புலி வலையில் சிக்காத இந்தியா
பார்த்தீர்களா இந்தப் புலிகள் செய்த பாசிசத்தை.. தமது அதிகாரத்தின் மூலம் அப்பாவி மக்களை மட்டுமே அடிபணிய வைத்த புலிகள் இப்போ கூகுள் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் என தமது கொடுங்கரங்களை பரப்பி வருகிறார்கள் என புதிய ஜனநாயகப் புரட்சியை விரும்பும் எம்போன்றவர்கள் தலையில் அடிக்காத குறையாக கத்துகிறோம். அதனைச் செவிமடுக்காத சிலர் நாளை தம்மையும் புலிக் கரங்கள் பற்றும் போதே உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.
சுவிற்சர்லாந்து யப்பான் நியுசிலாந்து முதலான நாடுகள் சிறிலங்காவின் மனித உரிமைகளை தொடர்பான விவாதத்தில் சிறிலங்காவை கண்டனம் செய்துள்ளன. உண்மையில் ஜனநாயக விரோத சக்திகளான புலிகள் இந்த நாடுகளை மிரட்டி அடிபணிய வைத்து இவ்வாறான கண்டனத்தை தெரிவிக்க வைத்துள்ளன. புலிகளைப் போலவே முதலாளித்துவ சக்திகளான இந்த அரசுகள் முதுகெலும்பில்லாமல் புலிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து போயுள்ளன. அவ்வாறு பணியாவிடில் தமது நாடுகளிலும் புலிகள் பாசிச நடவடிக்கைகளை தொடங்கி விடுவார்கள் என்ற பயமே இதற்கு காரணம்.
ஏனெனில் சிறிலங்காவில் அரச படைகள் மனித உரிமைகளை மிக கவனமாக பேணுகிற இந்த வேளையில் இவ்வாறான ஒரு பொய்க் குற்றச்சாட்டை இந்த நாடுகள் சொல்வதன் மூலம் இதன் பின்னணியில் புலிகள் இருப்பது புலனாகிறதல்லவா.
உண்மையில் மனித உரிமைகளை மீறுவது யார் தெரியுமா
புலிகள் தான். நாம் மக்களை ஒன்று திரட்டி புதிய ஜனநாயகப் புரட்சியொன்றினை உருவாக்கும் வரை புலிகளின் இந்த பாசிச நடவடிக்கைகள் தொடரத்தான் போகின்றன.
தம்மிடமுள்ள அதி நவீன விமானங்கள் மூலம் மக்களை கொலை செய்து விட்டு பழியினை அரச படைகள் மீது இலகுவாக சுமத்தி விடுகின்றனர் இந்தப் புலிகள். செஞ்சொலையில் சிறுவர்கள் மீது குண்டு வீசித் தாக்கியது புலிகளின் விமானங்கள் தான் என்ற செய்தி இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளது. இன்னும் இன்னும் இவ்வாறு பல செய்திகள் புலிகள் மாற்றுக் கருத்துக்களை அனுமதிக்காத வரை வெளியே வராமல்ப் போவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளதால்த்தான் நாம் உங்கள் காலைக் கையைப் பிடித்துக் கெஞ்சுகிறோம். உடனடியாகவே புதிய ஜனநாயகப் புரட்சியொன்றினைத் தொடங்குமாறு.
வாகரையில் மக்களைக் கொன்றது யார்..
புலிகள் தங்கள் உறுப்பினர்கள் பலருக்கு சிங்களம் படிப்பித்து அவர்களை இராணுவத்தில் இணைத்திருக்கிறார்கள். அவர்களும் சிறிலங்கா அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்கிறார்கள். அது மட்டுமல்ல அவ்வப்போது உயிரோடு பிடிபடுவதும் இவர்களே.
ஆக புனிதமான ஒரு இராணுவத்தை வேண்டுமென்றே இவர்கள் களங்கம் செய்கிறார்கள்.
இந்தப் புலிகளின் கைகளில் இப்போது சுவிஸ் முதலான நாடுகளும் விழுந்து விட்டமையானது புதிய மக்கள் ஜனநாயகப் புரட்சியை நாம் உடனடியாக ஆரம்பிக்காமல் விட்டதே.. இந்த ஜனநாயகப் புரட்சியை நாம் ஆரம்பிக்க தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் புலிகளின் பாசிச வலை உலகை இறுக்கும்.
ஆயினும் நமது அண்டை நாடான இந்தியா புலிகளின் இந்த மிரட்டல்களுக்கு அடியபணியவில்லை என்பது மக்கள் புரட்சியை வேண்டிநிற்கும் எமது மனங்களை மகிழ்வுறச் செய்கிறது.
மனித உரிமைகளை சிறிலங்கா அரசு மீறுகிறது என பொய்யாக புனையப்பட்ட கதைகளை இந்தியா ஒரு போதும் நம்பத் தயாராக இல்லை. இந்தியா உண்மைகளை புரிந்து கொண்டிருக்கிறது எனபதற்கு இதுவே சாட்சி.
உண்மையில் நாம் விரும்பி நிற்கின்ற புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க இந்தியாவே நமது உற்ற தோழன். சிறிலங்கா அரசு மனித உரிமைகளை மீறி தமிழரை அடியோடு அழிக்க நினைக்கிறது என்ற புனைக் கதைகளை நம்பாது இந்தியா சிறிலங்காவின் பக்கமிருந்தமையானது இறைமையுள்ள நாடென்ற வகையில் இலங்கைக்கு வர விருந்த மரியாதைக் குறைவை போக்க உதவியிருக்கிறது. அது போல பபுலிகளின் பாசிச வேர்கள் எங்கெனும் பரவி விட முடியாத படி செய்து மக்களைக் கொண்டு ஜனநாயகப் புரட்சியை உண்டாக்குகின்ற நம்பிக்கையைத் தருகிறது.
ஆகவே தோழர்களே.. புதிய ஜனநாயகப் புரட்சிக்கு தலைமை தாங்குகின்ற அனைத்துத் தகமைகளையும் காலம் எமது தலைவன் கருணாவிற்கு வழங்கியிருக்கிறது. இதை இந்தியாவும் உணர்ந்து கருணாவை தத்தெடுத்து வளர்த்து மக்கள் புரட்சி வெற்றியடைய வைக்க வேண்டும்.
இறுதியாக நண்பர் சிறீரங்கன் சொன்னதை இங்கே நினைவு கூருவோம்.
பாசிசம் எந்து ரூபத்தில் வந்தாலும் அதைக் கைகட்டிப் பார்த்திருக்க முடியாது.தமிழ்பேசும் மக்கள்கூட்டத்தில் மிகவும் கேவலமான-இழி நிலையுடைய உலகப் பார்வை நிலவுகிறது.இது தனக்கெதிரான எந்தக் கருத்தையும் சகிக்க முடியாத தளத்தில் தனது அராஜக மேலாண்மையை நிலைநாட்ட முனைகிறது.அரசியல் மேலாண்மை பெறத் துடிக்குமொரு வர்க்கம் தனது படுகேவலமான அரசியல் சூழ்ச்சிகளுக்காக மாற்றுக் கருத்துகளுக்குச் சாவுமணியடிப்பதும்,அதைத்தொடர்ந்து தாம் சொல்லுவது மட்டுமே தமிழ் பேசும் மக்களின் நலன்பால் அக்கறையுடையதாகவும் மக்கள் மத்தியில் கருத்துக்கட்ட முனைகிறது.