<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Tuesday, June 21, 2005
  வீரவணக்கம் - சங்கர்ராஜி

ஈழத்துத் தோழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஈரோஸ் EROS இயக்கத்தின் இராணுவத் தளபதி சங்கர்ராஜி அவர்கள் ஜனவரி மாதம் 10 ம் திகதி மாரடைப்பினால் மரணமானார். கொள்கை வேறுபாடுகள் பல இருந்தாலும், கருத்து முரண்பாடுகளும் அதனால் உண்டான மனக்கசப்புகளும் இருந்தாலும் ஈழத் தோழர்களின் போராட்டத்தில் மறக்க முடியாத ஒருவராக தன்னை ஆக்கிக்கொண்ட சங்கர்ராஜி என்கிற அந்த விடுதலைப் போராளிக்கு நாமும் எமது இயக்கத்தின் சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

சங்கர்ராஜி

ஈரோஸ்(EROS) சங்கர் எனவும், சங்கர்ராஜி எனவும் இலங்கை அரசியலில் நன்கு அறியப்பட்ட இவரது மரணம் எம்மை அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியிருக்கிறது. 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி இலங்கையில் பிறந்த இவர், அங்கிருந்து இலண்டனுக்கு இடம்பெயர்ந்து தனது கல்வியைக்கற்று, பின் FORD நிறுவனத்தில் பொறியியலாளராக கடமைபுரிந்து வந்த இவர், 1976 முதல் அரசியலில் நுளையத் தொடங்கியிருந்தார். அன்று முதல் இலங்கை அரசியலில் தொடர்ச்சியாகத் தடங்களைப் பதிந்து வந்த வேளை சனவரி மாதம் 10ம் திகதி அன்று மாரடைப்பினால் மரணமான செய்தி எம்மை துன்பத்திற்கு உள்ளாக்கியது. இவரது வாழ்வின் சுமார் 30 வருட காலம் இலங்கை அரசியல் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதில் எதுவித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. இத்தருணத்தில் அவரது கடந்த கால அனுபவங்களிலிருந்து அவசியமான பக்கங்களை இங்கு நினைவுகூர வேண்டிய கடமைக்கு நாம் உள்ளாகியுள்ளோம்.

1970 களில் இனவாதத் தரப்படுத்தல் மேலோங்கி நின்ற வேளை இலங்கையில் இருந்து தமிழ் இளைஞர்கள் இடம் பெயர்ந்து இலண்டன் நோக்கி புறப்பட்டிருந்த காலமது. எமது சமுதாயம் கொழும்பு பொருளாதாரத்தை மையமிட்ட தன் செயற்பாடுகளுக்கு மாற்றீடாக ஐரோப்பிய பொருளாதாரம் நோக்கி தன் மையத்தை இடம்பெயர வைத்த நேரமது. எமது தேசிய இனமானது தனிநாட்டுக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி அதற்கான கருவடிவங்களை உருவாக்கி வந்திருந்த வேளையில் இலங்கையிலும், இங்கிலாந்திலும் போராட்டம் குறித்தான சிந்தனைகள், அணுகுமுறைகள், அமைப்புகள் உருவாகத் தொடங்கியிருந்தன. புலம்பெயர்ந்து வந்தவர்கள் மீண்டும் தம் தாய்நாடு சென்று அடக்கு முறைகளை எதிர்கொண்டு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த நிலையில் ஈரோஸ் இயக்கம் இரட்னசபாவதி அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது. இவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட சங்கர்ராஜி அவர்கள் 1976 முதல் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தயாரானார். அகிம்சைவழி போராட்டத்தின் அஸ்தமனத்தை புரிந்துகொண்ட ஈரோஸ் இயக்கம் ஆயுதப்போராட்டத்திற்கான தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தி வந்தது. சங்கர்ராஜி அவர்கள் இராணுவப்பயிற்சி நெறிக்கு தன்னை ஈடுபடுத்திக்கொள்ள தயாரானார். இவ்வாண்டில் லெபனான் நகருக்குச் சென்று அங்கு யாசிர் அரபாத் தலைமையிலான „பத்தா“(FATAH) அமைப்பின் இராணுவப்பயிற்சியை பெற்றுக்கொண்டார். சங்கருக்கு போரியல் உபாயங்கள் பற்றியும் இராணுவக்கட்டமைப்புகள் பற்றியும் மற்றும் அரசியல் இராணுவ துறைசார்ந்த திட்டமிடல்கள் பற்றியும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. அப் பயிற்சி நெறிகளை "பத்தா" அமைப்பின் இராணுவத்தளபதியாக இருந்த அமரர் அபு.ஜிகாத் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இவர் பெற்றுக்கொண்டது இவர் வாழ்க்கையின் ஒரு சிறப்பு அம்சமாகும். இவரது லெபனான் பயணம் பற்றியும், பயிற்சிகள் பற்றியும், அனுபவங்கள் பற்றியும் அபு.ஜிகாத் அவர்களது மறைவை ஒட்டி எழுதிய நூலில் சங்கர் அவர்கள் பல விடயங்களை எமக்கு அறியத்தந்துள்ளார். „எந்த வகைப் போராட்டத்திற்கும் முதலில் உங்கள் பலத்தை நீங்கள் நம்பவேண்டும்“ என்ற அபு.ஜிகாத் அவர்களது வாக்கியத்தை நினைவு கூர்ந்து அதன்படி செயல்பட முன்வந்தவர் சங்கர்ராஜி ஆவார்.

இவரது ஆழுமையின் கீழ் ஈரோஸ் இயக்கமானது தனது செயற்பாடுகளை வெளிநாடுகளிலும், தமிழகத்திலும், ஈழத்தின் பலபாகங்களிலும் மேற்கொள்வதற்கான முடிவுகளைப் பெற்றிருந்தது. இதன்படி ஈழத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு தயாரான நிலையில் இருந்த இளைஞர்களுக்கு லெபனான் பயிற்சி வாய்ப்பை வழங்கும் முடிவை மேற்கொண்டிருந்தது. இம் முடிவை செயற்படுத்துவதற்காக சங்கர்ராஜி அவர்கள் ஈழத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார். இலங்கை சென்றவர் 1977 இல், அன்று புதிய தமிழ்புலிகள் என்ற பெயரில், அதற்கு தலைமை தாங்கி நெறிப்படுத்தி வந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைச் சந்தித்து இப்பயிற்சி உதவிபற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார். பேச்சுவார்த்தையின் பலனாக புதிய தமிழ்ப்புலிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பப்பயிற்சிகள் லெபனானில் வழங்கப்பட்டிருந்தன.

1977 இல் இலங்கையில் பாரிய கலவரமானது மூண்டபோது இலங்கைப் பிரச்சினையானது சர்வதேசம் எங்கும் அறியப்பட்ட ஒன்றாக மாறியிருந்தது. இதனால் ஏற்பட்ட புதிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஈரோஸ் இயக்கம் 1978 இல் வவுனியாவிற்கு அருகில் கண்ணாட்டி என்னும் இடத்தில் „கூட்டுப் பண்ணை“ ஒன்றை அமைத்து தனது பொதுவுடமை கருத்தின் மாதிரி வடிவம் ஒன்றை ஸ்தாபித்திருந்தது. இப்பண்ணையில் சங்கர்ராஜி அவர்கள் தனது பயிற்சி மற்றும் அனுபவங்களை புதிய ஈரோஸ் உறுப்பினர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தார். பின்னர் பண்ணையானது சிறிலங்கா இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சங்கர்ராஜி அவர்கள் இலங்கை அரசின் தேடப்படும் நபர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார். அக்காலம் முதல் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஆரம்பமாகியிருந்தது. ஆயினும் அவற்றை துச்சமென மதித்து அவர் தொடர்ந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்தார்.

1980 களில் ஈரோஸ் இயக்கமானது கட்சிப்பிளவு ஒன்றை சந்தித்திருந்தது. இக்கட்சிப்பிளவின் போது இலங்கைக்கு மீண்டும் வந்திருந்த சங்கர்ராஜி அவர்கள் அப்பிளவை தடுக்கும் முகமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலன் இருக்கவில்லை. ஈரோஸ் அமைப்பின் தலைமைத்துவம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிலர் பிரிந்து சென்று EPRLF என்னும் பெயரில் புதிய அமைப்பு ஒன்றை ஸ்தாபித்துக்கொண்டனர். எப்போதும் தமிழ் இளைஞர்களை ஒன்று திரட்டுவதில் முன்நின்று உழைத்த சங்கர்ராஜி அவர்கள் இப்பிளவு குறித்து மிகவும் மனம் வருந்திய நிலையிலேயே காணப்பட்டிருந்தார்.

1983இல் மீண்டும் இனக்கலவரமானது பாரிய அளவில் இலங்கையில் தோன்றிய போது இந்தியாவின் தலையீடும் புதிய பரிமாணத்தில் உதயமாகியிருந்தது. இந்த அரசியல் பாய்ச்சலைக் கருத்தில் கொண்டு சங்கர்ராஜி அவர்கள் இலண்டனிலிருந்த தன் இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றினார். அங்கிருந்தபடியே ஈரோஸ் அமைப்பின் தலைமைத்துவத்தின் முடிவுகளை செயற்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

இக்காலங்களில் பெருமளவு உறுப்பினர்கள் பயிற்றுவிக்கப்பட்டு ஸ்தாபனமயப்படுத்தப்பட்டனர். 1984 இல் சென்னையில் கூடிய ஈரோஸின் மத்திய குழுவானது ஈழத்திலும், வெளிநாடுகளிலும் எங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான கட்டமைப்புக்களை நிறுவியிருந்தது. இவ்வேளை ஈரோஸ் அமைப்பின் இராணுவத் தளபதியாக இவர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவரது நெறிப்படுத்தலின் கீழ் இராணுவ தந்திர உபாயங்களும், இராணுவரீதியான செயற்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டன. தென்னிலங்கையில் பொருளாதார இலக்குகளை நோக்கிய தாக்குதல்களுக்கும், வடகிழக்கில் தற்காப்பு ரீதியிலான இராணுவ நடவடிக்கைகளுக்கும் இவர் தனது நெறிப்படுத்தலை மேற்கொண்டிருந்தார். இவரது நெறிப்படுத்தலில் வடகிழக்கிலும், மலையகப்பகுதிகளிலும், கொழும்பிலும் ஈரோஸ் இயக்கம் வேகமாக காலூன்றத் தொடங்கியது. இக்காலங்களில் இராணுவத்துறையை மட்டுமல்லாது நிதி மற்றும் சர்வதேச தொடர்புகளையும் சுமந்தவராக சங்கர்ராஜி அவர்கள் காணப்பட்டார். பாரிய பொறுப்புக்களை சுமந்ததின் நிமித்தம் பல்வேறு வசைமொழிகளுக்கும் ஆளானார். இராணுவச் செயற்பாடுகளில் இவர் களம் காணாதவர் என்ற குற்றச்சாட்டுக்கு இவர் இலக்கானார். ஈழத்தில் செயற்பட்டு வந்த தோழர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப இவர் 1986 இல் ஈழம் வந்து கொழும்பு வரை சென்று களநிலைகளை சந்தித்துச் சென்றார்.

1985 இல் இந்திய அரசு ஈழத்தமிழர் விவகாரத்தில் புதிய அணுகுமுறை ஒன்றை கொண்டு வந்தது. தமிழ் அமைப்புக்களை இலங்கை அரசுடன் பேசவைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட வேளை ஈரோஸ் அமைப்பின் சார்பாக சங்கர்ராஜி அவர்களின் தலைமையிலான குழு இப்பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டிருந்தது. திம்புப் பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏகமனதாக ஒரு பொதுநிலையை எய்தி நான்கு அடிப்படை அம்சங்களில் இலங்கை அரசிற்கு கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இக்காலத்தில் சங்கர்ராஜி அவர்கள் இயக்க ஐக்கியம் குறித்தான அவசியத்தை எண்ணக்கருவாக கொண்டு செயற்படத் தொடங்கியிருந்தார். சில மாதங்களின் பின்னர் திம்புப் பேச்சுவார்த்தையானது முறிவடைந்த பின்னர் மீண்டும் ஈழத்தில் யுத்தம் ஆரம்பமாகியிருந்தது.

1986 களில் இந்திய அரசானது விடுதலை இயக்கங்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டில் மாற்றம் ஒன்றை கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை முதன்மைப்படுத்தி தமிழ்த்தேசிய இனப்பிரச்சினையை அணுகுவது என்ற அடிப்படையில் அவர்கள் செயற்பட முடிவு செய்தனர். இதன்படி 1986 இல் பெங்களூரில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் பேச்சுவார்த்தையானது இந்திய அரசின் அனுசரணையில் நடைபெற்று இருந்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழீழ விடுதலைப் புலிகளினூடாக அணுகி தீர்வு ஒன்றைக் காண்பது என்ற இந்தியாவின் புதிய நிலைப்பாடானது மாற்று இயக்கங்கள் மத்தியில் குழப்பங்களை தோற்றுவித்திருந்தது.

இவ்வேளையில் ஈரோஸ் இயக்கமானது இவ்வணுகுமறையை ஆதரித்து செயற்பட தீர்மானித்திருந்தது. இது தொடர்பாக சங்கர்ராஜி அவர்கள் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் இருக்கும் தேசிய தலைமையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளுக்கு மாற்றப்பட்டதன் வைபவமாக இச் சம்பவத்தை வர்ணித்து, இனி வரும் காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்மக்களின் அபிலாசைகளை பிரதிபலித்து தீர்வுகளை காண விளைவதை தாம் ஆதரிப்பதாக கருத்துக்கூறியிருந்தார். இவ்வேளை இது ஒரு பாரிய பொறுப்பென்றும் ஏனைய சக போராட்ட அமைப்புக்களை தனது தலைமையின் கீழ் இணைத்து செயற்படும் பக்குவம் இவ்வமைப்புக்கு இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். ஈரோஸ் இயக்கத்தின் இம்முடிவு மாற்று இயக்கங்களுக்கு ஈரோஸ் மீது வெறுப்பையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருந்தது. 1987இல் இலங்கை-இந்திய ஒப்பந்தமானது ஏற்பட்ட போது மீண்டும் இலங்கை அரசியலில் அனர்த்தங்கள் நிகழத் தொடங்கின. இலங்கை-இந்திய ஒப்பந்தமானது இலங்கை மக்களுக்கு இடைக்கால தீர்வை முன்மொழிந்து அதனை விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் நிறுவ ஆவன செய்திருந்தது. இவ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை சங்கர்ராஜி அவர்கள் ஆதரித்து செயற்பட்டமை ஈரோஸ் இயக்கத்தின் இராணுவ – அரசியல் துறை சார்ந்த உறுப்பினர்கள் மத்தியில் விரக்தியையும் கசப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் இனிமேல் அமைதி நிரந்தரமாக நிலவும் என அதீத நம்பிக்கை கொண்டு இவர் செயற்பட்டதன் விளைவாக பல எதிர்ப்புக்களை சந்திக்கும் நிலமைக்கு உள்ளாகியிருந்தார். இது அவருக்கு பெரும் சோதனைக்காலமாக அமைந்திருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜேவர்த்தனா சூழ்ச்சியோடு தனக்கு சாதகமாக கையாண்டதன் விளைபலனாக இந்தியஅரசு இலங்கை தமிழர்களை பகைத்துக் கொண்டது. அமைதி காக்க வந்த இந்தியப்படைக்கும் - விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்த நிலை உருவானபோது மிகவும் பாதிக்கப்பட்ட இலங்கைத்தமிழர் இந்தியா குறித்து அவநம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்.

நெருக்கடி மிகுந்த இச் சூழ்நிலையில் ஈரோஸ் இயக்கம் மிருசுவிலில் தன் திட்ட பிரகடன மகாநாட்டை ஆரம்பித்திருந்தது. அம்மகாநாட்டில் ஆயுத ஒப்படைப்பு குறித்து தான் பெற்ற முடிவை தவறானது என்று ஒப்புக்கொண்ட தோழர் சங்கர், இது குறித்து வருத்தம் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு விடயங்களிலும் தனது நம்பிக்கை கருத்துக்களை முன்மொழிந்திருந்தார். பல்வேறு அரசியல் முடிவுகள் மேற்கொள்ளப்பட்ட இம்மகாநாட்டின் இறுதியில் மீண்டும் ஈரோஸ் தோழர்களினால் சங்கர்ராஜி அவர்கள் இராணுவத் தளபதியாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989 பெப்ரவரியில் இலங்கையில் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் ஈரோஸ் இயக்கம் 13 ஆசனங்களை பெற்று அமோக வெற்றியீட்டியிருந்தது. இந்திய அரசினால் நிறுவப்பட்ட மாகாண சபையின் செயற்பாடுகளை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாக இது அமைந்திருந்தது.

இவ்வெற்றியின் பின்னர் கொழும்பில் சங்கர்ராஜி தலைமையில் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று நடத்தப்பட்டிருந்தது. ஈரோஸ் இயக்கத்தின் நிலைப்பாட்டை சங்கர்ராஜி அவர்கள் தெளிவுபட கூறியிருந்தார். இந்திய இராணுவமானது யுத்தத்தை நிறுத்தி அமைதியான ஒரு சூழ்நிலையில் விலகலை செய்வதற்கான ஒரு கால எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியிருந்தார். இந்திய இராணுவமானது 1990 இன் ஆரம்பத்தில் வெளியேறிய பின்னர் ஈரோஸ் பல்வேறு உள்நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கியிருந்தது. இயக்கத்தின் உள் முரண்பாடுகளினால் தனிப்பட்ட முறையில் பாதிப்படைந்த அவர் அரசியல் முன்னெடுப்புகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தார். இக் காலகட்டங்களில் அவர் சென்னைக்கு இடம் பெயர்ந்திருந்தார்.

1990 இன் நடுப்பகுதியில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கும் - இலங்கை இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டபோது ஈரோஸ் இயக்கத்தின் பொதுச்செயலாளராக விளங்கிய பாலகுமாரன் ஈரோஸின் செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக பத்திரிகைகளுக்கு அறிவிப்பு செய்ததை தொடர்ந்து உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மலையகப் பகுதிகளிலும் செறிந்து இருந்து செயற்பட்டு வந்த உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்தினரால் மோசமான பாதிப்பிற்கும், உயிர் ஆபத்துக்கும் உள்ளாகியிருந்தனர். இவ்வேளை மீண்டும் சங்கர்ராஜி அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தார்.

மலையகம் மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி செயற்பட வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். சிறை வைக்கப்பட்டிருந்த இவ்வுறுப்பினர்களை விடுவிக்கவும், அரசியலில் இருந்து ஒதுங்கி நாட்டைவிட்டு வெளியேற தயாரான உறுப்பினர்களுக்கு உதவும் முகமாகவும் கொழும்பில் மையமிட்டு தன் செயற்பாடுகளை அவர் ஆரம்பித்திருந்தார். இக்காலங்களில் சங்கர்ராஜி அவர்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவரும் பத்திரிகைகளால் அரசசார்பு நபராக வர்ணிக்கப்பட்டார். கொழும்பில் தங்கியிருந்த இக்காலங்களில் விடுதலை அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில் தொடர்புகளை பேணி ஐக்கியப்பட்ட ஒரு போராட்டத்திற்கு அயராது உழைத்து வந்தார். இவரது முயற்சிகள் எதிர்பார்த்த பலனை கொடுக்காத நிலையில் மீண்டும் மனவிரக்தியுடன் சென்னைக்கு திரும்பி அங்கு தங்கியிருந்தார். தன் அரசியல் செயற்பாடுகளை கட்டுப்படுத்திக் கொண்ட அவர் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002ம் ஆண்டு பெப்ரவரியில் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் ஐக்கியம் பற்றிய இவரது எண்ணங்களுக்கு விடை கிடைக்கும் என ஏங்கி நின்றார். அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குறிக்கோளுடன் செயற்பட வேண்டும் என்ற அவரது விருப்பம் ஈடேறியிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் மத்தியில் மாற்றியக்கங்கள் தொடர்பாக ஏற்பட்ட கொள்கை மாற்றத்தை வரவேற்ற அவர் அனைவரையும் ஒன்று திரட்டி செயற்படுத்தும் காலத்திற்காக ஏங்கி நின்றார். இறுதியில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் புனர்வாழ்வு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தயாரானார். இப்பேரழிவில் சிக்குண்ட தமிழ்ச் சமூகத்தை உறுதியான பொருளாதாரத் திட்டங்கள் மூலம் மீண்டும் கட்டியெழுப்ப தன்னார்வம் கொண்டிருந்தார். அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிபந்தனையற்ற முறையில் செயற்பட விருப்பம் கொண்டிருந்தார். ஆனால்… அவரது உடல்நிலை அவரது ஆயுளை துரிதப்படுத்தியது. நீரிழிவு நோயாலும், இரத்தக் கொதிப்பினாலும் பல ஆண்டுகளாக அவஸ்தைப்பட்டு வந்த இவர் 10.01.2005 அதிகாலையில் தன் தாய்மடியில் மாரடைப்பால் மரணமானார்.

சுமார் முப்பதாண்டு கால அரசியல் வரலாறு கொண்ட சங்கர், அறிந்தவர்களுக்கு அரசியல் நல்வழிகாட்டியாகவும், அறியாதவர்களுக்கு சர்ச்சைக்குரிய நபராகவும் விளங்கியவர் என்பதே யதார்த்தம்.

வீரவணக்கத்துடன்
பெடியன்'கள்

 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
எழுதிக்கொள்வது: வேலன்

ஏன் தடங்கள் ???


மக்களிடம் புரையோடிப் போயிருக்கும் பிரச்சனையின் பிரதிபலிப்பினால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சனையானது தீர்வு காணப்படாமல் இழுபட்டுக் கொண்டு செல்கின்றது. இவற்றிற்கு சட்டரீதியான அணுகுமுறைக்கு தீர்வு காணப்படாமல் தொடர்ச்சியாக இழுப்பட்டுச் செல்கின்றது. சட்டரீதியாக தீர்க்கப்பட வேண்டிய விடயம் சிக்கலுக்கு உள்ளாகி அரசியல் மட்டத்திலும் எந்த முடிவும் எடுக்க முடியாது இழுபட்டுச் செல்கின்றது. அரசியல் மட்டம் என்பது மத உயர்பீடங்களின் ஆழுமைக்குள் உட்பட்டு அவர்களின் அழுத்தங்கள் அரசியல் பீடத்திற்கு இருப்பதால் எந்த முடிவுகளையும் சுதந்திரமாக எடுக்க முடியாது இருக்கின்றது. இவற்றில் சமூக மட்டத்தின் ஒரு ஒப்புறவைக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்யும் நிலையானது வெற்றிடமாகவே இருக்கின்றது.


இந்தப் சமூக அமைப்பானது உழைக்கிறவர்களின் சக்தியும், உருவாக்கப்படும் சாதனங்களும் தான் பொருளாதார அமைப்பாக உள்ள கட்மைப்பில்மேல் உருவாக்கப்பட்ட சாதி, குடும்பம், அரசயந்திரம், மதம் மற்றும் மற்றைய நிறுவனங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இன்றைய சமூக அமைப்பில் இருக்கின்ற மதநிறுவனங்களும் இதன் மேல் கட்டமைக்கப்பட்டதே. இந்த சமூக அமைப்பின் ஏற்படுகின்ற பிரச்சனைகளை, விழைவுகளை தெய்வீகம் கொண்டு விளக்கம் கொடுக்கப்பட்டதும், தொடர்ச்சியாக அந்தச் சிந்தனையில் மக்களை தொடர்ச்சியாக வாழ்க்கை வட்டத்தை தொடர்கின்றனர். சமூகத்தை ஈடாட்டம் கொள்ளாத வரையில் நிறுவனங்கள் ஒன்றையொன்று பாதுகாத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு மாற்றாக சில சீர்திருத்தங்களை தமது இருப்பின் தேவையை கருதி தன்மை மாற்றிக் கொள்கின்றதேயன்றி அதனை நிறுவனங்களை சிதைய விடுவதில்லை.
இவ்வாறாக நிறுவனத்தைப் பாதுகாக்கும் பொருட்டே சட்டங்களை இயற்றுகின்றனர். இந்தச் சட்டங்கள் மூலம் சமூகத்தில் உள்ள நபர்களிடையே நீதியை நிலைநாட்டுவதாகவும் கருதுகின்றது. இதனால் மக்கள் ஒரு சுயாதீனமாக இயங்குவதாக கருதிக் கொள்ள வைக்கின்றது. எனினும் இவைகள் எவையும் பொருளாதார நலனுக்கு எதிராக செயற்படப் போவதில்லை.


இவ்வாறான நிலையில் சட்டத்தின் தீர்ப்பைக் கூட செயப்படுத்த சிக்கல்கள் ஏற்படுகின்றன. அரச இயந்திரத்தில் இருக்கின்ற அதிகார வர்க்கம் என்பது கட்டமைப்பில் மாற்றம் வராது பாதுகாக்கின்றன. இதனால் மத, இனரீதியாக மக்களை பிரித்து தமது தேவைக்காக ஒருவரை ஒருவர் சண்டையிட வைக்கின்றனர். இவ்வாறு சமூகக் கட்டமைப்பில் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றது. இதன் காரணமாக பல பிரச்சனைகள் உருவாகிக் கொண்டு வருகின்றது. இதன் காரணமாகவே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக கட்டமைப்பிலே உள்ள பொருளாதார அமைப்பே காரணம் என்கின்றோம். இதனால் பிரத்தியோகமாக புதிய பிரச்சனைகள் என்பது பொருளாதார அமைப்பின் எதிர்விழைவு என்பதற்கு உட்பட்டவையாக இருக்கின்றது. இதன் காரணமாக பொருளாதார கட்டமைப்பில் மாற்றங் கொண்டுவரும் போது தான் பிரச்சனைக்கான முடிந்த முடிவைக் கொண்டுவர முடியும்.
ஆனால் இடைக்காலத்தில் சட்டரீதியான மாற்றங்களைக் கொண்டுவர முடியும், ஆனால் சட்டவாக்க மூலம் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு காண்பது முடியாதுடன் இவற்றில் நம்பிக்கை வைக்கவும் முடியாது. ஏனெனில் சட்டநிறுவனம் கூட ஒரு அடக்குமுறை நிறுவனமாகும்.

இந்தப் பிரச்சனை பற்றி வௌ;வேறு பிரிவுகள் வௌ;வேறு விதமான புரிதல்களை கொண்டுள்ளதை அறிய முடியமுடிகின்றது. இதில் புலிகள் தமது பாத்திரத்தை கற்சிதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். மற்றைய பகுதியினர் புலியெதிர்ப்பு நிலையில் இருந்து பார்க்கும் பார்வையை காணமுடிகின்றது. இவற்றில் சில..
'புத்தர் சிலையை அகற்றுவதற்கு இந்துக்கள் சிலரால் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. (விழிப்பு) ' 'புலிகளே திருகோணமலையில் இடம்பெறும் வன்முறைகளுக்கு காரண கர்த்தாக்கள் (விழிப்பு)' என வியாக்கியானம் செய்கின்றனர். இவ்வாறான வியாக்கியானங்கள் எவ்வகையாக கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு வரும் என்பதை இவர்கள் கவனிக்காது விடுகின்றனர்.


முன்னர் குறிப்பிட்டது போன்று மக்களிடையே புரையோடிப் போயுள்ள கடவுள் நம்பிக்கை, மதம் சார்ந்த வரலாற்று உண்மைகள், சம்பிரதாயங்கள், சகிப்புத் தன்மை இல்லாமை, அரசியல் இலக்கை அடைவதற்கான ஒரு உபகரணமாக மதத்தைப் பாவிக்கும் நிலை, இந்தப் பொருளாதார அமைப்பின் பிரச்சனைகளுக்கு கடவுள் என்ற ஒரு சக்தியைக் காட்டியே மக்களை மந்தைகளாக வைத்திருக்கும் நிலையானது தொடர்ச்சியா உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றது.
இது வெறும் தவறான வியாக்கியானம். இங்கு தனியே ஒரு மதத்தினரை மாத்திரம் இந்தச் சம்பவத்துடன் பொருத்திப் பார்ப்பது தவறானதே. இதற்கு பின்புலமாக ஆண்டாண்டு காலம் இருக்கின்ற ஒருவருக்கிடையேயான சந்தேகம், மதவுணர்வு, மேலான்மை சிந்தனை, சகிப்புத் தன்மையின்மை போன்றவையே இந்த நிகழ்ச்சிற்கு பின்புலனாக இருந்திருக்கின்றது.

நீதிமன்றத் தீர்ப்பு


சிலை அமைக்கப்பட்டது தவறென ஏற்கிறார் தேரர்- மது விற்பனை நிலையங்கள் உள்ள இடத்திலிருந்து 200மீற்றர் தூரத்துக்குள் விகாரையோ, புத்தர்சிலையோ அமைக்கக் கூடாதென்பது பௌத்தசமய ஒழுங்குவிதியில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விதியைமீறி திருமலை நகர மத்தியில் இரண்டு மதுவிற்பனை நிலையங்களுக்கிடையில் புத்;தர்சிலை அமைக்கப்பட்டிருப்பதானது தவறென்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் திருமலை மொறவௌ பௌத்த விகாராதிபதியும், திருமலை பௌத்த துறவிகளின் சங்கசபாவின் செயலாளருமான இந்திரரோயதேரர் தெரிவித்துள்ளார். நேற்று மூதூரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே இவர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இவை நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். இதிலிருந்து இந்த சிலை வைப்புச் சம்பவம் கூட தனிமனித வக்கிரம் சார்ந்ததாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை சிலைவைப்பின் பின்னரான அரசியல் நலன் சார்ந்த நடவடிக்கைகள் கடந்த கால அனுபவத்தை திரும்பவும் இரைமீட்டிச் சென்றது. இன்றும் பதட்ட நிலை தொடர்கின்றது.
இதில் அனைத்து வகை இனவாதிகளும் இதில் குளிர் காய்கின்றார்கள். இதில் குறிப்பாக ஜே.வி.பியின் செயற்பாடுபற்றி அதிகம் கவனிப்பது அவசியமானதாகும். காரணம் இணைய தளம் குறிப்பிடுவது போன்று ஜே.வி.பி இனப்பதட்டத்தை தீர்ப்பதற்கான போராட்டத்தை தொடங்கியிருக்க வேண்டும். இவர்கள் செய்யாதது பெரும் அரசியல் தவறாகும்.


அதேவேளை திருமலை நீதிபதியின் தீர்ப்பான குறிப்பிடத்தக்கதாகும். இதில் திருமலை நீதிபதி சட்டத்திற்கு புறம்பாக கட்;டப்பட் அனைத்துக் கட்டிடங்களையும் அகற்றும் படி கட்டளையிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பானது எல்லோராலும் வரவேற்கப்படக் கூடியதாக இல்லை என்பதில் எவ்வித அதிர்ச்சியும் இல்லை. எங்கோ ஒரு மாற்றத்திற்கான முயற்சியை ஏற்படுத்த வேண்டும். இத்தீர்ப்பை ரட்ணசிறி விக்கிரமநாயக்காவின் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு ஒப்பிட்டு புலிகள் கருத்து முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னர் குறிப்பிட்டது போன்று சிலை வைப்பு என்பது ஒரு மதத்திற்கு மாத்திரம் உரித்துடையது அல்ல. மாறாக பெரும்பான்மையான மதப்பிரிவுகளும் திடீர் திடீர் என புதிது புதிதாக வைப்பதை தடுக்க வேண்டும் என்றால் முதலில் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வர வேண்டும்.


நீதிமன்றத் தீர்ப்பை முழுஅளவில் அழுல்படுத்த வேண்டும். இது தனியே திருமலைக்கு மாத்திரமான பிரச்சனையல்ல. அத்துடன் புத்தர் சமயத்திற்கு மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல. முழு இலங்கையின் பிரதேசமெங்கும் இருக்கின்ற பிரச்சனை இதுபற்றி முழுமையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். மாறாக புத்தர்சமயம் சம்பந்தப் பட்ட பிரச்சனைகளைப் பற்றிக் கொள்ளும் குறுகிய அரசியல் செயற்பாட்டில் இருந்து விரிந்ததாக இருக்க வேண்டும்.
இங்கு ஒரு மதத்தின் சிறப்புத் தன்மையை ஏற்றுக் கொள்வது, அல்லது தமக்குத் தேவையான மதப் பிரிவினர் மதச்சின்னங்கள் எழுப்புவதையும் தடைசெய்ய வேண்டும். இதில் நிச்சயமாக நிலஆக்கிரமிப்பு என்பது இதில் உள்ளடக்கப்பட வேண்டும். இது பெரும் வீதிகளை இடையூறு செய்வதாகவும் இருக்கின்றது. இதற்கான விழிப்புணர்வை மேற்கொள்;;ளும் வகையில் பிரச்சனையை கையாள வேண்டும்.


தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சைவ, கிறிஸ்தவ பிரிவினர் சிலை வைப்பதை தமிழ் பகுதி பாராமுகமாக இருப்பதையும், சிங்களப் பகுதியினர் தத்தம் சமூகப் பிரிவு சிலை வைப்பதை பாராமுகமாக இருப்பதும் தவறாக ஒரு நிலைப்பாடாகும். இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் இதில் புலியெதிர்ப்பு அணியின் நிலைபற்றி ஒரு பொதுமகன் கருத்துக கூறியிருந்தார். அவர் புத்தர் சிலையை கண்டுகொள்ளாத இந்து கலாச்சார அமைச்சரும்! சிங்கள பேரினவாதிகளும்! என்ற தலைப்பில் எழுதியிருந்தார். இந்தக் கருத்தை புலிகளுக்கு மாற்றீடாக வர முயலும் அமைப்புக்களின் மீதான ஒரு சரியான விமர்சனத்தை சகபொதுமகனால் முன்வைக்கப்பட்;டது. இதில் உள்ள விடயம் புலிகளின் மீதான எமது கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் மக்களுக்குள்ள பிரச்சனைகள் என்பது பற்றி சகபொதுமகன் குறிப்பிட்டிருந்தார்.


இதில் இருந்து சில விடயங்களை புலி எதிர்ப்பாளர்களுக்கு உணர்த்த முற்பட்டுள்ளார் என புரிந்து கொள்ள முடிகின்றது. புலியெதிர்ப்பு அணியினர், புலிகளை எதிர்ப்பதில் மாத்திரம் அன்றி சிங்கள பேரினவாத சிந்தனையில் உருவான மேலாதிக்க சிந்தனை என்பது சமூகத்தின் எல்லாத்தளத்திலும் புரையோடிப் போய்யுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கான பிரச்சனைகளில் பேரினவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டி தேவையை இங்கு மறுதலிப்பதை சகபொதுமகன் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள இனவாத, சிங்கள மதவெறிச் சக்திகளின் வெறித்தனமான மேலான்மையை தமிழர்கள் மீது திணிப்பதை தொடர்ந்த வண்ணமாகவே இருக்கின்றனர். இவ்வாறான வேளையில் இனவாத, மதவெறிச் சக்திகளின் தவறான செயல்களை தட்டிக் கேட்கும் தமிழர் பிரதிநித்துவம் என்பது ஊசலாட்டம் இல்லாது இருத்தல் வேண்டும். இதில் எந்த வித தவறுமில்லை, இதனைத் தான் பாதிக்கப்பட்ட தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இதனை நிறைவேற்ற புலிகள் எப்பொழுதும் தயாராக இருக்கின்றார்கள்.


இதனால் புலிகள் தமிழ் மக்களின் பாதுகாலவர்களாக தொடர்ச்சியாக இருக்கின்றார்கள். இதனை மறுக்க முடியும். ஆனால் நடைமுறையில் யார் உடனடியாக மக்களின் தேவைக்கு முன்னிக்கின்றார்கள் என்பதே முக்கியமானதாக மக்களுக்கு படுகின்றதோ, தேவையான நபர்களோ அவர்களையே மக்கள் தொடர்வர். இவை முற்போக்கானதாக இருக்க வேண்டியதில்லை. மக்களுக்குண்டான அனுபவம், வேதனை, சோகம், இழப்பு, ஆற்றாமை என்பன அரசியல் சரியானவையாக இருப்பதில்லை. மாறாக அது அவர்களின் உள்ளுணர்வு சம்பந்தப் பட்டதாகும், அதாவது அவர்களின் அகவுணர்வு சம்பந்தப் பட்டதாகும். இதனால் போராட்டத்தில் ஈடுபடும் தலைமை சக்திகள் மக்களின் தேவையை பிரதிபலிப்பதாக இருத்தல் அவசியமாகும்.

இன்றுள்ள பிரச்சனை இனவாதம் என்ற வன்முறை இவை தனிப்பட்;ட நபர்களி;ன் வக்கிர உணர்வினால் வரமுடியும்.
அரசாட்சியை தொடர்ந்து பாதுகாக்கும் சிங்கள இனவெறிச் சக்திகளினால் உருவாக முடியும்.
இதில் சாதகமான நிலையைப் பயன்படுத்தி புலிகள் எனும் குறுந்தேசியவாதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வரமுடியும். இவைதான் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. ஆனால் புலியெதிர்ப்பு வாதம் என்ற குறுகிய அரசியல் நிலையில் இருந்து பரந்த மக்களுக்கான தேவையை அறிந்து செயற்படும் தலைமைதான் இன்றைக்குத் தேவையானதாகும். இந்தச் சக்தி தமிழ் சிங்கள மக்களிடையே இருக்கின்ற சகப்புணர்வுகளை போக்கும் வல்லமை பொருந்தியதாக இருக்க வேண்டும்.

பதவிவெறிக்காக, அரசியல் சுகபோகத்திற்காக தமது கொள்கைகளை விட்டுக் கொடுப்பவர்களாக, விற்பவர்களாக இருத்தல் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். முழுமக்களின் தேவை என்பது குறிப்பிட்ட இனவாதிகளின்; தேவையின் நின்று மாறுபட்டதாகும். இதில் சிங்கள, மலையக, முஸ்லீம், தமிழ் மக்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது முழுமக்களும் ஐக்கியப் பட்டு போராடுவதன் மூலமே வெற்றி கொள்ள முடியும். எம்மை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் சக்திகள் எமது இறைமையை தமது அரசியல் லாபங்களுக்காக விற்பதற்கு முண்டியடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களின் கயமைத்தனத்தை வெற்றி கொள்வது நீண்;ட நெடிய பயணமாகும். இந்தப் பயணத்துக்கு மக்களின் தேவைகளின் அடிப்படையில் செயற்படுவது ஒன்றே சரியான பாதையாக அமையமுடியும்.


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
ஊடகவியலாளர்களின் பின்புலம் தான் என்ன?


இன்றிருக்கும் எழுத்தாளர்கள் எந்தப் பாதையை தெரிவு செய்ய வேண்டும் என்று வௌ;வேறு நிலை கொண்டவர்கள் விவாதித்துக் கொண்டு இருக்கின்றார்கள், வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் மனித இனங்கள் வர்க்கங்களாக பிரிந்திருக்கின்ற வேளையில் (இதனை ஏற்காதவர்களும் உண்டு) தத்தம் கற்ற அறிவை விற்றுப் பிழைக்க முயற்சியினை ஒவ்வொரு சமூகத்தின் நபர்களும் மேற்கொள்கின்றனர். இதனைத் தான் கல்வியின் மூலம் அடையமுடிகின்றது. இன்றைய சமூக பொருளாதார நிறுவனங்களின் வசதிக் கேற்ப கல்வித் தகமை கொண்டவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். இவர்களில் கல்வி சார் பிரிவினர் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர்.


இவ்வாறாக நிலை இருக்கையில் எம்மவர்கள் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் ஈழப் போராட்டத்திற்கு உதவவேண்டும், பிரச்சாரத்திற்கு உதவவேண்டும் என எழுதுகின்றன. இன்றைய எழுத்தாளர்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.
இந்தப் சமூக அமைப்பானது உழைக்கிறவர்களின் சக்தியும், உருவாக்கப்படும் சாதனங்களும் தான் பொருளாதார அமைப்பாக உள்ள கட்மைப்பில்மேல் உருவாக்கப்பட்ட சாதி, குடும்பம், அரசயந்திரம், மதம் மற்றும் மற்றைய நிறுவனங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இந்த அமைப்பிற்கு சேவகம் செய்ய உருவாக்கப்படும் ஊழியர்கள் தமது அறிவை விற்றுப் பிழைக்க வைக்கின்றது. இதில் உருவாக்கப்படுபவர்கள் இந்த சமூகத்தினை பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றனர். எந்தச் சிந்தனையும் எமது சித்தத்தில் இருந்து உருவாகுவதில்லை. மாறாக இந்தச் சமூகத்தின் உற்பத்தியின் விளைவுகளே.
உற்பத்தி சக்தியை தம்வசம் வைத்திருப்பவர்கள் கூலியாக ஒரு தொகையினை கொடுக்கின்றனர். பொருளாதாரத்தில் மாற்றங்கள் மூலம் வளர்ச்சி பெற வேலைப் பிரிவினை பெருகுகின்றது. இவ்வேலைப் பிரிவினை மூலமாக உருவாக்கப்படும் கூலி உழைப்பாளிகளின் ஒரு பிரிவினரை அதிக சலுகை கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு சலுகை பெறுபவர்கள் மற்றைய தொழிலாளர்களி;டம் இருந்து வேறுபடுகின்றனர். ஒப்பிட்ட ரீதியில் மற்றவர்களை விட வாங்கும் திறன் இவர்களிடம் அதிகமாக இருக்கும், தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆனால் இவர்களின் உழைப்பு என்பது சுரண்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் இவர்களின் கூலி என்பது மற்றவர்களின் கூலியை விட அதிகமாக இருப்பதனால் மற்றவர்களை விட இவர்களினால் சமூகத்தில் உயர்வான அந்தஸ்தில் இருக்க முடிகின்றது. இந்தப் பகுதியினர் சமூகத்தின் இருப்பை பாதுகாக்கும் நோக்கோடு அவர்கள் உழைப்பை விற்றுப் பிழைக்கின்றனர். இவர்களே ஆட்சியாளர்களுக்கு, பொருளாதார அமைப்பிற்கு துணைபோகும் மூளை உழைப்புப் பிரிவினர். இந்த பிரிவினர் தம் வாழ்வுக்காக இப்படித்தான் என தமது இருப்பை உறுதிசெய்யும் சிந்தனையை மக்கள் மத்தியில் விதைப்பவர்கள்;.

இதற்கு ஒரு உதாரணம் 2.6.05 அன்று BBC Hardtalk
இல் பேட்டி கொடுத்த Thomas Friedman
என்ற ஊடகவியலாளர் பந்தி எழுத்தாளர். Walmart
என்ற பல்பொருள் அங்காடி பற்றி எழுதிய புத்தகத்தைப் பற்றிய கேள்வியில் இந்த பல்பொருள் அங்காடி பற்றிக் குறிப்பிடும் போது இதனால் ஏழைகள் மலிந்த விலையில் பொருட்களை வாங்க முடிகின்றது. வறிய நாடுகளில் இருந்து பொருட்களை இங்கு பெற முடிகின்றது, இதனால் வறிய நாடுகளில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பம் என்பது உலகமயமாதல் மூலம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இது உலகமயமாதலின் ஒரு வெற்றிகரமான நடவடிக்கையாகும் எனத் தெரிவித்தார்.அதாவது இவரைப் பொறுத்தவரை தனது சொந்த நாட்டில் தொழிற்சாலைகளை மூடி கூலி மலிந்த இடத்தில் தொழிற்சாலையை நிறுவுவது, அல்லது குறைந்த விலையில் கூலிகளை வாங்குவது தவறில்லை, மூலப் பொருட்களை, விற்பனைத்குத் தயாரான கொள்பொருட்களை மலிந்த விலையில் பெறுவது தவறாகப் படவில்லை, தொழிற்சங்க உரிமையை மறுப்பது தவறாகப் படவில்லை. அத்துடன் வைத்திய சேவை காப்புறுதியற்ற நிலையினையைக் கூட இவர் ஏற்றுக் கொண்டார்.
இங்கு இவரின் சேவை என்பது ஒரு வர்க்கத்தின் தேவையாக இருக்கின்றது. இவர் போன்றவரின் உழைப்பை வாங்குவதற்கு ஒரு நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு உதவுகின்றார், நிறுவனத்திற்கு விற்ற உழைப்பை அந்த நிறுவனமே சொந்தமாக்கின்றது. இந்த நிறுவனத்தின் கூலிகள் நிறுவனத்தின் ஆட்டத்திற்கு ஆட வேண்டியதுதான்.

'இலங்கையின் ஊடக கலாச்சாரத்தில் மாற்றங்கள் வேண்டும்.
இலங்கையின் ஊடக கலாச்சாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுவதாகவும், செய்திகளை திரிவுபடுத்தி உண்மைக்கு மாறாக வெளியிடுவதும் இதற்கு மற்றும் ஒரு காரணமாகும். என விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண, உலக வங்கியும், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் இணைந்து நடாத்திய மூன்று நாள் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு பேசும் போது தெரிவித்துள்ளார். '
இந்த பயிற்சிப் பட்டறைக்கு யார் நிதியுதவி வளங்குகின்றார்கள் என்பதை அவதானிக்க வேண்டும். இவர்கள் எவ்வகையாக ஊழியர்களை உருவாக்க முனைகின்றார்கள் என்பதையும் அவதானிக்க வேண்டும். முன்னர் குறிப்பிட்டது போன்று எமது உணர்வுகள் எம்மைத் தீர்மானிப்பதில்லை. 'பொருளாதார வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது. ' இவ்வாறு இருக்கையில் வர்க்கச் சமூகத்தில் உள்ள அழுத்தங்களால் தொழிலாளிவர்க்கம் எவ்வாறு இருக்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ளுகின்ற போதே எமது வர்க்க நிலையை நாம் உணர்ந்து கொள்கின்றோம்.


எமது வர்க்க நிலையை இலகுவாக எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றதா? இல்லை. அறிவு பெற்றவர்கள் என்று சொல்லதை விட பலவிடயங்களைப் பற்றி சிந்திப்பவர்கள் என்று கருதுகின்ற வேளையில் எம்மால் இந்தச் சமூகத்தில் சுதந்திரமாக சிந்திக்க முடியுமா? இல்லை. எல்லோரும் ஒரு வர்க்கம் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கின்றது. நாம் பலவிடயங்களை பகுத்தறிய முடிகின்றது எனினும் எமக்கு கொடுக்கின்ற ஊதியத்தின் மாறுபாட்டால் நாம் மற்றவர்களை விட பொருளாதாரத்தில் சிறு அளவில் மேல் நிற்பதால் எம்மால் கீழ் உள்ளவர்களை பார்க்கும் நிலையை மாற்றிக் கொள்ள முடிகின்றது. முன்னர் தெருவில் வாடுபவனைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதி சமூகத்தில் ஒரு இடத்தை எடுக்க முடிகின்றது. பின்னரான காலத்தில் அவைகள் நாம் முன்னே செல்ல பயன்படும் ஒரு ஏணியாக மாற்றம் பெறுகின்றது. பின்னர் மற்றவர்களின் பொருளாதார நிலையை விட மாற்றம் பெறுகின்ற காரணத்தால் நாம் விலைக்கு வாங்கப்படுகின்றறோம். இதில் இருந்து சுதந்திரமாக செயற்படும் போராளிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். எனினும் ஒரு பக்கம் சார்ந்து எழுதுகின்ற போது அவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட மற்றைய பகுதியினர் தூற்றலுக்கும் உள்ளாக வேண்டி வரும்.


இன்று நடேசனை, சிவராமை, நிமலராஜனைப் பற்றி புகழ்பவர்கள் அப்புதனை, சின்னபாலாவை ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் இருவரும் இந்த சமூக அமைப்பை பாதுகாக்கும் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதிகள் தாம் இவர்கள் உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றும் போராட்டத்தில் மறைக்கப்பட்டவர்கள் அல்ல. இதே போல நடேசன், சிவராம் போன்றவர்களும் அவ்வாறுதான் உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றும் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் இல்லை.


இவ்வாறானவர்களின் உழைப்புக் கூட இந்த சமூகத்தின் ஓட்டத்திற்கு ஒப்பான வாழ்க்கை வட்டத்தினுள் முடிந்த ஒன்றே. ஆனால் இவர்களின் இருப்பை பறித்தவர்கள் கண்டனத்துக்கு உரியவர்களே. இதே வேளை ஒருவரின் உயிர் மற்றவர்களில் இருந்து சிறப்பம்சம் கொண்டதல்லை. மாறாக இந்த சமூக இயந்திரத்தை பாதுகாப்பதற்காக கூலிக்காக எழுதிய கூலிப்படையைச் சேர்ந்தவர்களே. இவ்வாறுதான் ஊடகங்களும் ஆகும்.
இவ்வாறு வேறு நிலையில் இருந்து சிந்திக்கும் போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப் படுவது வழமையான ஒரு வாடிக்கையாகவே இருக்கின்றது. இதற்கு ஒரு உதாரணம் வுடீஊ வானொலி மீதான தாக்குதல் நடவடிக்கையாகும். இதற்கு முன்னரும் பல நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறான எதிராளிகள் மீதான தாக்குதல்கள் என்பது தொடரே செய்யும்.


தேசியத்தின் பெயரைப் பாவித்து ஒரு முதலாளி தனது நிறுவனத்திற்கு விளம்பரம் தேடிக் கொண்டதை பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் தொலைக்காட்சி நிறுவனம் ஆணவமாக பொய்யைக் கூட மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். பிரித்தானியாவில் இருந்து இயங்கும் டீடீஊ சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் ஐசுயு போராளிகளின் பேட்டியை நீதிமன்றம் வரை சென்று பேட்டியை ஒலிபரப்பியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். பிரித்தானியாவில் முதலாளித்துவ ஜனநாயகத்தை நீதிமன்றம் வரையில் சென்றாவது பெறக் கூடிய சந்தர்ப்பத்தைக் கொண்ட நாடாகும். அந்த நாட்டில் இருந்;து கொண்டு ஒரு சிறிய குழு, ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தொல்லை தந்ததாக பொய்பிரச்சாரத்தினை தேசியத்தின் பெயரால் செய்து கொண்டனர். இதுவே தான் ஒரு தேச விரோதக் குற்றம்;, இதுதான் இனவிரோத நடவடிக்கையாகும். இதனை மக்கள் விழிப்புடன் செயற்படுவதன் மூலமே இவ்வாறான நடவடிக்கைகளை ஒழிக்க முடியும்.
கருத்தைக் கருத்தால் வெல்ல வேண்டும் என எல்லோரும் கூறுகி;ன்ற போதும் அந்தக் கருத்தின் எல்லைதான் என்ன?

இதற்கு அளவுகோல்தான் என்ன?


இந்தக் கேள்வியானது புத்திஜீவிகள், அல்லது ஊடகவியலாளர்கள் மக்கள் நிலை கொண்டு எழுத வேண்டும் என கூறுகின்ற வேளையில் செல்ல வேண்டிய பாதைக்கான அளவுகோல் இருக்கின்றதா என்பது பற்றியும் பார்க்க வேண்டியிருக்கின்றது.
விளக்கங்கள் பலவாறு?


மாற்றுக் கருத்துக்கள், மாற்றுக் கருத்துக்கள் எவ்வகையானது என்பது ஒவ்வொருவரின் தேடலின் பால் அளவிட முடியும். இந்த தேடல் என்பது பெரும்பான்மை மக்களுக்கு ஏற்ற பாதையாகத் தான் இருக்க முடியும். வௌ;வேறு கருத்துக்கள் என்று கூறுகின்ற போது அவைகள் பெரும்பான்மை மக்களின் தேவைகளுக்கு முரண்பாடாக இருக்க முடியும்.


நாம் வரையறுக்கின்ற அரசியலின் அடிப்படை இலக்கில் உள்ள வித்தியாசமான கோட்பாடு பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகின்றது. குறிப்பாக இடதுசாரிப் பிரிவினர் என்ற கோட்பாட்டு வரையறையின் கீழ் மார்க்சீய சிந்தனையை மழுங்கடிக்கும் முறையிலான பிரச்சார முனைப்பினை முறியடிப்பது அவசியமாகின்றது. காரணம் எல்லோரும் மார்க்சீயம் கதைப்பதும்;, வர்க்கம் பற்றிக் கதைப்பதும் ஒரு வாடிக்கையாக உள்ளது. இவற்றில் உள்ள பாதக நிலையை விபரிப்பது அவசியமாகின்றது. இன்று ஒவ்வொருவரும் தம்விருப்பத்திற்கு ஏற்ப வர்க்கம் பற்றி ஆராயமுடியும். ஆனால் இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் இருந்து பார்க்கின்ற போது ஏதாவது ஒரு நிலையே சரியான பாதையாக அமையமுடியும்.


18.5.05 வெக்ரோன் காலைக்கதிர் நிகழ்ச்சியை பார்த்துக் பொழுது அவரின் கருத்துக்கள் பலமுனைகளைக் கொண்டிருந்தாலும் அவரும் லெனின் பற்றிக் விளக்க முற்பட்டார். இங்கு அவரின் கருத்துப் பற்றிய ஆராய்வல்ல இங்கு நோக்குவது. மாறாக ஒவ்வொரு சக்திகளும் தமக்கேப்ப லெனினை, மார்க்ஸ்சை, மார்க்சீயத்தை, தேசியத்தை விளக்கம் கொடுக்க முடியும் இதுதான் இயல்பாக இருக்கின்றது. இவ்வாறு ஒவ்வொருவரும் வௌ;வேறு வகையாக விளக்கம் கொடுக்க முடியுமா?
சோசலிச, மார்க்சீயப் பாதையில் செயற்படுகின்ற சக்திகள் என பத்திரிகைகள் வகைப்படுத்துகின்றன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி (துஏP), புலிகள் அல்லது புலியெதிர்ப்புச் சக்திகள் இடதுசாரி அரசியலை முன்வைப்பதாக வரையறுக்கப்படுகின்றது.


இவ்வகையான சக்திகள் தம் புரிதலுக்கு ஏற்ப மார்க்சீயத்தை புரிந்து கொள்கின்றனர். இந்தச் சக்திகள் ஒரு புறமிருக்க மக்கள் விழிப்படைய முடியாமல் செய்வதற்கு முதலில் உடையூறாக இருப்பது ஊடகம். தமது மூளையை விற்க தயாராக இருப்பவர்கள் விலை போகின்றனர். எம்மிடம் உள்ள அறிவை எவ்வாறு பயன்படுத்து என்பது பற்றிய nதிளிவு இருக்கின்றது. அதன்கு இலகுவாக இருக்கின்ற சமூக அமைப்பில் ஏதாவது ஒரு திசையை தெரிவு செய்து நாம் தப்பிப் பிழைப்பது. அப்படி கருத்துக் கூறினால் துரோகி என முகுத்திரை குத்தப்படுதலில் இருந்து தப்புவது மூளை உழைப்புப் பிரிவினருக்கு பெரிய பிரச்சனையாக இருப்பதில்லை.


தமிழ், மலையக, முஸ்லீம், சிங்கள உழைப்பாளிகளை உலக மூலதனம் என்பது அடிமை கொண்டிருக்கின்றது


தமிழ்தேசியத்தை சிங்கள தேசியம் ஒடுக்குகின்றது


புலிகள்
மற்றைய இயக்கங்கள்

சிங்கள அரசுபிராந்திய அரசு


உலக வல்லரசுகள்


உழைக்கும் மக்களுக்கான எதிரிகள் வௌ;வேறு வகையாக இருக்கின்றனர். இவர்களை அழிப்பதற்கு எடுக்கப்படும் போராட்ட வடிவம் என்பதற்கு முன்னர் இந்தப் போராட்ட வடிவத்தில்அடக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்பதைப் பார்க்க வேண்டியிருக்கின்றது. இதிலிருந்துதான் போராட்ட சக்திகளை அடையாளம் கொள்ள முடியும்.
தொழிலாளர் வர்க்க நலன் என்று கதைத்துக் கொண்டு ஒடுக்கும் அரச இயந்திரத்தில் பங்கெடுப்பது சரியான பாதையாக இருப்பதில்லை. அரசு என்பதே உழைக்கும் மக்களுக்கான ஒடுக்குமுறை ஸ்தாபனம் தான். அரசு என்பது இரண்டு வர்க்கங்களுக்கிடையே முரண்பாடு ஏற்டாது பாதுகாக்கும் ஒரு நிறுவனம் இது எப்பொழுதும் பலம் படைத்தவர்கள் கைகளிலேயே அதிகாரத்தைக் கொண்டிருக்கும். இந்த அமைப்பிற்கு உட்பட்டது தான் இராணுவம், பொலீஸ், நீதித்துறை என்பன உழைக்கும் மக்கள் எழுச்சி கொள்கின்ற போது அடக்கும். இவர்கள் முதலாளி வர்க்கத்தின் பாதுகாவலர்களே. இவ்வாறான வேளையில் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் அமைப்பினுள் அங்கம் வகித்துக் கொண்டு உழைக்கும் மக்களுக்காக போராட முடியும் என்று எவரும் கூற முடியாது. இது உழைப்பாளிகளுடன் எப்பொழுதும் முரண் கொண்ட ஒரு நிறுவனம் அமைப்பு.


இதேபோல் உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவதன் மூலம் உற்பத்தி உறவில் சுதந்திரமானதாகவும், உற்பத்தியில் முடிவெடுக்கும் உரிமைகளை தமதாக்கிக் கொள்ளவும் ஒரு போராட்ட இலக்கு இருத்தல் வேண்டும். இவற்றிற்கு மக்கள் திரள் அணி என்பது முக்கியமானதாகும். மக்களிடம் உள்ள எந்தச் சிந்தனைகளைளும் பொருளாதார மாற்றம் ஏற்படாமல் சாத்தியம் இல்லை. (இங்கு சக்திகள் இடைக்காலத்தில் அந்த மக்கள் பெறும் இடைக்கால உரிமையை முதலாளித்துவ ஜனநாயகம் என வரையறுத்துக் கொள்ளலாம்.) உற்பத்தி சாதனங்களைக் கைப்பற்றும் போராட்டத்தில் மக்கள் திரள் அரசியல் என்பது அவசியமாகும். இங்கு அவர்கள் போராட்டத்தில் உள்ள சிக்கல்களை மக்கள் அனுபவ ரீதியாக அறிந்து கொள்வதற்கும், புதிய பொருளாதார நிலைக்கு தம்மை தயார்படுத்திக் கொள்வதற்கும் இவை அவசியமாகும். மக்கள் போராட்டத்தின் சாரம்சத்தை அறிவது போராட்;டத்தை வெற்றி கொள்வதற்கு அவசியமாகும்.
இது தனிநபர்கள், சாகசம், வெறும் ஆயுதத்தை நம்பிப் போராடுவது, தம்மை பாதுகாக்க மற்றைய சக்திகளை நம்புவது கூட மக்கள் சார்ந்த அரசியல் பாதைக்கு எதிரானதாகும். இதேபோல சமூகத்தில் இருக்கின்ற அனைத்து உழைக்கும் மக்களுக்கு எதிரான சிந்தனைப் பண்புகளை எதிர்த்துப் போராடுவது என்பது முக்கியமானதாகும். மாறாக சமூக அமைப்பில் உள்ள உழைக்கும் மக்களுக்கு எதிரான சிந்தனைப் பண்புகளை அப்படியே இருப்பில் இருக்க, அதில் இருந்;து வெட்டி ஓடும் சாத்திய அரசியல் என்பது மக்களை தொடர்ச்சியாக அடிமைப்படுத்தி அவர்களின் இரத்தத்திலிலும், பிணத்திலும் அரசியல் நடத்துவதாகும்.

உழைக்கும் மக்களுக்கு எதிரான சிந்தனைப் பண்புகள் இனத்துவ பெருமைகள், மதவாதம், பிரதேசவாதம், ஆண்பெண் பாகுபாட்டுச் சிந்தனை, சாதியம், உற்பத்திச் சாதனத்தினை பாதுகாப்பதற்கான சிந்தனை ஒழுக்கங்கள் என்பவற்றை எதிர்த்துப் போராடுவதில் அடங்கியிருக்கின்றது. இவைகளே குறைந்த பட்ச அளவு கோலாக அமையமுடியும்.அறிவுஜீவிகள்


பொருளாதார அடித்தளத்தில் அமைந்த மேற்கட்டுமானத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் பற்றிய அறிவில் இருந்து தான் அளவு கோல் என்பது மாற்றம் பெறமுடியும். இதனைப் புரிந்து கொள்வது தத்தம் அறிவினைப் பொறுத்து மாறுபடுகின்றது. ஆனால் உழைக்கும் மக்களுக்கான அரசியல் என்பது மாறுபடுவதில்லை. சமச்சீர் அற்ற அறிவைக் கொண்ட காரணத்தினால் தனிமனிதர்களின் புரிதல் என்பது சமூகத்தின் ஒழுக்கவிதி என உற்பத்திச் சாதனத்தைக் கைப்பற்றி வைப்பவர்களுக்கான தமது எழுத்துக்களை பாவித்து மக்களை தொடர்ச்சியாக பொருளாதார நலனைப் பாதுகாக்க முடிகின்றது.


இந்த வர்க்கத்தின் சேவை என்பது முதலாளித்துவ வளர்ச்சியினால் ஏற்படும் மாற்றத்தினை இனத்துவ அடையாளத்துக்குள் மாத்திரம் வரையறுத்து விளக்கம் கொடுப்பது சந்தைக்காக போராடும் ஒரு வர்க்கத்தின் தேவையை மூடி மறைக்கின்றது. இங்கு சிறுபான்மை இனத்தின் ஒரு பகுதி பெருத்தேசியத்தினால் அடக்கும் நோக்கோடு தொடுக்கும் ஆயுத அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடப்படும் போது தற்காப்புக்காக போராடும் போது அவை அடுத்த நிலைக்கான பரிமாணமாகும்.


சமூகத்தில் சாதாரண மக்களை விட பொருளாதாரத்தில் வசதியாக உள்ளவர்களே கல்வி கற்கும் நிலை இருக்கின்றது. இவை உயர்கல்வி பெறும் பகுதியினர் எப்பவும் பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் இருந்து தான் வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் சிந்தனை குட்டி முதலாளித்துவ வரம்பிற்குள் உட்கொண்டதாகும். இவர்கள் தெருவில் படுத்துறங்குபவர்களின் தேவையைப் பற்றி பேச வேண்டியதில்லை. ஒரு சிறுபகுதியினர் இடதுநிலை எடுக்கின்றனர். இவர்கள் முழுமக்களுக்கான பிரச்சனை பற்றிப் ஆராய்கின்றனர். விடிவைத் தேடி போராட முற்படுகின்றனர், வழிகாட்டுகின்றனர்.


இதில் உள்ளவர்கள் அவர்களின் வர்க்க நிலை காரணமாக பின்பற்றிய பாதையை விட்டு விலகுகின்றனர். இது அவர்களின் தனிமனித உரிமையாகும். ஆனால் இவர்களை தொடர்ச்சியாக இடதுசாரி அரசியல் பேசியவர்கள் பாசீசத்தை எந்தக் காலத்திலும் ஆதரிப்பதில்லை. இவ்வாறானவர்களை இடதுசாரிகள் என அழைத்துக் கொள்ள முடியாது. இவர்கள் உற்பத்தி சாதனத்தைக் கைப்பற்ற, அரச இயந்திரத்தை பாதுகாக்காது இருக்கின்றார்களா என்பதே குறைந்த பட்ச அளவு கோலாகும். இதற்கு இதை எழுதும் எழுத்தாளரும் விதிவிலக்காக இருக்க முடியாது. இவைகள் எமக்கு முன்னோர் சிந்தித்து செயற்பட்டதை மற்றவர்களுடன் பகிரும் நிலைக்கு அப்பால் ஒரு புரட்சிகரமானதாக இருக்க வேண்டுமானால் ஒரு புரட்சிகர கட்சியின் வழிகாட்;டலுக்கும், அதன் மத்தியப்பட்ட பாட்டாளி வர்க்க தலைமையின் வழிகாட்டலுக்கு உட்பட்டதாகவே அமையமுடியும். இதனால் எழுத்தாளர்கள் கட்சிக்கு வெளியே இருந்து கொண்டு செயற்படுவது தாராளவாத நிலைக்கும் உட்பட்டு இருக்கின்றனர்.
மாற்றாக இவைகள் எல்லாம் ஒரு சமூகத்தைப் பற்றி செய்யப்படுகின்ற ஓர் ஆய்வு அவ்வளவுதான். எழுதுபவரும் புரட்சிகர அரசியலைக் கொண்டவராக கருத முடியாது. இருக்கின்ற அறிவை மற்றவர்களுக்கு, குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தின் பின்புலத்தின் உள்ளவர்களுக்கு தம்மை யார் என்று அறிவதற்கு உந்துதலாக இவை அமைய முடியும்.
சமூகவியல் சார் துறை என்பது முற்றுமுழுதாக ஒரு பாடமுறையாக வளராத காரணத்தினால் குறிப்பாக இடதுசாரிகளாக இருந்தவர்கள் தமது தொழில் நிமித்தம் மேற்கொள்கின்ற அணுகுமுறை என்பது மார்க்சீய சிந்தனை என்பது உட்புகுவது தவிர்க்க முடியாது இருந்து விடுகின்றது.


இது கல்விசார் மார்க்சீயம் என்ற நிலைக்கு அப்பால் அவை செல்வதில்லை. கல்வி சார் மார்க்சீயம் என்பது பல்வேறுபட்ட அணுகுமுறையில் இதுவும் ஒன்றாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆக கல்விசார் மார்க்சீயம் என்பது பிழைப்புச் சார்பாக தம்மை குறிக்கிவிடுகின்றது. இவ்வாறு பார்த்தால் ஒரு பிரச்சனையினை ஆய்வு செய்கின்ற போது அவர்கள் அந்த அணுகுமுறையை பயன்படுத்துவார்கள். காரணம் முன்னர் குறிப்பி;ட்டது போன்று சமூகவியல், மானிடவியல், உளவியல்துறை போன்ற துறைகளில் இருந்து வருபவர்கள் பரவசப்பட்டு மார்க்சீய அணுகுமுறையைப் பயன்படுத்துவதும் நடைபெறும் என்பiயும் அவதானத்தில் கொள்ளல் வேண்டும். இந்த வேளையில் மார்க்சீயத்தில் பரீட்சையம் இல்லாதவர்கள் இவர்கள் கூறுவதான் மார்க்சீயம் என்ற நிலைக்கும் சென்று விடுகின்றன.
இவ்வாறான எழுத்தாளர்கள் தமது வர்க்க நிலை காரணமாக மூலதனத்தை, அதிகார வர்க்கத்திற்கு விலைக்குப் போகின்றனர். இவர்கள் கட்சி என்பதை ஏற்றுக் கொள்ளாது கட்சி சாரா நிலையில் இருந்து செயற்படுவாத கூறி தாராளவாத நிலைக்கும் உட்பட்டு இருக்கின்றனர். இவ்வாறானவர்கள் தாம் சுதந்திரமானவர்கள், தாம் சுதந்திரமாக இயங்க வேண்டும் என கருதுகின்றனர். இந்தப் பகுதியினரிடையே தாராளவாதம் என்னும் இன்றைய பொருளாதார அமைப்பினால் உருவாக்கப்பட்;ட தனித்துவாதிகளாக உருவாகின்றனர். இவர்கள் தாம் கூறும் கருத்துக்கள் சரியானவை என்ற தனிமனித மையவாத நிலையை உருவாக்கி அவர்களை தனித்தனி தீவுகளாக உலாவ விடுவதில் வெற்றி பெற்றிருக்கின்றது.

இருநிலை பட்ட இடதுசாரியம்


நியாயம் புலியெதிர்ப்பு அல்லது புலி ஆதரவு நியாயம் என்று இரண்டைப் பற்றிய பார்வைதான் மேலோங்கியிருக்கின்றது. இதேபோல புலியாதரவு, புலியெதிர்ப்பு இடதுசாரியம் என்று ஒன்றும் இல்லை. இவற்றைத் தவிர்த்தி உழைக்கும் மக்களுக்கு என்றொரு நியாயப்பாடு இருக்கின்றது. இன்றைய நிலையானது இவற்றிற்கு அப்பால் தனித்துவ அரசியலைக் கொண்;ட உழைக்கும் வர்க்கத்தின் சிந்தனையான மார்க்சீயம் என்பது ஒரு தேசிய இனத்துக்கு ஆதரவு, பாசீசம், மதம், பிரதேசம், சாதி என்பவற்றிற்கு ஆதரவு கொடுக்க முடியாது.


இறைமை, தேசியம் என்பது பற்றிய விளக்கங்கள் புலிகள் அல்லது புலியெதிர்ப்பு நிலையில் இருந்துதான் பார்க்கப்படுகின்றது. நாம் இறைமையை பாதுகாக்க 9 பில்லியன் டொலர் கடனை ரத்து செய்யும் திட்டம் கொண்ட ஒரு போராட்ட வடிவம் தான் உண்மையான தேசியமாகும். இதில் தான் முழுத்தேசத்தின் இறைமையும் தங்கியிருக்கின்றது. இதனை விடுத்து மற்றைய நாடுகளிடம் கடன், உதவி என பிச்சைப் பாத்திரம் எடுப்பதல்ல இடதுசாரியம். இதில் எந்த இடதுசாரிகளும் ஆதரவு கொடுப்பார்கள் எனில் இவர்கள் தேசியத்தையோ, நாட்டின் இறைமையை விற்பதற்கு தயாராக இருப்பவர்களே. இவர்களுக்கும் மார்க்சீய இடதுசாரியத்துக்கும் சம்பந்தம் இல்லை.
இதே போல தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அன்னியச் சக்திகளுடன் கைகோர்ப்பவர்கள் இடதுசாரிகளாக அமைவதில்லை. இவை சுயமுரண்பாட்டைக் கொண்டதாக அமையும் ஏனெனில் ஒரு பக்கத்தில் அடக்குமுறையை எதிர்த்துக் கொண்டு இன்னொரு பக்கத்தில் புதிய அடக்குமுறையாளரை ஆதரிப்பது எவ்வகையில் நியாயம் உள்ளதாக இருக்கின்றது.தமிழ் தேசியம் சிறுபான்மைத் தேசிய இனமாக முஸ்லீம்களை ஒடுக்குவது மார்க்சீய இடதுசாரியம் என கற்பிதம் செய்ய முடியாது. இதேபோல சிங்கள மக்களை ஒடுக்குவதோ, அல்லது தமிழ் மக்களை ஒடுக்குவதே இடதுசாரியம் இல்லை.
முன்னர் இடதுசாரியம் பேசினார்கள் என்பது அவர்கள் அறிவு சார்ந்தது. அவர்கள் பாட்டாளிக் கட்சி என்பதற்கு அப்பால் சென்று தனிமனித நிலை கொண்டு தமது பிழைப்பை நடத்துகின்றனர். இவர்களுக்கான மார்க்சீயம் என்று ஒன்று இல்லை. மாறாக இருக்கின்ற நல்ல விடயங்களை தமது தேவைக்கேற்ப விற்பனை செய்கின்றனர். தாம் மார்க்சீயத்தில் பெற்ற அறிவைக் கொண்டு சமூகத்தை வெகுதுல்லியமாக மார்க்சீயத்தினால் மாத்திரம் தான் பார்க்க முடியும் என்பதை இவர்களே நிரூபிக்கின்றார்கள். இவர்கள் தாம் பெற்ற மார்க்சீய அறிவைக் கொண்டு தாம் பெறும் கூலிக்காக விற்கின்றனர். அது தனிநபர்களின் உத்தியோகம் சார்ந்ததாக இருக்கின்றது. பார்க்கின்ற உத்தியோகத்திற்கு தாம் பெற்ற மார்க்சீய அறிவைப் பயன்படுத்துபவர்களும் உள்ளனர். இவைகள் மாத்திரம் மார்க்சீயமாகாது.
ஏதே ஒரு பக்கம் தான் சரியானதாக இருக்க முடியும். எல்லோரும் பேசுவதும் மார்க்சீயம் சரியாக இருப்பதில்லை. தனித்தனி நபர்களின் புரிதல் என்பது தனிமனிதனின் வட்டத்திற்கு அப்பால் அவை செல்லுபடியற்றதாகும். இவைகள் ஒரு கட்சி சார்ந்தது, உழைக்கும் மக்களின் விமோசம் சார்ந்தது.


ஆகவே ஊடகவியலாளர்களே


கடந்த காலத்தில் மார்க்சீயம் பேசியவர்கள் எல்லாம் பேசியவர்களை இடதுசாரி என வேண்டுமென்றால் அழையுங்கள். இவை பிரெஞ்சுப் புரட்சியில் இடது பக்கம் இருந்த உறுப்பினர்களைக் கொண்டது போல சமூகத்தின் சில அம்சங்களை எதிர்க்கின்றனர். இவைகளில் முழுச் சமூகத்திற்கும் பயனுள்ள கருத்துக்களும் இருக்கும். ஆனால் மார்க்சீயர்கள் என்று அழைப்பதை நிறுத்துங்கள். காரணம் நாம் பேசுவது மாத்திரம் தான் மார்க்சீயம், அல்லது புலியெதிர்ப்பு, புலியாதரவு மார்க்சீயம் என்று ஒன்று இருக்க முடியாது.
மார்க்சீயம் என்பது அடிமைப்படுதலை எதிர்க்கின்றது, மற்றவர்களை அடிமைப்படுத்துவதை எதிர்க்கின்றது, சுரண்டலை எதிர்க்கின்றது, எழியவர்கள் மீது சவாரி செய்வதை எதிர்க்கின்றது, மக்களை முட்டாள்களாக வைத்திருப்பதை அடியோடு வெறுக்கின்றது, அவர்களுக்கு சுயபுத்தியை ஏற்படுத்துகின்றது, தனது அடிமைத் தனத்தை துடைத்தெறியும் படி அறைகூவல் விடுகின்றது.
பி.கு: இந்த வாரம் இதயவீணை வானொலியில் இடதுசாரிகள் பற்றி தூற்றலில் இறங்கியிருந்தனர். இவர்கள் இடதுசாரியம் என்ன என்பதை எவ்வாறு புரிந்துள்ளார்கள் என்பது பற்றிய ஒரு பார்வையை அலசப்படுகின்றது.

வேலன்


0.55 22.6.2005
 
அடடா!
தோழர்களின் வருகையும் கருத்துக்களும் புல்லரிக்க வைக்கின்றது.
நீண்ட பின்னூட்டங்கள் வரும் பதிவாக எம் பதிவு மட்டுமே இருக்குமென்று தோன்றுகிறது.
கருத்துக்களுக்கு நன்றி தோழரே.
-உம்மாண்டி-
 
Fl;lhd; mtHfNs ,jid Ntyd; mOj;jtpy;iy. khwhf ahNuh ,jid mOj;jpAs;sdH. mDg;gpatH ckf;F ,J nghUe;Jk; vd mDg;gpapUF;fyhk;. ckf;F cld;ghL ,y;iy vd;why; ckJ MNuhf;fpakhd fUj;oij Kd;itAq;fs; mjid tpLj;J rpWgps;isj; jdkhfTk;> nfhr;irg;gLj;Jk; KiwpaYk; Gy;yupf;Fk; thHj;ijg; gpuNahfk; Njitapy;iy.
 
//குட்டான் அவர்களே இதனை வேலன் அழுத்தவில்லை. மாறாக யாரோ இதனை அழுத்தியுள்ளனர். அனுப்பியவர் உமக்கு இது பொருந்தும் என அனுப்பியிருக்கலாம். உமக்கு உடன்பாடு இல்லை என்றால் உமது ஆரோக்கியமான கருத்ழதை முன்வையுங்கள் அதனை விடுத்து சிறுபிள்ளைத் தனமாகவும், கொச்சைப்படுத்தும் முறையலும் புல்லரிக்கும் வார்த்தைப் பிரயோகம் தேவையில்லை.//

தோழரே உங்கள் கருத்து எம் தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வந்து பதில் தரும்வரை பொறுமைகாக்கவும்.

- புதியோன்
 
எழுதிக்கொள்வது: கோர்க்கி

தோழர் சங்கர் ராஜியை மறைக்கப்படாமல் பதிவாக்கியவர்களுக்கு எனது நன்றிகள். அவர் ஆரம்ப காலத்தில் எமக்களித்த உதவிகள் மறக்க கூடியதல்ல.

நன்றியுடன்
கோர்க்கி

12.37 26.11.2005
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது