இரு கவிதைகள்.
போரின் புதல்வர்கள்.அவனது திருமண இரவில்
அவர்கள் அவனைப் போருக்கு
அழைத்துச் சென்றனர்.
கடுமையான ஐந்து வருடங்கள்.
சிகப்புத் தள்ளுவண்டியொன்றிற் படுத்தவாறு
ஒருநாள் அவன் நாடு திரும்பினான்.
அவனது மூன்று புதல்வர்கள்
அவனைத் துறைமுகத்திற் சந்தித்தனர்.
சுவர்க்கடிகாரம்
எனது நகரம் எதிரியிடம் வீழ்ந்தது.எனினும் கடிகாரம் இன்னும்
சுவரில் ஓடிக்கொண்டிருக்கிறது.
எனது சுற்றாடல் வீழ்ந்தது.
எனது பாதையும் வீழ்ந்தது.
எனினும் கடிகாரம் இன்னும்
சுவரில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.
எனது வீடும் வீழ்ந்து நொருங்கிற்று.
எனினும் கடிகாரம் இன்னும்
சுவரில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.
பின்னர் சுவரும் வீழ்ந்தது.
எனினும் கடிகாரம் இன்னும்
டிக் டிக் என்று ஓடிக்கொண்டேயிருக்கிறது.
***
சமீஹ் அல் காசிம்பலஸ்தீன அரபுக் கவிஞர்களில் ஒருவர்.தமிழில் -எம்.ஏ.நுஹ்மான்.***