குழவியின் பதிவினைத் தூக்குவோம் எச்சரிக்கை
அமைதியை குலைக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கும் பதிவர் குழவிக்கு இது இறுதி எச்சரிக்கை . ஏற்கனவே தனி மடலி்ல் பல தடவை எழுதிய எச்சரிக்கைகளை உதாசீனம் செய்திருந்த நிலையில் இந்த பகிரங்க அறிவிப்பை வெளியிடுகிறோம். தங்களது பதிவினை ப்ளாக்கரிலிருந்து (தமிழ்மணத்தில் இருந்து அல்ல ) முழுமையாகத் தூக்கியெறிவதற்கான அனைத்து நுட்பமான வேலைகளும் முடிவடைந்து விட்ட நிலையில் நமது மத்திய குழுவின் தீர்மானத்திற்கு ஏற்க உமக்கான கடைசி எச்சரிக்கையினை பதிவாக வெளியிடுகிறோம். உங்களது பதிவனைக் காப்பாற்ற வேண்டுமெனில்
உடனடியாக அனைத்து கேலிச் சித்திரங்களையும் நீக்கி பதிவினை வெறுமையாக்கவும்
உங்களது பதிவின் மூலம் மனச் சஞ்சலம் அடைந்த பதிவர்களிடம் மன்னிப்பு கேட்கவும்.
இனி எழுதப் போகும் அல்லது வரையும் பதிவுகளுக்கான வெளியிடும் அனுமதியை எமது இலக்கியப் பிரிவு இணையப் பகுதியிடம் காட்டி பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் உங்களது அனைத்துப் பதிவகளும் (அவதானிக்கவும். அனைத்து பதிவுகளும்) ப்ளாக்கர் கணக்கிலிருந்து நீக்கப்படும். நிபந்தனைகளை ஏற்று மன்னிப்பு பதிவொன்றினை இடுவதற்கு 24 மணிநேர அவகாசம் தரப்படுகிறது.
அவலை இடித்து கார்ட்டுனின் விளக்கத்தை எமக்கு தனிமடலில் அனுப்பவும்
நாங்கள் குத்தும் போதும் குழவிதான் . கொஞ்சும் போதும் குழவிதான் -
தமிழச்சியன் பதிவுகளை உடனடியாகத் திரட்டுக
இணையப் புரட்சியில் ஈடுபட்டிருப்பதனால் விரிவாக எழுத நேரமில்லை. திரட்டியில் இருந்து நீக்கப்பட்ட தமிழச்சியின் பதிவினை உடனடியாக திரட்ட உத்தரவிடுகிறோம். எம்மைப் போலவே இணையத்தில் புரட்சி செய்யும் அவருக்குத் தார்மீக ஆதரவளிக்கும் பொருட்டும் மிகச் சிறந்த பொழுது போக்கும் தளம் ஒன்றினைத் தமிழ் இழந்து விடக் கூடாதென்பதற்காகவும் இந்தக் கட்டளையை இங்கு பிறப்பிக்கின்றோம்.
ஏதோ உணர்ச்சிப்பெருக்கில் இட்ட கட்டளைக்காக இந்தப் பதிவினை நீக்கி விட வேண்டாம் என காலைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளவும் நாம் தயங்கப் போவதில்லை.