எனது வருடாந்த உரை
வணக்கம்!
அன்பார்ந்த மக்களே!
இம்முறை இரு தலைவர்கள் தமிழீழ மாவீரர் நாள் உரையினை வழங்கியுள்ளார்கள்.
பிரபாகரன் வழமையாகவே ஒவ்வோர் வருடமும் தவறாது மாவீரர்நாள் உரையினை நிகழ்த்தி வருகிறார்.
கடந்த இரு வருடங்களாக தமிழர்களுக்குக் கிடைத்த புதிய தலைவர் கருணாவும் தன் பங்குக்கு உரையாற்றி வருகிறார்.
ஆகவே இம்முறை நானும் எனது உரையை வழங்கவிருக்கிறேன்.
தமிழர் போராட்டத்தில் எங்களின் பங்கென்ன?
எங்களின் செயற்றிட்டமென்ன?
தமிழர்களுக்கு நாம் சொல்லவிருக்கும் சேதியென்ன?என்பவற்றை இவ்வுரையில் சொல்லவுள்ளேன்.
சும்மா உரை நிகழ்த்தாமல் முன்கூட்டியே அறிவித்துச் செய்வதற்காகவே இவ்வறிவிப்பு.
காத்திருங்கள். எனது உரை விரைவில் வெளியிடப்படும்.
எந்த அரசாங்கமோ அல்லது உளவு அமைப்புக்களோ உதவினால் நாங்களும் இணையத்தளம் நடத்தி அதில் எமது உரையை வெளியிட முடியும்.
ஆனால் நீங்கள் எழுதித்தரும் உரையை என்னால் படிக்க முடியாதென்று சொல்லிவிடுகிறேன்.
இவ்வுரையை "தலைவர் மூன்று" என்று தலைப்பிட்டு மாற்றுக்கருத்துக்களுக்கானவர்கள் பிரசுரிப்பார்களென்று நம்புகிறேன்.
முடிந்தால் வாசகர்களும் ஒவ்வொரு உரையை எழுதி வெளியிடலாம்.
-----------------------------------------
நிற்க, என்னைக் கனநாளாய்க் காணவில்லையென்பதற்காக, நான் பங்கருள்தான் ஒழிந்திருக்கிறேன் என்று கதை கட்டாதீர்கள். சிலருக்கு மற்றவர்களை அப்படிச் சொல்லி தாங்களே சந்தோசப் பட்டுக்கொள்ளிறதில ஒரு இன்பம். பிரபாகரன் தீபமேத்தின படங்கள் வெளிவந்தபிறகும் அப்படியொரு கதை கட்டிவிட்டு திருப்திப்பட்டவர்களுக்கு, எந்த ஊடகவசதியும் இல்லாத எம்போன்றவர்களை அப்படிச் சொல்வது மிகச்சாதாரணம். எனவே இப்படியான பொய்யுரைகளை நம்பாதீர்கள்.
-----------------------------------------
விரைவில் சந்திக்கும்வரை,
நன்றி.
உம்மாண்டி.