இலக்கியம், வரலாறுகள் கூட யாரும் படிக்கப்போவதில்லை. (சமஸ்கிருதம் மட்டும் எப்போதும் வாழும்).

ஆனாலும் இதிலும் சிக்கல் இருக்கிறது. உதாரணமாக ஈழத்தமிழனான நான் சிங்களத்தில் எழுதும் ஒரு பதிவை, இந்தியர்கள் படிக்கமுடியாது. இப்படி நாட்டுக்குள் ஒரு மொழியைக் கொண்டு வருவதால் நாட்டுக்குள் மட்டுமே பிரச்சினைகள் இல்லாமல் போகும். ஆனால் பிராந்தியங்களில் சிக்கல்கள் இருந்துகொண்டேயிருக்கும். நாடுகளுக்கிடையில் சண்டைகள் இருக்கும். ஆகவே உலகம் முழுவதும் பொதுப்படையாக ஒரே மொழியை ஏற்றுக்கொள்ளுதல் மிகச்சிறந்த நிவாரணம். இப்போதைய நிலையில் ஆங்கிலம் அந்தப்பாத்திரத்தை வகிக்கலாம். ஆங்கிலம் மட்டுமே அனைவருக்கும் தெரிந்திருக்கும் பட்சத்தில் மிகச்சுலபமாக நிறையச் சிக்கல்களைத் தீர்க்கலாம். என்ன ஒரு சிக்கலென்றால், நாம் ஏற்கெனவே இத்தளத்தில் தமிழில் எழுதிய எம் தத்துவங்களையும் சிந்தனைகளையும் மீண்டும் எழுதவேண்டி வரும். அதுமட்டுந்தான் இப்போதைய தமிழர்களின் இழப்பு. அவ்வளவுதான்.

இதுபற்றி நிறைய எழுத ஆவல். ஆனால் ஏற்கெனவே கட்டுரை நீண்டுவிட்டதால் இன்னொருமுறை இதை வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
இக்கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை எதிர்பார்க்கிறேன். இப்போதைக்குத் தமிழிலேயே எழுதுங்கள்.

நன்றி.
பாசமுடன்,
-குட்டான்- PhD,MRCP,MRCS,Dipl.Ed,Dipl.Scl.
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
எழுதிக்கொள்வது: குட்டான்.

பரிசோதனை ஒன்று.
குட்டான்.


21.15 26.6.2005
 
This comment has been removed by a blog administrator.
 
எழுதிக்கொள்வது: சரஸ்வதி ,BA Hons,PhD

தீர்வை இலங்கையில் மட்டுமன்று, எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தலாம்.

22.13 26.6.2005
 
எழுதிக்கொள்வது: பில்தான்

ஒரே மொழி பாவனையில் இருந்தால் நல்லதுதானே?

22.16 26.6.2005
 
எழுதிக்கொள்வது: குட்டான்- PhD,MRCP,MRCS,Dipl.Ed,Dipl.Scl.

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கு நன்றி




23.24 26.6.2005
 
இப்படி இராயகரனின் புத்தகத்திலிருந்து பத்திகள் எடுத்துப்போடுவதூடாக யார் இவ்வளவு நாளும் பெயர் மாறாட்டம் செய்பவர்கள் என்பது தெளி;ந்து விட்டது. இதே பின்னூட்டத்தை பெடியன்களின் பெயரில் ஸ்ரீரங்கனின் பதிவில் போட்டதூடக டோண்டு போன்றவர்களின் பெயரில் பின்னூட்டமிட்ட நபர்கள் யாரென்று நீங்களே காட்டி விட்டீர்கள்.
நன்றி
இவ்வளவு சீக்கிரம் நீங்கள் வெளிவருவீர்களென்று நாம் நம்பவில்லை. பெரிய ஜனநாயகம் கதைக்கும் நீங்கள் செய்வது இந்த இழிசெயலைத்தானா?
-உம்மாண்டி-
 
எழுதிக்கொள்வது: test


பொடியளே
நீங்களே எல்லாருக்கும் அள்ளி வைச்சுப்போட்டு,உப்பிடி ரீல் விடுவதில் கெட்டிக்காரர்ரப்பா!அவனுக்கு எச்சரிக்கை,இவனுக்கு எச்சரிக்கை.சிங்களம் தமிழரிண்ட பிரச்சினைக்குத் தீர்வு.புத்தம் கச்சையாமே.எண்டெல்லாம் சூப்பராய் அவிட்டுப்போட்டு... ஐயோ நாங்க விடேல்லப் பின்னூட்முங்க எண்டு புலம்பிக்கிட்டு இருக்கிறீங்கள்.உங்கட காரியத்தை இதோட நிறுத்துங்கப்பா.சும்மா கண்டவன் பெயரில பின்னூட்டமிட்டுப்போட்டு,அவங்களையே வம்புக்கிழுத்து என்னதான் பண்ணப்போறீங்க?எதையுமே வௌஸ்தைகெட்டமாதிரியல்ல எழுதுகிட்டிருக்கீங்க.நீங்கெல்லாம் யாரப்பா?கிந்தி படி,இங்கிலீசுப்படின்னுவேறு வம்பு பண்ணுங்கிறீங்களே பையன்களே.நீங்க எல்லாரும் புலிகளிண்ட பினாமீங்க.அவங்கட ஆக்கள்தான்.சும்மா வேவு பார்க்கிறீங்களாக்கும்.ஆரூடா புலியை எதிர்க்கிறான்னு வலைவிரிச்சுக்கிட்டிருக்கீங்க.பட்டதும் அப்புடியே அமுக்கிறத்துக்கு.ரொம்பத்தான் ரீலுவோய் ஒங்கட வேலை.நான் நெனைக்கிறேன் நீங்களெல்லாரும்(ஈழநாதன்,வசந்தன்,கொழுவி...)சேர்ந்து திட்டம்போட்டு இப்படி வந்திருக்கீங்க.ஒங்களுக்குள்ள பேசிப்றைஞ்சு எல்லாம் செஞ்சிகிட்டிருக்கீங்க.கொழுவி தன்ர பதிவைப்பற்றி மூச்சே விடேல்ல.இதிலிருந்து ஒங்கட கூட்டுத் தெரியுது.மத்தவங்களல்ல பாரத்தைப் போட்டுக் கடாசி விட்டு நீங்க நல்ல பிள்ளைவேடம் போடுறது தெரியுது சாமி.


4.10 28.6.2005
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது