<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Friday, June 23, 2006
  கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்.

பாசிசப்புலிகளின் மற்றுமொரு காட்டுமிராண்டி நடவடிக்கை.

கூகிள் ஏர்த் எனப்படும் மென்பொருள் பற்றி நீங்கள் அறிவீர்கள். உலகில் நாம் விரும்புமிடத்தைத் துல்லியமாகப் பார்க்கும்படி அதில் வசதியுள்ளது. வாகனங்கள், வீடுகள், மரங்கள்கூடத் தெளிவாகத் தெரியும்படி பல பகுதிகள் துல்லியமாகக் காண்பிக்கப்படுகின்றன.

இம்மென்பொருள் கொண்டு இலங்கைத் தீவையும் நாம் பார்க்கலாம். அதிக பாதுகாப்பு கொடுக்கப்படும் பல இடங்களை எந்தவிதத் தடையுமின்றி மிகத் தெளிவாக நாம் காணலாம். கொழும்பின் முக்கிய கட்டடங்கள், கொழும்புத்துறைமுகம், இராணுவ நிலைகள், வான்படை முகாம், திருகோணமலைத் துறைமுகம் என்பன போன்று அதியுயர் இரகசிய இடங்களைக்கூட மிகமிகத் தெளிவாக நாம் பார்த்துக்கொள்ளலாம்.

யாழ்ப்பாணப்பக்கம் போனீர்களென்றால் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானப்படைத்தளம் முதற்கொண்டு அனைத்தும் மிகத்தெளிவாகத் தெரிகின்றன. அதாவது அரசின் இரகசிய இடங்களைக்கூட கூகிள் தணிக்கை செய்யவில்லை. மிகத்தெளிவாக அனைத்தையும் பார்க்கக்கூடியதாக உள்ளது.

ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியைப் பார்ப்போம் என்று நீங்கள் யாராவது முயன்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளும் வவுனியா மாவட்டத்தின் சிலபகுதிகளும் காட்டப்படுகின்றன. ஆனால் வன்னியின் புதுக்குடியிருப்பை உங்களால் பார்க்க முடியாது. சுண்டிக்குளம், வெத்திலைக்கேணி, கட்டைக்காடு உட்பட முக்கிய கடற்கரைப்பகுதியை உங்களால் பார்க்க முடியாது. (முக்கியமான கடற்புலிகளின் பகுதிகள்). விசுவமடு உட்பட பல இடங்களை உங்களால் பார்க்க முடியாது. கிளிநொச்சி நகர்ப்பகுதியை மையமாக வைத்து பெரும்பகுதியை உங்களால் பார்க்க முடியாது. இத்தாவில், முகமாலை, கிளாலி, நாகர்கோவில் என்று புலிகளின் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகள் உள்ள எந்தப்பகுதியையும் உங்களால் பார்க்க முடியாது.

ஆம். மேற்கண்ட அனைத்துப்பகுதிகளும் கூகிள் ஏர்த் மென்பொருளில் மறைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் யாழ்.கோட்டைப் பகுதியை அண்டிய சிறுபகுதி மட்டும் மறைக்கப்பட்டுள்ளது. (ஆனால் காங்கேசன்துறை, பலாலி, காரைநகர் போன்றன மிகத்தெளிவாகக் காட்டப்படுகின்றன). அதைவிட தென்மராட்சியில் இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளும் மறைக்கப்பட்டுள்ளன. அவைகூட புலிகளின் பகுதிகளை மறைக்க முற்பட்ட வேளையில் சேர்ந்து மறைக்கப்பட்டவையே என்று கருத இடமுண்டு.

இதன்மூலம் புலிகள் கூகிள் ஏர்த் மெல்பொருள் வல்லுநர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டனர் என்று நம்பத் தோன்றுகிறது. பாசிசப்புலிகள் உலகில் எவரையும் விட்டுவைப்பதில்லை. எங்கும் தங்கள் கைவரிசையைக் காட்டத் தவறுவதில்லை. அரசபடையின் அதிமுக்கியமான இடங்களே எந்த மறைப்புமின்றி துல்லியமாகக் காட்டப்படும்போது புலிகளின் தளங்கள், நிலைகள், கடற்கரைகள் மட்டும் மறைக்கப்படுவதன் மர்மம் என்ன?
இதைப்பற்றி கூகிள் நிர்வாகம் எதுவும் சொல்லப்போவதில்லை. அவர்களை வெருட்டி வைத்துள்ளனர் நாசகாரிகள். ஜனநாயக வாதிகளான நாங்கள்தான் இவற்றையெதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். மக்களை அணிதிரட்டி மக்கள் புரட்சிமூலம் கூகிள் ஏர்த்தைக் காப்பாற்ற வேண்டும். புதிய ஜனநாயகப் புரட்சிமூலம் பாசிசத்தை ஒழிக்க வேண்டும். இதற்கான செயற்றிட்டம் எம்மிடமுண்டு.

எம்மோடு தோள்கொடுக்க நினைக்கும் மக்கள் போராளிகள், புரட்சியாளர்கள், ஜனநாயகக் காவலர்கள் அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.
"புதியதோர் உலகம் செய்வோம் -கெட்ட
போரிடும் புலிகளை வேரொடு சாய்ப்போம்"

(கூகிள் ஏர்த் பற்றிய எமது குறிப்பில் நம்பிக்கையில்லாதவர்கள் தயவுசெய்து நாம் சொன்ன இடங்களைத் தேடிப்பாருங்கள். அதன்பின் எம்மோடு போராட்டத்தில் இணையுங்கள்.)

-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
//இதன்மூலம் புலிகள் கூகிள் ஏர்த் மெல்பொருள் வல்லுநர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டனர் என்று நம்பத் தோன்றுகிறது//

உங்க அறியாமயை நினைத்துச் சிரிக்கிறேன். கூகுள் எர்த்தில் இந்தியாவின் சென்னை,பெங்களூர் நன்றாகத் தெரியும். மதுரை நகர் தெரியாது. அதற்காக மதுரை மக்கள் கூகுளை மிரட்டி விட்டனர் என்று செல்ல முடியுமா?

கூகுள் தனி செயற்கைக் கோள்கள் மூலம் மேகமூட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் படம் எடுக்கிறது.

உங்கள் பகுதி நன்றாகத் தெரியவில்லையென்றால் கூகுளில் முறையிடுங்கள்.

ஏற்கனவே முறையீடு செய்திருந்தால் என்ன பதில் கிடைத்தது?

கூகுள் சில விசயங்களில் அமெரிக்கா அரசு சென்னதையே கேட்டவில்லை. அவர்களுக்குப் புலிகள் எம்மாத்திரம்.

//அதன்பின் எம்மோடு போராட்டத்தில் இணையுங்கள்//

நீங்கள் எப்போது கேள்வி கேட்டு பதில் மறுக்கப்பட்டது? ஏதாவது நியாயமாகக் கேட்டு மறுக்கப் பட்டால் போராட்டம் நடத்தலாம். ஒரு விசயத்தை போராட்டத்திலேயே ஆரம்பிக்கலாமா?

வலையில் எழுத வந்துட்டீங்க நீங்க இன்னும் சின்னப் குழந்தைகளாகவே இருக்கீங்க.
 
எழுதிக்கொள்வது: vajra sankar

இதன் மூலம் கூகிள் எர்த் இன்னும் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அக்கரை எடுக்கவில்லை (பல மற்ற நாட்டுப் பகுதிகள் போல்) என்பது உண்மை நிலவரம் என்பதை கருத்தில் கொள்க. (புலிகளுக்கு வேறு வேலையே இல்லையா?)

15.17 23.6.2006
 
இவ்வளவு காமெடி செய்வீர்கள் என்று நினைத்துகூட பார்க்கவில்லை...
 
எழுதிக்கொள்வது: சதயம்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிற மாதிரி இருக்கிறது உங்கள் பார்வை....

18.18 23.6.2006
 
இந்த விதயத்துக்கு Israel தான் புலிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றதென்று சோ கூறியுள்ளார்.
 
எழுதிக்கொள்வது: theevu

பொடியன்களுக்கு இப்படியான சீரியசான பின்னூட்டம் தேவையா?நையாண்டிக்கு ஒரு அளவே இல்லையா?:)

கூகிள் ஏர்த் மூலம் புலிகளின் முன்னரங்க நிலைகளை உளவு பார்க்க முயன்ற உங்களுக்கு நாம் ஏன் மரண தண்டனை விதிக்ககூடாது என்பதை இன்னமும் ஒரு சில தினங்களுக்குள் தன்னிலை விளக்கமாக கூறமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

15.13 23.6.2006
 
எழுதிக்கொள்வது: kana

சரியான புலிக்காச்சல்! பெடியனுக்கு வயிற்றால போகாவிட்டாலும்ää புலிகள் தான் சீமெந்து வைத்து அடைச்சவங்கள் என்று கதையைக் கட்டுமப்பு!!

அது சரி! புலிகளின் ஏரியாவை நீர் ஏன் பாக்கின்றீர்? ஒற்றுக் கொடுக்கவோ!!

7.34 23.6.2006
 
புலிகளின் விமான ஓடுபாதை தெரிகிறதே! இரணைமடுக்குளத்திற்கு சிறிது கிழக்காகப் பார்க்கவும்.
உங்களின் எழுத்து புலம்பெயர் சிங்களவர்களின் நகைப்புக்கிடமான புலி-எதிர்ப்புக் குற்றச்சாட்டுகள் போல இருக்கிறது.
கூகிள்ஏர்த் இற்கு ஒர் சிங்களவர் வேலை செய்கிறார் என்பது கூகிஏர்த் ஆரம்பித்த நாட்களில் எனது கணனிதொழில் நண்பன் சொல்லக்கேட்டது!
 
Joke of the millennium- super!!!!!
 
எழுதிக்கொள்வது: kulakaddan

:))


17.37 23.6.2006
 
எங்கே சிறீரங்கனை காணவில்லை?
 
இது ஒரு சில தமிழ்நாட்டு தலைவர்கள் மூலம் செய்யப்பட்ட சதி என்றும்
இது சம்பந்தப்பட்ட திடுக்கிடும் ஆதாரங்கள் தன்னிடம் இருக்குது என்று
சுப்பிரமணிய சாமி மதுரையில் தெரிவித்து இருக்கிறார்.
 
ராபின் ஹுட்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வஜ்ரா சங்கர்,
அவர்கள் அக்கறை (ரை வராது) எடுக்கவில்லையென்பது பம்மாத்துக்கதை. புலிகளுக்கு வேறு வேலையே இல்லையா என்கறீர்கள். வேறு என்னதான் வேலையுள்ளது சொல்லுங்கள் பார்ப்போம்.

செந்தழல் ரவி,
இந்தப்பதிவு காமெடிப் பதிவாகத் தெரிகிறதா?
உலகமே எதிர்நோக்கும் ஓர் அபாயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
 
Google is not providing Live images. It has full support of Tokyo. Those pictures near my home were taken somewhere before 6 months. Because some buildings were newly built up in those empty area. In google earth they support full details view only on major metropolis. You cant even see the neighbour city.

I think They are using image processing softwares to give virtual reality. It is impossible to provide life feeding of whole earth as you are seeing in google.

-----

Main point is...yesterday afternoon all news channel broadcasted there were a bomb blasted in colombo by Tigers...But soon after they found it was a Sonic boom caused by planes. This is a simple example of blaming Tigers for whatever that are happen in Srilanka.
 
சதயம்,
சோ.ஆதரவாளி,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தீவு மற்றும் கானா,
உங்களுக்குப் பிரச்சினை விளங்கவில்லை.
நாங்கள் இடங்களைப் பாரக்க வேண்டும். கிளிநொச்சியைப் பார்க்க வேண்டும். புதுக்குடியிருப்பையும் விசுவமடுவையும் பார்க்க வேண்டும். வெத்திலைக்கேணி கட்டைக்காட்டைப் பார்க்க வேணும். அதுக்கு என்ன வழி?
ஏன் அவைகள் புலிகளால் கூகிள் ஏர்த்தில் தடுக்கப்படுகின்றன என்பதே எம் கேள்வி.

பாருங்கள். வன்னியில் பெருமளவு நிலமும் மக்களும் உலகின் கண்களுக்குப் புலிகளால் மறைக்கப்படுகின்றன. இது ஜனநாயக மீறல். நான் பார்க்க விரும்பும் நிலப்பரப்பைத் தடுக்க இவர்கள் யார்? இவர்களுக்கு யாரிந்த அதிகாரத்தைக் கொடுத்தது? எமது குரல் ஒட்டுமொத்த மக்களுக்கானது. உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்படும் பிரதேச மக்களுக்கானது.
 
பொடியன்கள் கூகிள் ஏர்த்தின் இலவச வடிவத்துக்கே இந்த துள்ளுத்துள்ளுகிறார்கள் என்றால் பணம் கொடுத்து வாங்கும் சேவையைப் பார்த்தால் என்ன செய்வார்கள் என்று யோசித்தால் சிரிப்புத்தான் வருகிறது!
ஓரு வேளை 'Blogger'க்கு தொழில்நுட்பக்கோளாறு வந்தால் அதுவும் புலிவேலை என்பார்கள்.
நல்லகாலம் நானும் மாற்றுக்கருத்து அது இது என்று இவர்கள் பக்கம் போகாமலிருந்தேன்!

இது உண்மை என்றே வைத்துக்கொண்டால் புலிகளை ஆதரிக்க இது இன்னுமொரு பலமான காரணம் கிடைதுள்ளது!!!!
 
podiyan!
R u born brilliant? wow!

enga uur kuda therivathillai...nanRaaka mirattivaiththuLLeen...:)

janamayaka'viyaathi' nu sollikareengalaa....gr8
 
This comment has been removed by a blog administrator.
 
"காய்ச்சல் வந்து உளறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அதற்காக இந்த அளவுக்கா?"

போராட்டம் என்பதன் வரையறையையே கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறீர்கள். ப்ளாக்கர் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக இப்படியா வயிற்றுப்போக்குச் சமாச்சாரங்களையெல்லாம் எழுதுவது. புலிகள் பற்றிய பயமிருந்தால் இரண்டு செருப்புகளை தலையில் வைத்துப் படுக்கவும்

-பெருசு
 
பெடியன்கள், நீங்கள் சொல்வது உண்மையாயிருந்தால் (?), நமது பெடியங்கள் செய்தது சரிதான்.
 
டோய் டோய்
காணுமடா பொடியள்.

சிறிரங்கனுக்காக நீங்கள் எழுதின 'மிளகாய் அரைப்பு' எண்ட கவிதைய இப்ப ஒருக்கா நீங்களே வாசிச்சுப் பாருங்கோ. அப்பிடியே உங்களுக்குத்தான் பொருந்திப்போகுது.

கொஞ்சக்காலம் உங்கட தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக்கிடந்தம்.
 
எழுதிக்கொள்வது: இவன்

டோய் வடிவேல் சொல்லுற மாதிரி சின்னப் புள்ளத்தனமாவே இருக்கிறீங்களேடா.
//
எம்மோடு தோள்கொடுக்க நினைக்கும் மக்கள் போராளிகள், புரட்சியாளர்கள், ஜனநாயகக் காவலர்கள் அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.
"புதியதோர் உலகம் செய்வோம் -கெட்ட
போரிடும் புலிகளை வேரொடு சாய்ப்போம்"//

காமடி தாங்கமுடியல

9.22 25.6.2006
 
பதிவை வாசித்த அனைவருக்கும் நன்றி.
உங்களுக்கெல்லாம் சிரிப்பாக் கிடக்கு.
எங்களுக்கோ இநத உலகம் பாசிஸ்டுகளின் கையில் சிக்கி படப்போகும் பாட்டை நினைத்து வேதனையாயிருக்கிறது.

உங்கள்தளம் வேறு, எங்கள் தளம் வேறு.
 
வணக்கம். நீங்கள் கூறியதுபோன்று வி.புகளின் கட்டுப்பாட்டுப்பகுதி சில காட்டப்படாதது உண்மைதான். அதற்காக உலதக்கிலேயே தனித்துவம்கொண்டதொரு இணையத்தை (அமைப்பை) விடுதலைப்புலிகளிடம் விலைபோனதாக கூறமுடியாது. அப்படி விபு.களிடம் விலைபோயிருந்தால் நிச்சயமாக இலங்கைஅரசாங்கத்திடமும் விலைபோயிருக்கும். ஏனென்றால் அரசாங்கம் முன்னெடுக்கும் பரப்புரைகள் அப்படி. உண்மையைக்கூறப்போனால் அரசாங்கத்தால் வெளியிடப்புடும் முக்கிய சில நகரங்களே குகிள்ஏத்தில் இணைக்கப்பட்டுக்கொள்ளப்படும். தனிப்பட்ட அமைப்பின் செல்வாக்கிற்கு இடமில்லை.
 
உங்க அறியாமயை நினைத்துச் சிரிக்கிறேன், நீங்க இன்னும் சின்னப் குழந்தைகளாகவே இருக்கீங்க. இவ்வளவு காமெடி செய்வீர்கள் என்று நினைத்துகூட பார்க்கவில்லை,
Joke of the millennium- super!!!!!
சமாச்சாரங்களையெல்லாம் எழுதுவது. புலிகள் பற்றிய பயமிருந்தால் இரண்டு செருப்புகளை தலையில் வைத்துப் படுக்கவும்,
காமடி தாங்கமுடியல
 
Please write to Google or post your comments in bbs.keyhole.com, to view your missing areas.

Google earth is an international, multi-billion dollar company, and it has nothing against Tigers. If it all, there could be some TamilEelam-enthusiasts might be working out there.

It seems you are exaggerating..
 
இறுதியாக கிடைத்த தகவலின்படி இனி சம்பூரை வடிவாக கூகிளில் பார்க்கலாமாம்.:)
 
ஐயோ ஐயோ குறும்புக்காரப் பையன்
 
என்ற கூட வாறியளா? பெடியள் கிளிநொச்சியில வடிவான சாப்பாடு வாங்கி தந்து எல்லா இடத்தையும் சுத்தி காட்டி போட்டு வர தான்! கூகிள் எதுக்கு? பயந்து போனியளோ? அது தான் உலக புரட்சிக்கு கிளம்பிட்டா பயப்படலாமோ? நல்லா பகடி விடுறியள்! காலே துறைமுகத்தை கூகிளில் பாத்தீரா? அதுவும் புலிகள் கட்டுப்பாட்டு பகுதி தானோ? ச்ச்சீ வெக்கமா இல்ல உமக்கு?
 
புலி பிரதேசத்தை வேவு பார்க்க, இறையான்மை உள்ள இலங்கை அரசும், அதனை 'காக்க காக்க' அல்லும் பகலும் உழைக்கும் அதன் ஆதரவு அரசுகளும், இன்ன பிற சிங்கள உறவுகளும் கூட 'கூகுள் எர்த்' இணையத்தை தான் நம்பியுள்ளன என்ற தகவலுக்கு நன்றி!
 
எழுதிக்கொள்வது: Ranjan u r great

undefined

12.33 26.9.2006
 
எங்க வீட்டு மாடியில் காயப்போட்ட வடாம் கூடத்தான் தெரிவதில்லை.
 
எழுதிக்கொள்வது: soba

எழுதிக்கொள்வது:சோபா
இதை என்னவென்றுதன் சொல்வது
சிரிப்பா இருக்குது

10.10 26.9.2006
 
soba
ithai ennavenruthan solvathu
sirippa irukuthu
 
//எங்க வீட்டு மாடியில் காயப்போட்ட வடாம் கூடத்தான் தெரிவதில்லை.//

ஏவ் மாடியில காயப்போட்ட என் ஜட்டிய காணோமுனு தவிச்சிகிட்டு இருக்கேன். நீ என்னான வடாம காணோம் வத்தல கணோமுனு..
 
எழுதிக்கொள்வது: Eelap paiyan

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. ஆனால் உங்களுக்கு பித்துப் படித்துவிட்டது என்றே எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. நீங்கள் தமிழ்மக்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை உற்றுப் பார்க்க முயற்சித்துள்ளீர்கள். உங்களுக்கு ஒரு தெளிவான விசயம் தெரியுமா? எமது இலங்கைத் தீவினுடைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதேசங்களை எப்பவாவது அபிவிருத்தி செய்திருக்கின்றதா...அதனை கூகிள் ஏர்த்தில் பார்ப்பதற்கு. நீங்கள் எம்மை வளர முன்வரவில்லையே. ஆனால் எமது பிள்ளைகள் அதனை முறியடித்துவிட்டனர். இனியாவது இதனை உணர்ந்து தமிழ்த் தேசியத்திற்காக உழையுங்கள் சாகும் போது புண்ணியம் கிடைக்கும்.

15.21 27.9.2006
 
///இதன்மூலம் புலிகள் கூகிள் ஏர்த் மெல்பொருள் வல்லுநர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டனர் என்று நம்பத் தோன்றுகிறது.///


நல்ல கற்பனை வளம் நீங்கள் தமிழகத்தின் செயலலிதா சுப்ரமணியசாமி பேச்சை மிஞ்சிவிட்டீர்கள் போங்கள்.

//தங்கள் கைவரிசையை காட்டிவிட்டனர் என்று நம்பத் தோன்றுகிறது.//

நம்பத்தோன்றுகிறது!!! ஆனால் நீங்கள் நம்பவில்லை என்பதையே நீங்கள் சொல்கிறீர்கள்.
எதையாவது கற்பனை செய்து புலிகள் மீது பழிபோடும் நாசகார இலங்கை அரசுக்கு துணைபோகிறீர்கள்.
 
///இதன்மூலம் புலிகள் கூகிள் ஏர்த் மெல்பொருள் வல்லுநர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டனர் என்று நம்பத் தோன்றுகிறது.///


நல்ல கற்பனை வளம் நீங்கள் தமிழகத்தின் செயலலிதா சுப்ரமணியசாமி பேச்சை மிஞ்சிவிட்டீர்கள் போங்கள்.

//தங்கள் கைவரிசையை காட்டிவிட்டனர் என்று நம்பத் தோன்றுகிறது.//

நம்பத்தோன்றுகிறது!!! ஆனால் நீங்கள் நம்பவில்லை என்பதையே நீங்கள் சொல்கிறீர்கள்.
எதையாவது கற்பனை செய்து புலிகள் மீது பழிபோடும் நாசகார இலங்கை அரசுக்கு துணைபோகிறீர்கள்.
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது