வலைப்பதிவாளருக்கு எச்சரிக்கை
வணக்கம் தோழர், தோழியரே!
நாம் இன்றுதான் தமிழ்மணத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டோம். வந்தவுடனேயே சில வேலைகளைச் செய்யவேண்டிய தேவையிலுள்ளோம். அதாவது எம்மைப்பற்றியும் எம் பலத்தைப்பற்றியும் உங்களுக்குப் புரியவைக்கவுள்ளோம். எமது முதற்கட்டமாக சில வலைப்பதிவாளர்களுக்கு எமது எச்சரிக்கையை மணியை அடித்துள்ளோம்.
ஈழநாதன் எனும் பெயரில் கண்டதையும் உளறும் ஒருவரின் ஒரு தளத்தை நாம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
அதே போல்
'தராகி பதிவு' என்ற பெயரில் ஏதோ வெட்டிப் பிடுங்குவோம் என்று சிலர் தளமொன்றை நிறுவினர். பின் இரு மாதங்களாக யாரும் சீந்துவாரின்றி இருக்கிறது அத்தளம். எந்தப் புதிய விடயங்களும் ஏற்றப்படவில்லை. சும்மா பேருக்கென நிறுவப்பட்ட அத்தளத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
மற்றவர்களுக்கும் எச்சரிக்கை:
அநாவசியமான, தரக்குறைவான பதிவுகளை எழுதும் வலைப்பதிவாளர்களின் தளங்கள் எமது தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதை அறியத் தருகிறோம்.
எனவே ஒழுங்காக நல்ல பிள்ளைகளாக பதிவுளைப்போடுமாறு எமது இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இது எச்சரிக்கை மட்டுமன்று, கட்டளை! கட்டளை! கட்டளை!
எமது பலத்தைக் காட்டவே இது. வெறும் முன்னோட்டம் தான்.
அப்ப வரட்டுங்களா தோழர்களே, தோழியரே!
(இயக்கம் எண்டு வந்திட்டா இப்படியான பெயருகளிலதான் மற்றாக்களக் கூப்பிட வேணுமெண்டு முன்னோர் சொல்லியிருக்கினம்.)
இப்படிக்கு,
-உம்மாண்டி-