<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Monday, November 13, 2006
  அமெரிக்காவிலும் கைவைத்து விட்டனர் புலிகள்

ஏற்கனவே "கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்" என்று விவரமான கட்டுரையொன்றை எழுதியிருந்தோம்.
பாசிசப்புலிகளின் உலகளாவிய அடாவடிகளை இனங்கண்டு அவற்றை வேரோடு களைய அனைவரையும் அணிதிரளும் வண்ணம் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
அதை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதற்கப்பால் எம்மை நையாண்டி வேறு செய்தார்கள்.
இப்போது பார்த்தீர்களா புலிகளின் வேலையை?
இப்போதாவது நம்புகிறீர்களா நாம் முன்பு சொன்னதை?

அப்படி என்னதான் செய்தார்கள் புலிகள்?

அமெரிக்காவில் அண்மையில் நடந்த தேர்தலில் தமது கைவரிசையைக் காட்டிவிட்டார்கள்.

அங்கு நடந்த பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் புலிகளின் தீவிர ஆதரவாளர் டேனி டேவிஸ் 87 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

புலிகளின் பணத்தில் வன்னி சென்று அங்கு புலிகளைச் சந்தித்துத் திரும்பி வந்தவர் இவர். இவரின் பயங்கரவாதிகளுடனான தொடர்பு எல்லா ஊடகங்களிலும் பிரச்சினையாக்கப்பட்டது. இந்தத் தேர்தலிலும் இவரை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டது. எல்லா இடத்திலும் இவரின் பயங்கரவாதத் தொடர்பு பற்றி தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது. புலிகளுடனான இவரின் தொடர்பைக் கருத்திற்கொண்டே இவருக்கெதிரான தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அவ்வகையில் இவருக்குப் படுதோல்வி ஏற்படுமென்று நினைத்திருந்தவேளை, மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் இந்த புலி ஆதரவாளர்.

இது எப்படிச் சாத்தியம்?
இங்குத்தான் புலிகளின் கைவரிசை காட்டப்பட்டுள்ளது. தேர்தலில் மோசடி செய்து அவரை வெல்ல வைத்துள்ளனர் புலிகள். கொஞ்சநஞ்ச வாக்கு வித்தியாச வெற்றியல்ல, 87 சதவீத வாக்குகளைப்பெற்று மாபெரும் வெற்றி.

தங்களுக்குத் தெரிந்த அனைத்து அடாவடி முறைகளையும் பாவித்து இவரை வெற்றிபெற வைத்த புலிகளின் கைங்கர்யம் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு மட்டுமன்றி உலகத்துக்கே ஆபத்து. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இப்போது அமெரிக்காவையே கடித்துவிட்டனர் பாசிசப்புலிகள்.

இதை நான் மட்டும் சொல்லவில்லை. 'நெருப்பு" என்கிற சர்வதேசப் புகழ்பெற்ற இணையத்தளமும் சொல்கிறது.
அதைச் சிலர் நக்கலடிக்கிறார்கள். விசயம் தெரியாத சின்னப்பொடியங்கள்.
நாம் கூகிள் விவகாரத்தில் அன்றே சொன்னதை இப்போது வேறும் சிலர் புரியத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் வாசகர்களே,
இப்பயங்கரத்தை நாம் எதிர்கொள்ள வேண்டாமா?
ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியபடி புலிகளின் கை உலகம் முழுவதும் நீள்கிறது. உடனடியாக இதைத் தறிக்க வேண்டும். இதற்கு எமக்குத் தோள்கொடுங்கள். மக்களைத் திரட்டி 'புதிய ஜனநாயகப் புரட்சி'க்கு (இது என்ன சாமான் எண்டு தெரியாத ஆக்கள் குழம்ப வேண்டாம்.) வித்திடுவதன் மூலம் பாசிசப் புலிகளின் ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம்.

புலிகளின் இப்படியான தகிடுதத்தங்களை நன்குணர்ந்த ஒருவர் எமக்குப் பக்கத்துணையாகக் கிடைத்திருக்கிறார். புலிகளை முறியடிக்க அவரால் மட்டுமே முடியும். தமிழரை மட்டுமன்றி அமெரிக்காவை - ஏன் உலகத்தையே பயங்கரவாதத்தின் பிடியினின்று காப்பாற்ற காலம் எமக்குத் தந்த தலைவன் கருணாவின் துணையோடு எமது இயக்கம் இந்தப் பாசிசப் புலிகளை முறியடிக்கப் புறப்படுகிறது.

"தூரம் அதிகமில்லை -துயரம்
வழியிலில்லை
"
_____________
"வாருங்கள் வீரர்களே -ஒன்றாய்ச்
சேருங்கள் தோழர்களே
"

தோழமை வேண்டி
-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
எழுதிக்கொள்வது: CAPital

உங்களுடைய கூகிளிலும் புலிகள் பற்றிய இடுகையையும் வாசித்தேன். நன்றாகவே எழுதுகிறீர்கள். உங்கள் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

23.6 13.11.2006
 
எழுதிக்கொள்வது: CAPital

உங்களுடைய கூகிளிலும் புலிகள் பற்றிய இடுகையையும் வாசித்தேன். நன்றாகவே எழுதுகிறீர்கள். உங்கள் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

23.13 13.11.2006
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கப்பிட்டல்.
எமது நோக்கம் நிறைவேற நீங்களும் எங்களுடன் கைகோர்ப்பீர்கள் என்று நம்புகிறோம்.
 
ரொம்பத்தான் மெத்திப்போச்சு பொடியன்களுக்கு.
அடுத்தது என்ன எழுதிறதா உத்தேசம்?
 
காமடி தாங்க முடியல.

-பஸ்கி
 
// "அமெரிக்காவிலும்//
அங்குமா??
 
ahahaha.......nalla comedy ponga:-)Thanx for making me laugh!
 
ஹைய்யோ ஹைய்யோ காமெடி தாங்கலே
 
எழுதிக்கொள்வது: என்னார்

எப்படி அந்த நபர் 87 விழுக்காடு பெற்றார் மக்கள் தானே ஓடளித்தனர். முன்பு அந்த கூகுள் செய்தியையும் படித்தேன்.

17.44 17.11.2006
 
அனானி, பஸ்கி,
வருகைக்கு நன்றி.

பொடிச்சி,
இப்பதான் முதன்முதல் எங்களின் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
முதல் வணக்கம்.
நீங்கள் ஒருவர்தான் எங்களின் ஆதங்கத்தைச் சரியாகப் புரிந்துள்ளீர்கள்.
மற்றவர்கள் எல்லோரும் நக்கலாகவே கருத நீங்கள்மட்டும் இதை சீரியசாகக் கருதிப் பின்னூட்டம் இட்டுச் சென்றுள்ளீர்கள். உங்களைப் போன்றவர்களின் ஆதரவு எமக்கு நிரம்ப மகிழ்ச்சி.

நீங்கள் எங்கள் இயக்கத்துக்குத் தோள் கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
 
ப்ரியன், என்னார்,
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்.
 
எழுதிக்கொள்வது: rmsachitha

புலிகள் இயக்கத்தில் இருக்கும் அனைவரும் கருணாவின் படைக்கு மாறவேண்டும், தமிழர்களையே கொண்று குவிக்கும் பிரபாகன் வீழ்த்துப்படவேண்டும், பிரபாகரன் என்ற சுயலவாதி வீழ்த்தப்பட்டால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிரக்கும்.
நன்றி.

19.46 19.11.2006
 
புலிகள் இயக்கத்தில் இருக்கும் அனைவரும் கருணாவின் படைக்கு மாறவேண்டும், தமிழர்களையே கொண்று குவிக்கும் பிரபாகன் வீழ்த்துப்படவேண்டும், பிரபாகரன் என்ற சுயலவாதி வீழ்த்தப்பட்டால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிரக்கும்.
நன்றி.
 
எழுதிக்கொள்வது: lol

undefined

13.53 20.11.2006
 
This comment has been removed by a blog administrator.
 
எழுதிக்கொள்வது: பொன்ஸ்

//புதிய ஜனநாயகப் புரட்சி'க்கு (இது என்ன சாமான் எண்டு தெரியாத ஆக்கள் குழம்ப வேண்டாம்.) //
என்ன சாமான் எண்டு குழம்பல்லை.. ஆனா எத்தனை ரூபாய்க்குக் கிடைக்கிறது? :)

8.6 28.12.2006
 
நாங்களும் சிறீரங்கனுடன் சேர்ந்து ஜனநாயக புரட்ட்சியில் குதிப்பதற்கு ஜட்டியுடன் தயாராக இருக்கிறோம் எப்போது குதிப்பது என்று அறியத்தருவீர்களா?
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது