<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Sunday, December 24, 2006
  கூகிளில் கைவைத்த புலிகள் சிறிரங்கனிலும்....

ஏற்கனவே கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள் என்ற தலைப்பில் கட்டுரையொன்று எழுதியிருந்தோம். அப்போது அதை நையாண்டி பண்ணினர் தமிழர்கள். அதன்பின்னும் அமெரிக்கத் தேர்தலில் எப்படி பாசிசப் புலிகளின் கை விளையாடியிருந்ததென்றும் எழுதியிருந்தோம். இப்போது அது இன்னும் நிதர்சனமாக வெளிப்பட்டுவிட்டது.

ஆம், புலிகளை தன் எழுத்துத் திறமையால் நையப்புடைத்துக்கொண்டிருக்கும் தோழர் சிறிரங்கனின் வலைப்பதிவைத் தமிழ்மணத் திரட்டியில் தெரியவிடாமல் செய்வதற்காக கூகிள்காரங்கள் சுத்துமாத்துச் செய்திருக்கிறார்கள்.

இதை தோழர் சிறிரங்கன் மிகவும் மனமுடைந்து பதிவாக்கியிருக்கிறார்.
பார்க்க: சதிகாரக் கூகிள் கணக்கு...

தோழர் சிறிரங்கனை பழைய புளொக்கரிலிருந்து கூகிள் கணக்குக்கு மாறவைத்து (ஆசைகாட்டி மோசம் செய்து) விட்டு பின் தமிழ்மணத்திரட்டியில் தெரியவிடாமல் செய்துவிட்டார்கள்.
தோழரின் காத்திரமான, அறிவுபூர்வமான விமர்சனங்களையும் சாட்டையடிகளையும் எதிர்கொள்ள முடியாத புலிகள் முன்பு அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பதை சிறிரங்கன் வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழ் வலைப்பதிவர்களின் ஏகோபித்த ஆதரவாலும் பெடியங்களின் சில இரகசிய நடவடிக்கைகளாலும் அச்சதித்திட்டம் கைகூடாமற் போய்விட்டது.
இந்நிலையில்தான் தோழரின் சனநாயகத்துக்கான குரலை ஒடுக்க கூகிள் நிறுவனத்தைக் கொண்டே சதிசெய்திருக்கிறார்கள்.

இருந்தபோதும் எப்படி இவரின் பதிவு தமிழ்மணத்தில் தெரிகிறது என்று சிந்திக்கத் தெரிந்த யாராவது கேட்கலாம். அதற்கும் கைவசம் பதிலிருக்கிறது. தமிழ்மணத்திரட்டியை நிர்வகிக்கும் புலியெதிர்ப்புத் தோழர்கள் சிலரின் தயவால் சிறிரங்கனது பதிவு இப்போது மக்கள் பார்வைக்கு வந்துள்ளது(என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன). இதன்மூலம் புலிப் பாசிசத்தின் இன்னொரு சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

தோழர் சிறிரங்கன் இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவரல்லர்.
அவர் தொடர்ந்தும் தன் பொன்னான கருத்துக்காளால் புலிப்பாசிசத்தை எதிர்கொள்வார் என்று நம்புகிறோம்.

கூகிள் இனியும் தொடர்ந்து புலிகளுக்கு விலைபோய்க்கொண்டிருக்கக் கூடாது.
கூகிளின் இவ் அடாவடித்தனத்தை எதிர்த்து புதிய சனநாயக மக்கள் புரட்சியைத் தோற்றுவிக்க எமது தலைமையில் அணிதிரளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
______________
இப்பதிவு தமிழ்மணத்திரட்டி மேலான துவேசப் பதிவாக இனங்காணப்படாது என்று நம்புகிறோம். திரட்டிக்குரியோர் தொடர்பு கொள்ளின் பின்னூட்டமாகவே இடவும். வெளிப்படுத்தப்படாது.
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
எழுதிக்கொள்வது: theevu

மொத்தத்தில் புலியை எதிர்த்தால் பிரபலமாகிவிடலாம்.சிறீரங்கன் பிரபலமானதும் அப்படித்தான்.இனி இவரை பிபிஸி பேட்டி காண்பது ஒன்றுதான் பாக்கி இருக்கிறது

14.49 24.12.2006
 
எழுதிக்கொள்வது: nanpan

ஹாஹா!!! இப்படியா ஜோக்கடிப்பார்கள்!!!

8.49 24.12.2006
 
எழுதிக்கொள்வது: thuyawan

ஏன் சிறிரங்கனுக்கு மட்டும் இப்படித் தொடர்ந்து நடக்குது? ரெம்பத் தான் அப்பாவி ஆச்சே அவர். வாய் மட்டும் தானே நீளம். அந்த நீளத்தை வைத்துக் கொண்டு தமிழீழ மக்களுக்காக ஜேர்மனியில் இருந்து கதை விடுவது தப்பா!

19.50 24.12.2006
 
Google kanakkil maariyavarkal anaivarukkumthaan intha kathi.. ithil engirunthu vanthathu pulihalukku ethiraana sathi..

vakaipaduthumbothu thappa potuteengannu nenakiren. Arasial/Samuham, athukku pathila Nahaisuvai/Naiyandi apdiinu potturukalaam.
 
புலியை எதிர்த்துகொண்டுமட்டுந்தான்
பிரபலமாகலாம் என்றில்லை புலி வாலை
வாயில் கவ்விக்கொண்டு தன்வாலை
ஆட்டினாலும் பிரபலமாகலாம்
 
கூகிள் தலைமை அலுவலகம் முன்பாக ஒரு கண்டனப் பேரணி நடத்த ஒழுங்கு செய்யுமாறு உங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
:))

avarai summa vidungkappu,paavam.
summa summa kalaicikittu

chinnathambi
 
இங்கு கருத்தெழுதிய நண்பர்கள் நாம் ஏதோ நகைச்சுவையாக பதிவு எழுதுவதாக கேலி செய்கின்றனர். நாம் தோழர் சிறிரங்கனுக்கு மட்டுமல்ல.. புலிப் பாசிசத்தை வேரோடு தகர்த்தெறியும் வல்லமையுள்ளவர்கள் அனைவரினதும் சார்பாக போராடுவோம்.
 
எழுதிக்கொள்வது: காடீ

சிறீறங்கனை நினைத்தால் செம காமடீயா ஈக்குப்பா.

11.32 26.12.2006
 
எடேய் பெடியள்

எவ்வளவு தான் அடிச்சாலும் தாங்கிறாரே இந்த மனுஷன், நீங்க ரெம்ப நல்லவங்க
 
கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
வழமைபோல பலர் இதை நையாண்டி பண்ணிச் சென்றுள்ளனர். அவர்களைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை.
'நல்ல மாட்டுக்கு ஒரு சூடு'.

//கூகிள் தலைமை அலுவலகம் முன்பாக ஒரு கண்டனப் பேரணி நடத்த ஒழுங்கு செய்யுமாறு உங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

இதிலெல்லம் எமக்கு நம்பிக்கையில்லை.
எம்வழி தனிவழி.

//புலியை எதிர்த்துகொண்டுமட்டுந்தான்
பிரபலமாகலாம் என்றில்லை புலி வாலை
வாயில் கவ்விக்கொண்டு தன்வாலை
ஆட்டினாலும் பிரபலமாகலாம்
//

ஓமண்ணை,
சரியாச் சொன்னியள். உங்களை மாதிரி எந்தவாலையும் கவ்வாமல் தன்வாலையும் (இப்ப) ஆட்டாமல் இருக்கிறவை அட்ரசே இல்லாமல் போயிடுவினம். அதனால நீங்களும் ஆட்டுங்கோ உங்கட வாலை, புலிவாலையோ நரிவாலையோ கவ்விக்கொண்டு அல்லது ஏதும் கவ்வாமல்தன்னும்.
 
எழுதிக்கொள்வது: Suppun

என்ன கோதாரியக் கதைக்கிறியளோ தெரியேல!!! புலிகளை எதிர்க்கிறியள் என்டு மட்டும் தெரியுது!!!10.38 27.12.2006
 
சிறிரங்கன் சார் தமது பிள்ளைகள் மருமக்களை சேர்த்துக்கொண்டு பெடியனகளுடன் கூட்டணி வைத்துவிட்டதாக கூகிள் எச்சரிக்கை செய்யிது மெய்யோ பெடியன் சார்
 
YOU SO FUNNY. YOU ARE TOO AWAY FROM REALITY.
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது