<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Monday, November 28, 2005
  எனது வருடாந்த உரை

வணக்கம்!

அன்பார்ந்த மக்களே!
இம்முறை இரு தலைவர்கள் தமிழீழ மாவீரர் நாள் உரையினை வழங்கியுள்ளார்கள்.
பிரபாகரன் வழமையாகவே ஒவ்வோர் வருடமும் தவறாது மாவீரர்நாள் உரையினை நிகழ்த்தி வருகிறார்.
கடந்த இரு வருடங்களாக தமிழர்களுக்குக் கிடைத்த புதிய தலைவர் கருணாவும் தன் பங்குக்கு உரையாற்றி வருகிறார்.

ஆகவே இம்முறை நானும் எனது உரையை வழங்கவிருக்கிறேன்.

தமிழர் போராட்டத்தில் எங்களின் பங்கென்ன?
எங்களின் செயற்றிட்டமென்ன?
தமிழர்களுக்கு நாம் சொல்லவிருக்கும் சேதியென்ன?

என்பவற்றை இவ்வுரையில் சொல்லவுள்ளேன்.
சும்மா உரை நிகழ்த்தாமல் முன்கூட்டியே அறிவித்துச் செய்வதற்காகவே இவ்வறிவிப்பு.

காத்திருங்கள். எனது உரை விரைவில் வெளியிடப்படும்.
எந்த அரசாங்கமோ அல்லது உளவு அமைப்புக்களோ உதவினால் நாங்களும் இணையத்தளம் நடத்தி அதில் எமது உரையை வெளியிட முடியும்.
ஆனால் நீங்கள் எழுதித்தரும் உரையை என்னால் படிக்க முடியாதென்று சொல்லிவிடுகிறேன்.

இவ்வுரையை "தலைவர் மூன்று" என்று தலைப்பிட்டு மாற்றுக்கருத்துக்களுக்கானவர்கள் பிரசுரிப்பார்களென்று நம்புகிறேன்.
முடிந்தால் வாசகர்களும் ஒவ்வொரு உரையை எழுதி வெளியிடலாம்.
-----------------------------------------
நிற்க, என்னைக் கனநாளாய்க் காணவில்லையென்பதற்காக, நான் பங்கருள்தான் ஒழிந்திருக்கிறேன் என்று கதை கட்டாதீர்கள். சிலருக்கு மற்றவர்களை அப்படிச் சொல்லி தாங்களே சந்தோசப் பட்டுக்கொள்ளிறதில ஒரு இன்பம். பிரபாகரன் தீபமேத்தின படங்கள் வெளிவந்தபிறகும் அப்படியொரு கதை கட்டிவிட்டு திருப்திப்பட்டவர்களுக்கு, எந்த ஊடகவசதியும் இல்லாத எம்போன்றவர்களை அப்படிச் சொல்வது மிகச்சாதாரணம். எனவே இப்படியான பொய்யுரைகளை நம்பாதீர்கள்.
-----------------------------------------
விரைவில் சந்திக்கும்வரை,
நன்றி.
உம்மாண்டி.
 
எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி

பெயர்

Comments:
எழுதிக்கொள்வது: யாரோ

:) கட்டாயமா உரையை போடுங்கோ. நாங்கள் கேப்பம், என்ன எங்கை இருந்து அந்த தலைவர் 2 உரையாற்றினவர் எண்டு உரை போட்டவங்கள் சொல்லவே இல்லையே............

0.11 29.11.2005
 
எழுதிக்கொள்வது: பாமினி

ஆங்கில உச்சரிப்பில்

1.19 29.11.2005
 
எழுதிக்கொள்வது: உம்மாண்டி.

இவ்வுரையை "தலைவர் மூன்று" என்று தலைப்பிட்டு மாற்றுக்கருத்துக்களுக்கானவர்கள் பிரசுரிப்பார்களென்று நம்புகிறேன்.
முடிந்தால் வாசகர்களும் ஒவ்வொரு உரையை எழுதி வெளியிடலாம்.
-----------------------------------------
நிற்க, என்னைக் கனநாளாய்க் காணவில்லையென்பதற்காக, நான் பங்கருள்தான் ஒழிந்திருக்கிறேன் என்று கதை கட்டாதீர்கள். சிலருக்கு மற்றவர்களை அப்படிச் சொல்லி தாங்களே சந்தோசப் பட்டுக்கொள்ளிறதில ஒரு இன்பம். பிரபாகரன் தீபமேத்தின படங்கள் வெளிவந்தபிறகும் அப்படியொரு கதை கட்டிவிட்டு திருப்திப்பட்டவர்களுக்கு, எந்த ஊடகவசதியும் இல்லாத எம்போன்றவர்களை அப்படிச் சொல்வது மிகச்சாதாரணம். எனவே இப்படியான பொய்யுரைகளை நம்பாதீர்கள்.
-----------------------------------------
விரைவில் சந்திக்கும்வரை,
நன்றி.
உம்மாண்டி.

1.20 29.11.2005
 
எழுதிக்கொள்வது: sadhayam

அட்ரா சக்கை....அட்ரா சக்க...(கவுண்டமணி பானியில் உச்சரிக்கவும்)

9.58 29.11.2005
 
உப்பிடி சும்மா உம்மாண்டி எண்டு போட்டா என்ன அர்த்தம்?
உங்கட இராணுவ நிலையையும் முன்னால போட்டு (கேணலோ கோணலோ) எழுதினாத்தானே மரியாதை. உங்கட உரையில எண்டாலும் அதை எதிர்பார்க்கிறேன்.
 
எழுதிக்கொள்வது: ஈழபாரதி

எங்க இருக்கிறான் என்று சொல்லாமல், உரை நிகழ்த்தினமோ அல்லது அவரது பெயரில் தேனிதான் தயாரிச்சு உரை நிகழ்த்துதோ? உங்கட உரையையும் எதிர்பாக்கிறம்.

16.17 29.11.2005
 
உம்மாண்டி,
அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

(பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பினூட்டம் இடுவதற்காக மன்னிக்கவும்)
 
எழுதிக்கொள்வது: hgfh

hj

13.27 29.1.2006
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது