<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Monday, June 20, 2005
  வலைப்பதிவாளருக்கு எச்சரிக்கை

வணக்கம் தோழர், தோழியரே!
நாம் இன்றுதான் தமிழ்மணத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டோம். வந்தவுடனேயே சில வேலைகளைச் செய்யவேண்டிய தேவையிலுள்ளோம். அதாவது எம்மைப்பற்றியும் எம் பலத்தைப்பற்றியும் உங்களுக்குப் புரியவைக்கவுள்ளோம். எமது முதற்கட்டமாக சில வலைப்பதிவாளர்களுக்கு எமது எச்சரிக்கையை மணியை அடித்துள்ளோம்.

ஈழநாதன் எனும் பெயரில் கண்டதையும் உளறும் ஒருவரின் ஒரு தளத்தை நாம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
அதே போல் 'தராகி பதிவு' என்ற பெயரில் ஏதோ வெட்டிப் பிடுங்குவோம் என்று சிலர் தளமொன்றை நிறுவினர். பின் இரு மாதங்களாக யாரும் சீந்துவாரின்றி இருக்கிறது அத்தளம். எந்தப் புதிய விடயங்களும் ஏற்றப்படவில்லை. சும்மா பேருக்கென நிறுவப்பட்ட அத்தளத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.

மற்றவர்களுக்கும் எச்சரிக்கை:

அநாவசியமான, தரக்குறைவான பதிவுகளை எழுதும் வலைப்பதிவாளர்களின் தளங்கள் எமது தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதை அறியத் தருகிறோம்.
எனவே ஒழுங்காக நல்ல பிள்ளைகளாக பதிவுளைப்போடுமாறு எமது இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இது எச்சரிக்கை மட்டுமன்று, கட்டளை! கட்டளை! கட்டளை!
எமது பலத்தைக் காட்டவே இது. வெறும் முன்னோட்டம் தான்.

அப்ப வரட்டுங்களா தோழர்களே, தோழியரே!
(இயக்கம் எண்டு வந்திட்டா இப்படியான பெயருகளிலதான் மற்றாக்களக் கூப்பிட வேணுமெண்டு முன்னோர் சொல்லியிருக்கினம்.)
இப்படிக்கு,
-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
எழுதிக்கொள்வது: பயந்தாங்கொள்ளி

undefined

22.13 20.6.2005
 
எழுதிக்கொள்வது: பயந்தாங்கொள்ளி

அய்யோ!! பயமா இருக்கு!! யாராவது துணைக்கு வாங்களேன், 'தமிழ்மணம்' போறதுக்கு!!

22.18 20.6.2005
 
எழுதிக்கொள்வது: டிசே

உம்மாண்டி! இந்தச் செயலியை சாத்தியமாக்கியவர்கள், சுரதா, கிருபா போன்ற நண்பர்கள். நான் அவர்கள் தங்கத்தாம்பாளத்தில் தந்ததை பயன்படுத்தியது மட்டுமே. எனவே தயவுசெய்து அவர்களுக்குதான் நன்றி போகவேண்டும், எனக்கு அல்ல. மாற்றிவிடுங்கள். நன்றி.



23.27 20.6.2005
 
எழுதிக்கொள்வது: eelanathan

எவ அவ.ஏஏஏய்ய்ய்ய்ய்ய் எங்கிட்ட வேணாம்.அப்புறம் சர்ஸ்சாயிடுவ

12.5 21.6.2005
 
இதென்ன? புதுப்பிரச்சனையொண்டு வந்திருக்கோ?
 
உம்மாண்டி அப்படி வா!!!

இங்கு இணையத்தில் குடுமிபிடி சண்டை போடுகிறார்கள்.

ஆளுக்கு இரண்டு அடி போட்டு அடக்கி வை.

நான் சிலரின் பெயர்களைத் தருகிறேன். அதையும் உன் பட்டியலில் சேர்த்துக்கொள்.

1.முகமூடி
2.வசந்தன்
3.டோண்டு
4.ரோசாவசந்த்
5.மாயவரத்தான்

அடுத்து இஸ்லாம், இந்து, கிறிஸ்துவ வலைப்பதிவுகள்!
 
இது சரியான போக்கு இல்லை. ஈழப் போராட்டம் முதல், இலக்கியம் வரை இந்தக் குழுச் சண்டையே தமிழர்களைப் பலவீனர்களாய் ஆக்கிக் கொண்டேயிருக்கிறது. என்றோ கிடைத்திருக்க வேண்டிய நியாயமான வாழ்க்கையை இந்தக் குழுச்சண்டைகளே குழிதோண்டிப் புதைத்திருக்கின்றன. நீங்களோ ஈழநாதனோ எந்த இயக்கமென்று அறியும் ஆவல் எனக்கில்லை, ஆனால் வலைப்பதிவில் ஈழத்து அரசியலையும் மக்கள் வாழ்வையும் தனக்குத் தோன்றும் வகையில் பதிந்து வருபவர் ஈழநாதன். அவரைக் குறித்த மாற்றுக் கருத்துக்களும் விமர்சனங்களும் அனேகருக்கு உண்டு. உங்களது விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் வைத்து விட்டு இருக்கலாமே. இந்த முடக்குதல் போன்றவை தமிழரின் மொத்த இழப்பேயன்றி உங்களது வெற்றியில்லை.
 
சொல்லால் சொல்லிப் பயனில்லை -நாம்
வெல்வோம் என்றே வாளெடுத்தோம்
எல்லார் நெஞ்சும் மாறாவிட்டால் -நாம்
கொல்வோம் கொடியார் நெஞ்சதனை

ஈழநாதனுக்கு எச்சரிக்கை !!!!!!!!!!!!

-புதியோன்
 
அட பெடியன்களா? நீங்கள் ஒன்றும் முடக்கவில்லை. அவை தானாக முடங்கி போய் விட்டன.

அவற்றை வெகு விரைவில் வெளியில் கொண்டு வருவோம்.

சிறையுடைப்போம். உங்களுக்கு
சிதை எரிப்போம்.
நன்றியுடன்
கொழுவி
 
வெட்டிப் பேச்சு வேண்டாம் தோழா
வெற்றி கொள்வோம் ஒதுங்கியிரு
கெட்டிக்காரத் தனம் காட்ட எண்ணி
வெட்டு வாங்காதே வெருண்டு போவாய்

கொழுவி என்பவருக்கு எச்சரிக்கை!!!
உமது தளம் விரைவில் வீழ்த்தப்படும்!!!

-புதியோன்
 
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
சுந்தரவடிவேல்!
கருத்துக்களுக்கு நன்றி.
உங்கள் ஆலோசனைகள் நிச்சயம் கருத்திற்கொள்ளப்படும். எமது மத்திய குழுவில் கூடிக்கலந்தாலோசித்து அவர்கள் மீதான தடையை நீக்க ஆவன செய்வேன் என உறுதிகூறுகிறேன்.

மேலும் அநாமதேயமாக வந்து சில பெயர்களைச் சொல்லிச் சென்றவரே, நீங்கள் தந்த பெயர்களிலேயே ஓரளவு தெரிகிறது நீங்கள் யாரென்று. உங்கள் கருத்துக்களுக்கும் ஆலோசனைக்கும் நன்றி.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, கொழுவி உட்பட.
-உம்மாண்டி-
 
எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி பெடியன்கள் குழுவிற்குள் கருத்து மோதல்களும், தன்னிச்சையான செயற்பாடுகளும் அதிகரித்து விட்டன.

இயக்கம் என்ற கட்டு கோப்பினை மீறி அவரவர் நடப்பதாக தமக்குள் குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள்.

தலைமைத்துவ போட்டிகளும் ஆரம்பித்து விட்டன.

புதியோனுக்கும் முனியாண்டிக்கும் இடையில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு விட்டன.

இவைபற்றியெல்லாம் ஒரு எக்றே றிப்போட்டினை எமது பதிவில் எதிர்பாருங்கள்.

முளையிலேயே கிள்ளி எறிவோம்

கொழுவி
 
தம்பீகளா

எதோ கூத்து நடக்குதுன்னு மட்டும் புரியுது ஆனா என்னன்னு தா சரியா வெளங்கமாட்டீங்குது.
ஏன்னா இப்ப வர்ர பதிவுகள பார்த்தா எவன் எதை ஆதரிக்கறா எதிர்க்கிறான்னு ஒண்ணுமே புரியல.
ஆதரிக்கிறமாதிரி எதிர்க்கிறாய்ங்க அல்லது எதிர்க்கிறமாதிரி ஆதரிக்கிறாய்ங்க. அனேகமாய் எல்லாத்துக்கும் ஒரு ஐ டி கார்டு கொடுத்தரனுமுனு நினைக்கிறன்.
 
பெடியன்களே!
வணக்கம்.ஒவ்வொருவரும் தமது கருத்தைப் பதிந்துகொள்வது ஜனநாயகத்தில்(அண்ணளவாக) ஏற்புடையது.அதைத் தடுத்தாட்கொள்வது தப்பானது.கடந்த காலத்தில் தங்களது மனோபாவத்தினது வெளிப்பாடானது மின்கம்பத் தண்டனைகளைச்செய்யத் தூண்டி நாம் என்னவானோம்?
நீங்கள் குறிப்பிடும் தமிழ்பேசும் நண்பர்கள், தமிழ்மக்களின் நலன்சார்ந்து,தாம் நம்பும் இயக்கத்துக்கு விசுவாசிகளாக இருப்பதை யார் தடுப்பது? அதற்கான அதிகாரத்தை எதன்பொருட்டு நீங்கள் எடுத்தீர்கள்?எந்த விதமான உரிமையோடு-அதிகாரத்தோடு-எதன்நோக்கு நிலையிலிருந்து இவற்றைச் செய்கிறீர்கள்?மக்கள்(தமிழ்பேசும் மக்கள்)நலன் சார்ந்தா அல்லது குழு நலன் சார்ந்தா இக்காரியத்திலீடுபட உத்தேசம்?தமிழ்பேசும் மக்களைக் கருவறுப்பதற்காகப் பலர் களமிறங்கியுள்ளார்கள், அதில் உங்கள் பங்கு எப்படி?இயக்கவாத மாயையைவிட்டு வெளியிலிருந்து மக்கள் நலன் சார்ந்து சிந்திப்போமா? இத்தகைய சிந்தனையூடாக நமது மக்கள்தம் ஜீவாதாரவுரிமைகளுக்கான அரசியற்போராட்டச் செல்நெறியையும்-போராட்டச்செல்நெறியையும் சொல்லுங்கள்.இத்தகைய நோக்கமின்றி மற்றெல்லாத்தனங்களும் பாசிசச் செயற்பாடே!

ப.வி.ஸ்ரீரங்கன்
 
This comment has been removed by a blog administrator.
 
எது பாசிசம்?
குட்டிக் குட்டித் தமிழினத்தை
குனிய வைப்பவர் புரிவது பாசிசம்!
கடவுள் என்ற பெயரால் தமிழ்ச்சமூகத்தை
முட்டாள்களாக்கி வைத்திருப்பது பாசிசம்!

எது பாசிசம்?

பெண்கள் மீது புரிகிற
கலாச்சார அடக்குமுறை பாசிசம்!
பொல்லாத மொழிகள் கொண்டு
எம்தமிழை சீரழிப்பது பாசிசம்!

எது பாசிசம்?

நாம் செய்வது பாசிசமா? தன்மானத்தோடும், தமிழுணர்வோடும் வாழ நினைப்பது பாசிசமா?
கொள்கைப் பற்றோடும், மனவுறுதியோடும் வாழ நினைப்பது பாசிசமா?

அடக்குமுறைக்கெதிராய்க் கிளர்ந்தெழுந்தால் அது பாசிசமா?
அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைத்தால் அது பாசிசமா?

எது பாசிசம்?

- புதியோன்
 
புதியோன்,பாசிசம் பற்றிய தங்கள் பா விளக்கத்திற்கு நன்றி.நான் கேட்டகேள்விகளின்னும் விடையற்று அநாதைகளாகக் கிடக்கிறது.அதற்கொரு பாவிளக்கம் தரலாம்தானே?அதன் பின்பு உங்களோடு பாசிசம் பற்றியும்,சமூகவியல் பற்றியும் பேசுகிறேன்.
ஸ்ரீரங்கன்
 
ஐயா பெரியார்களே!
அதுதான் எம் மத்தியகுழுவில் ஆராய்ந்து இதற்கொரு நல்ல தீர்வு காண்போம் என்று தலைவன் என்ற முறையில் நான் உறுதியளித்துவிட்டேன். பிறகேன் பாசிசம் அது இது என்று வாதாடி நேரத்தை வீணடிக்கிறீர்கள்?
பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல தீர்வு எங்களால் வழங்கப்படும்.
-உம்மாண்டி-
 
இந்த மண்டை ஓட்டைபார்த்தால் வேற்று கிரக மனிதன் போல் எல்லாவாகிடக்குது!!!!!
 
எழுதிக்கொள்வது: eelanathan

மீண்டும் தொடங்கும் மிடுக்குடன் எனது பதிவு மீளவும் ஆரம்பித்துள்ளதென்பதை பெடியங்களுக்கு மகிழ்வுடன் அறியத் தருகிறேன்.ஈழநாதன் பாவம் அதனாலே திரும்பவும் கொடுத்துவிட்டோம் என்று பூச்சுற்ற மாட்டீர்களென்று நம்புகிறேன்.

18.46 22.6.2005
 
டெம்பிலேட்டை மாத்தி தொலையுங்கபா !!!

ரவியா
 
அட ஈழநாதப் பையா!
மேலே சில புத்தஜீவிகள் (சுந்தரவடிவேல், ஸ்ரீரங்கன்) பணிவாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, எமது மத்தியகுழு கூடி ஆலோசித்துத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் நேற்றே இந்த முடிவை நான் பகிரங்கமாக அறிவித்துவிட்டேன். அப்படியிருக்க நாம் கருணைகூர்ந்து செயற்பட அனுமதித்தபின் இப்போது கொக்கரிக்கிறீர். இருந்தாலும் கோபம்கொண்டு உம்மை மேலும் அலைக்கழிக்க விரும்பவில்லை. ஆதலால் பிழைத்துப்போம் தம்பி.

ஆனால் இப்போது மஸ்ட் டூ எனும் குழப்பியின் தளத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம். இது மற்றவர்க்கும் பாடமாக அமையவே செய்யப்படுகிறது. எம் இயக்கத்தைப்பற்றி வதந்திகளைப்பரப்பி மக்களைக் குழப்பத்திலாழ்த்தும் (குழப்பி என்ற பெயரே இதற்குச் சான்று) அவரது பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது.
-உம்மாண்டி-
 
உம்மாண்டி உங்கள் வாய்ச்சவடால் எல்லாம் சிலரிடம் மட்டுமே எடுபடும். உங்களுக்குத் தெம்பு இருந்தால் எங்கள் நண்பர் வசந்தன் பதிவையும் தமிழக நண்பர் டோண்டு அவர்களின் பதிவையும் முடக்கிக் காட்டுங்கள் பின்னர் நம்புகிறோம் நீங்கள் பெரிய ஆள் என்று!
 
டோய்!
ஆரடாப்பா அது என்ர நண்பன்?
இப்படிச்சொல்லி ஒரேயடியா முடக்கிப்போட இவ்வளவு ஆச வச்சிருக்கிறது ஆரப்பா?
ஒருக்கா முகத்தைக் காட்டுங்கோவன்.
-வசந்தன்-
 
இப்போது போய்ப்பாருங்கள், குழப்பியின் தளத்தை.
இப்போது புரிகிறதா நாங்கள் யாரென்று.
மற்றவர்களும் கவனமாக இருக்கவும்.
-உம்மாண்டி-
 
ஹாஹாஹா
இணையக் கோளாறால நின்றதை நீங்கள் நிறுத்தினதா
நல்லாத்தான் ரீல் விட்டிருக்கிறீங்கப்பா..
இதை நம்பி சிலர் பதில் எழுதினதை நினைச்சு சிரிச்சு சிரிச்சு
வயிறு நோகுது..
வடிவேலு பாணியில சொன்னா அய்யோ அய்யோ
சின்னப்புள்ள தனமால்ல இருக்கு.... ஹிஹிஹி
 
மதிப்புக்குரிய உம்மாண்டி!வணக்கம்.தயவு செய்து இந்த வேலையைவிட்டுவிடுங்கள்.நாமே நமக்கு எதிரிகளாகமாறுவது நியாயமா?நுட்பவியலில் தங்கள் ஆற்றல்களை மதிக்கிறோம்.ஆனால் கருத்துச் சுதந்திரத்துக்கெதிராக நீங்கள் செயற்பட்டால் எப்படித்தாம் நாலு கருத்து வெளிக்கொணரப்படும்?இந்தப்போக்கு இறுதியில் நம்மையின்னும் அறிவிலிகளாகவே மாற்றிக்கொள்ளும் அபாயத்தை நீங்கள் அறியாதவரில்லை.இனிமேலும் பதிவுகளை நிறுத்திக்கொள்ளாமல் கொழுவியின் பதிவை இயங்க வையுங்கள்.கருத்துக்களை கருத்துக்களாலேயேதாம் எதிர்கொள்வது அறிவுடமை.உங்களைச் சீண்டிக் கொள்பவர் காரியத்தைக் கெடுத்துவிட முனைகின்றனர்.தயவு பண்ணி இப்படிச் செய்யாதீர்கள்.

நட்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
 
வலைப்பூக்களில் வரும் பதிவுகள் எப்படியாக அமையவேண்டும் என்பதையும், அவை மீறப்படும்பட்சத்திலல் என்ன நடவடிக்கைகள் எம்மால்மேற்கொள்ளப்படும் என்பதனையும் விரைவில் எமது தலைமை அறிவிக்கும்.

குறிப்பாக தமிழ் மீதும், தமிழ்த் தேசியத்தின் மீதும் களங்கமேற்படுத்தும் பதிவுகளை யாராவது இட்டால்...

தமிழ்மக்கள் மத்தியில் குழப்பங்களை மேற்கொள்ள முற்பட்டால்...

எமது இயக்கத்தை மீறி வேறெவராவது வளர முற்பட்டால்...

பட்டியல் நீளும். தலைமையின் தீர்க்கமான முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.

- புதியோன்
(ஊடுருவல் படையணி)
 
HAHAH HAHAHA HAHAHA HAHAH
GOOD JOKE HEHEHEH
 
EPPADIPPA IPPADI SIRIKAMA ELLAM JOKE ADIKIRENGA? HOHOHOHOHO HEHEHEHE KUKUKU KEKEKEKE
 
எமது கொள்கைகளையும், எமது தலைமையின் தொலைநோக்கு பார்வையிலான செயற்பாட்டையுயும் கொச்சைப்படுத்தும் வகையிலும் எம் இயக்கத்தை வெறும் கோமாளிகளாக உலகளவில் சித்தரிக்க நீங்கள் முயல்வதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தோழரே அவதாரம் நீங்கள் எமது வலைப்பதிவுக்குள் ஒவ்வொருமுறையும் உள்நுழையும்போதும் உங்கள் தரவுகள் எம் உளவுத்துறையினரால் சேமிக்கப்படுகின்றன. உங்கள் சுவடுகள் எம்மால் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. உங்கள் ஐபி இலக்கம் தொடக்கம் உங்கள் கணினியின் பலவீனங்கள், இணையவலையின் பலவீனங்களை யாம் அறிவோம். உமக்கு நாம் எச்சரிக்கை வழங்குகிறோம்!!! வலைப்பதிவுகளில் மட்டுமே தற்போது நாங்கள் எமது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எல்லைகள் மீறினால், உங்கள் கணினிகள் மீதும் எமது தாக்குதல் நடவடிக்கை விஸ்தரிக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறோம்.

- புதியோன்
(ஊடுருவல் படையணி)
 
AAA AYYOOO ROMPAVUM PAYAMAY IRUKKE..
HAHAHHA HUHUHUHUH KEKEKEKE

INTHA POOCHANDI VELAIYELLAM
VERA YARODAVATHU VAITHUKOL..
SARIYANA LOOSUKAL

HAHAH HAHAHA HAHAHAHA
 
சிறிரங்கன்!
உங்கள் வேண்டுகோள் நிச்சயம் கருத்திற்கொள்ளப்படும்.
ஆனால் ஏற்கெனவே இயங்க அனுமதிக்கப்பட்ட ஈழநாதன் விட்ட சவாலை மேலே பார்த்தீர்கள் தானே?
மேலும் மற்றவர்கள் கோள்மூட்டி நாம் எமது நடவடிக்கையை எடுக்கமாட்டோம் என்பதைக் கூறிக்கொள்கிறோம். இங்கே சில தளங்களின் பெயர்களைச்சொல்லி அவற்றைத் தடுக்கும்படி சவால் விடுபவர்களை நாம் கருத்திலெடுப்பதில்லை.
நன்றி
விரைவில் மகிழ்ச்சியான முடிவு வெளியிடப்படும்.
பாசமுடன்,
-உம்மாண்டி-
 
பெடியன்கள் அவர்களே,

எனது பெயரை எழுதிச் சென்றது யார் என்பது எனக்கும் எனது நண்பர்களுக்கும் நன்றாகத் தெரியும். அவரின் பின்னூட்டங்கள் எனது ஜிமெயில் ஆர்ஹைவ்ஸில் ஹெடர்ஸுடன் அப்படியே உள்ளன. அந்த மனப்பிறழ்வு கொண்டவரை நன்றாக அடையாளம் கண்டு கொண்டதற்காக நன்றி.

தமிழகத்தில் இருந்து ஒரு தீவிரவாதி என்றால் இலங்கையில் இருந்து இன்னொரூ தீவிரவாதியா? இப்படியே போனால் சரிவராது. இதனை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும். நானும் எனது நண்பர்களும் அவரைக் கண்டுகொள்ளாமல் அவரது பதிவில் பின்னூட்டம் இடாமல் செல்வது போல் இங்கும் எல்லோரும் படிக்காமலும் பின்னூட்டம் இடாமலும் சென்றால் தானாகவே அடங்கிவிடுவீர்கள்.

கண்டுகொள்ளப்படாமல் விடுவதே சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். மற்றபடி உங்கள் மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். மேலும் எப்போதும் என் அப்பன் மகரநெடுங்குழைகாதன் கூடவே இருப்பதால் உங்களால் மட்டுமல்ல யாராலும் என் பதிவினை அழிக்கவே முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
 
This comment has been removed by a blog administrator.
 
Dear Pediyans,
The unthinkable has happened. The ID thief has managed to enter a comment with my ID number. Please believe me, I did not give the above comment inspite of the blogger ID numnber matching. I am sure who it is and I wish he utilize his talents for better things other than harassing others like this.
Regards,
Dondu Raghavan
Blogger ID (for what is worth): 4800161
(I guess the only way left to me is to repeat hte comment in my blog earmarked for this purpose)
 
http://www.blogger.com/profile/4800161

டோண்டு உங்க பேரிலேயே ஒரு டெஸ்டிங்.பயப்படாதீங்க
 
தெய்வமே டோண்டு ராகவனைக் காப்பாற்று.

இது கூட டோண்டு எழுதியதில்லை சும்மா டெஸ்டிங்கு அம்புட்டுதேன்

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
 
Testing.............
 
தெய்வம் கட்டாயம் டோண்டுவைக் காப்பாற்றியே தீரும்!

உங்கள் பெயரில் பின்னூட்டமிடுவது ப்ளாக்கரில்ஒரு ஜுஜிபி என்பதைக் காட்டவே (டோண்டுவின் பெயரில்) இந்த மறுமொழி. இது ப்ளாக்கர் சேவையில் உள்ள ஒரு குறை. ஆனால் இந்த வலைப்பதிவின் உரிமையாளர் anonymous பின்னூட்டங்களை தடுத்தால் இதுபோல் செய்யமுடியாது.

பதிவுக்குத் தொடர்பில்லாத இந்த காமெண்டை இட்டதற்காக இந்த வலைப்பூவின் உரிமையாளரிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

(இது டோண்டு இட்டதல்ல!)

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
 
இது டோண்டு இடவில்லை
ஒரு பரிசோதனை முயற்சி.
பாசமுடன்,
-உம்மாண்டி-
 
இப்படி மற்றவர்களின் பெயர்களின் பின்னூட்டமிடுவது எப்படியென்று தெரியும்.
அநாமதேயப் பின்னூட்டங்களை நிறுத்துவது தான் இதைத்தடுக்கச் சிறந்தவழியென்தும் உண்மை.
ஆனால் அதால் வேறுசிலர் பாதிக்கப்படலாம்.
ப்ளொக்கர் கணக்கு வைத்திருக்காதவர்கள் பின்னூட்டமிட முடியாமற்போகலாம்.
ஆதலாம் இப்போதைக்கு அநாமதேயப்பின்னூட்டங்களை நிறுத்தும் எண்ணமில்லை.
நீங்கள் தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள்.
நன்றி
இப்படிக்கு
பாசமுடன்,
-உம்மாண்டி-
 
மேலே வந்து எழுதிச் சென்றது நான்தான்.

S.K
 
எழுதிக்கொள்வது: உம்மாண்டி.

பரிசோதனை.
உம்மாண்டி.

16.58 25.6.2005
 
இப்போது முதல் பதிவு செய்யப்படாத வாசகர்கள், (புளெக்கர் கணக்கு வைத்திருக்காதவர்கள்) புளொக்கர் பின்னூட்ட முறையால் பின்னூட்டமிடமுடியாதபடி நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது கணக்கு வைத்திருப்பர்கள் மட்டுமே வழமையான புளொக்கர் முறையால் பின்னூட்டமிடலாம்.

ஆனால் மற்றவர்கள் பின்னூட்டமிட விரும்பினால், மேலே நாம் தந்துள்ள பாமினி, அல்லது ரிஸ்கி முறைப் பின்னூட்டப்பெட்டியைப்பாவித்து பின்னூட்டமிடலாம்.

ஆக, எல்லோருக்கும் பின்னூட்டவசதி உள்ளது. ஆனால் மற்றவர்களின் ஐடி மூலமோ, குளப்பங்கள் வரும் வகையிலோ பின்னூட்டமிடுவது கட்டுப்படுத்தப்படுகிறது.

சிரமத்துக்கு மன்னிக்கவும்.
நன்றி
இப்படிக்கு,
-உம்மாண்டி.-
 
நீங்கள் உங்களுக்கே பாதுகாப்புத்தேடுவதா?எல்லோரையும் பயம்காட்டிய உம்மாண்டி தனக்கும் தானே பயம் காட்டுவதை என்னவென்பேன்.வல்லவர்களுக்கு வல்லவர்கள் வையக்த்துளுண்டு-இதுதாமா?
தோழமையுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
 
This comment has been removed by a blog administrator.
 
ஸ்ரீரங்கன் அண்ணே!
பிரச்சினை தெரியாமல் கதைக்கிறீர்கள்.
சிக்கல் வந்தது, டோண்டு போன்றவர்களுக்கு
அதுவும் எம்தளத்தில் மட்டுமன்று, பிற தளங்களிலும் அவர் பெயரில் பின்னூட்டங்கள் இடப்பட்டுள்ளது.

இது இங்கு வரும் எமது வாசகர்களின் நன்மைக்கேயல்லாது, எமக்கு இதனால் என்ன பயம்?
இன்னொருவன் எழுதுவதை நாம் டோண்டு எழுதியதாக நினைத்துக்கொள்வோம். அவ்வளவுதான். ஆனால் அக்கருத்தை அவர் எழுதாதபோது உளைச்சல் அவருக்குத்தானேயொழிய எமக்கில்லை. இது உமக்கும் பொருந்தும். நாளை ஸ்ரீரங்கன் என்ற பேரில் ஏதாவதொன்றை இன்னொருவர் எழுதக்கூடும். இப்போதும் உங்களுக்கு இந்தவசதி பிடிக்கவில்லையென்றால் நாங்கள் நீக்கிவிடத்தயார்.

மேலே ஸ்ரீரங்கன் என்ற பெயரில் வந்த பின்னூட்டம் உங்களுடையது என்றால் எவ்வளவுதூரம் கோபமோ வருத்தமோ கொள்வீர்கள்? ஆனால் எமக்கு அதனால் ஏதாவது வருத்தமுண்டா? இல்லையே? (ஒரு உதாரணத்துக்குத்தான் மேற்கண்ட உங்கள் பெயரிலான பின்னூட்டம். ஆனால் நீங்கள் கொழுவியின் தளத்தில் எம்மைப்பற்றிச் சொன்னது மறக்கக்கூடியதன்று.)

-உம்மாண்டி-
 
Dear Ummandi,
Thanks for your understanding. Now that you have disabled anonymous comment, the ID number will now give the correct picture, I hope. For example the above socalled Dondu's comment is not mine, see blogger ID.
Regards,
Dondu Raghavan
Blogger No. 4800161
 
எழுதிக்கொள்வது: முட்டாள்.

நல்ல பதிவு.
முட்டாள்.

1.38 26.6.2005
 
உம்மாண்டி,வணக்கம்!
நீங்கள் ஒன்றையறிவீர்களா? எனக்கு இந்த கணினி விஞ்ஞானச் சாகசங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவுகிடையாது.என்னோடு நீங்கள் மோதுவதாகவிருந்தால் அது சமூகவிஞ்ஞானத் தளத்திலாகட்டும்.நிஞ்சுநிமிர்த்தி-சுயமுகத்துடன் களம் வருபவன் நான்.முகமூடியெல்லாம் பேடிகளுக்கே!உயிர்-உடல்,குடும்பம்-இவையெல்லாம் பொருட்டல்ல ஸ்ரீரங்கனுக்கு.இதில்(சமூகவியல்-பொருளியல்-அரசியல்-தத்துவத்தில்)தில் இருக்கா?வாருங்கள் முகங்காட்டி விவாதிப்போம்!சும்மா படம் காட்டல்போல் புத்தமதம்,சிங்களத்தையே படித்து சிங்களவராய் மாறிவிட்டால்-தமிழர் பிரச்சனை முடிந்துவிடுமென படம்காட்டல் விவேகமானால்,வாருங்கள் கருத்துநிலையோடு விவாதிப்போம்.இதைவிட்டுக் கணினித்தாக்குதலா?தம்பி ஆளைவிடு இராசா! என்பெயரில் கேவலமானவற்றை எழுதுவதாலும்-அறிவிலித்தனமான விவாதங்களை முன்வைப்பதாலும் நான் கொதிக்கவோ அன்றி டோண்டு அவர்களைப்போல் பதறியடிக்கவோ முயற்சிக்கமாட்டேன்.ஏனெனில் வார்த்தைகளுக்குக் கொடுக்கும் மதிப்பைவிட தமிழரின் நலத்திற்கு முக்கியமளிப்பவன் நான். அவர்கள் நலனில் அக்கறையற்ற சமூகவிரோதிகளின் இந்தக் கேடுகெட்ட இழிசெயலுக்கு நான் செவி சாய்க்கேன் உம்மாண்டி!இதுதாம் நாம்.நம்மை மீறிய இந்த விண்ணாணத்தைப்பற்றிய பிரமிப்பில் நீங்கள் எம்பிக் குதிக்கலாம்.எனகென்ன?வேண்டுமானால் எனது தளத்தை அழியுங்கள்.பரவாயில்லை.எனகென்ன நஷ்டம்?நான் பல தளங்களிலும்,பத்திரிகைகளிலும் எழுதுபவன்.எனக்கு வலைப்பதிவு ஒரு தூசு!இதைவிட்டால் இன்னொன்றுடன் வருவேன். எவரும் எனது குரலையோ -சிந்தனையையோ மிகச் சரியாகக் கையாளமுடியாது!முடிந்தால் முயற்சியுங்கள்!இதில் தப்பில்லை.இழி சொற்களை மற்றவர்கள் தளங்களில்-எனது பெயரில் எழுதுங்கள்.இதற்காக நான் சிறிதும் கலங்கேன்.எனது மக்கள் தினமும் உயிர்-உடமைகளையே இழக்கும்போது,இஃது சின்ன விடயம் உம்மாண்டி.

-ப.வி.ஸ்ரீரங்கன்
25.06.2005

Man sollte nicht immer an Geld denken.-von Sri Rangan.
 
அடேங் கப்பா!உம்மாண்டி இப்படிக் கொஞ்சம் வா!
என்ன விளையாட்டிது?இலங்கையரசின் இணையத்தளங்களுக்கொரு பாடம் புகட்டிவிடலாமே?நம்மக்களிடம் இந்த வித்தைகாட்டல்:'பேய்க்குப் படிச்சு தாய்க்கு விடும் செயல்'போலிருக்கு.
கொஞ்சம் எங்கட எதிரியான சிங்கள அரசுக்குப் பாடம் படிபிச்சுவிடேன்.
 
"என்பெயரில் கேவலமானவற்றை எழுதுவதாலும்-அறிவிலித்தனமான விவாதங்களை முன்வைப்பதாலும் நான் கொதிக்கவோ அன்றி டோண்டு அவர்களைப்போல் பதறியடிக்கவோ முயற்சிக்கமாட்டேன்."

சிறீரங்கன் அவர்களே, நீங்கள் கூறுவதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் இப்பிரச்சினையை இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கிறேன். நட்பின் மரணம் என்பதுதான் அது. என் பெயரில் தவறானப் பின்னூட்டம் வர, அதைப் படிக்கும் என் நண்பர்கள் சிலர் என்னைத் தப்பாகப் புரிந்துகொள்ளலாம், ஆனால் என்னிடம் அதைப் பற்றி விளக்கம் கேட்க முடியாத நிலைமையும் உருவாகலாம். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் என் மீதுள்ள நல்லெண்ணம் மறைய அவர்கள் என் பால் கொண்ட நட்பும் மரணிக்கலாம். "எதிர்நீச்சல்" படத்தில் நாகேஷ் முத்துராமனிடம் கூறுவார்: "நண்பனின் மரணத்தைக் கூட சகித்து கொள்ளலாம், ஆனால் நட்பின் மரணத்தை அல்ல" என்று. அதே நிலைதான் எனக்கும்.

மேலும் "அஞ்சுவதற்கஞ்சாமை பேதமை" என்பது பொய்யாமொழி அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
 
அன்பின் ஸ்ரீரங்கன்!
உங்கள் பெயரில் நானெழுதிய பின்னூட்டத்தை அழித்துவிடுகிறேன்.
இப்படி மற்றவர்களால் எழுதப்படலாம் என்பதற்காகவே அநாமதேய பின்னூட்ட வசதியை நிறுத்தினேன் என்பதைத்தான் சொன்னேன். அதுவும் நீங்கள் அதைத் தவறாகப் புரிந்திருந்தபடியால். இப்போது வேறு ஏதோ சொல்லிச்சென்றுள்ளீர்கள்.

பாமினி எழுத்துரு மாற்றி வேலை செய்கிறது.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

-உம்மாண்டி-
 
எழுதிக்கொள்வது: P.V.Sri Rangan

உம்மாண்டிக்கும்-டோண்டு அவர்களுக்கும் நன்றி!டோண்டு அவர்களே தங்கள் கருத்துச் சரியானது.நட்பு என்பது உயிரிலும் மேலானதுதாம்.அத்தகைய நட்பு இப்போ நோய்வாய்ப் பட்டுள்ளது.கர்ணனுக்கும்-துpரியோதனுக்குமுள்ள நட்புமாதிரி எங்கேயிப்போது?... எடுக்கவா கோர்க்கவா?

11.9 26.6.2005
 
"நட்பு என்பது உயிரிலும் மேலானதுதாம்.அத்தகைய நட்பு இப்போ நோய்வாய்ப் பட்டுள்ளது.கர்ணனுக்கும்-துப்ரியோதனுக்குமுள்ள நட்புமாதிரி எங்கேயிப்போது?... எடுக்கவா கோர்க்கவா?"

என்ன சந்தேகம் ஸிரீரங்கன் அவர்களே? ஏன் இந்த வரிகள்? நம் நட்பு அப்படியேத்தானே இருக்கிறது? அதில் உங்களுக்கு சந்தேகம் இல்லைதானே? இப்போது தங்கள் உடல் நலம் எப்படியிருக்கிறது?

(Weisen Sie vielleicht auf http://mauran.blogspot.com/2005/06/blog-post_14.html#comments hin? Machen Sie sich keine Sorge darüber).

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)
 
நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை,டோண்டு அவர்களே!பொதுவாகச் சொன்னேன்.நமக்குள் கருத்துகளோ அல்லது கொள்கைகளோ ஒன்றுஞ் செய்யமுடியாது.நாம் இவைகளுக்குக் கொடுக்கும் மதிப்பைவிட மனிதவுணர்வுகளுக்கே முக்கியமும்-மதிப்பும் அளிக்கிறோம்.எனவே நீங்கள் குறிப்பிட்ட மயூரன் பதிவு...அதெல்லாமொரு நிமிடம் வரைதாம்...
அன்புடன்
ஸ்ரீரங்கன்
 
அந்நியன் ஸ்டைலா :-))
 
ரவிஸ்ரீனிவாசின் வலைப்பதிவில் பெடியன்கள் பெயரைப்பாவித்துப் பின்னூட்டமிடப்பட்டுள்ளது. அதற்கும் எமக்கும் சம்பந்தமில்லையென்பதை அறியத் தருகிறோம். மேலும் எந்தவொரு வலைப்பதிவிலும் நாம் பின்னூட்டமிடுவதில்லை என்ற கொள்கையோடு இருக்கிறோம் என்பதையும் அறியத்தருகிறோம்.
எனவே வலைப்பதிவாளரே!
உங்கள் பதிவுகளில் எங்கள் பெயரைப்பாவித்து ஏதாவது பின்னூட்டங்கள் வந்தால் அது நாம் எழுதியதன்று என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இப்படிக்கு,
-உம்மாண்டி-
 
கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை சிறீரங்கன் அவர்களே. அவற்றையும் மீறியதுதான் நட்பு.நம்மிருவருக்கும் தமிழ் உயிர், ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்ச் தெரியும். படிப்பிலும் நாட்டம் உண்டு. படிக்கும் விஷயங்கள் பல்வகைப்பட்டவை, ஆகவே கருத்துகள் புரிதலில் வேறுபாடுகள். அவ்வளவுதானே? விட்டுத் தள்ளுங்கள் நண்பரே.

தங்கள் உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு:
அனானியின் தொல்லையைத் தவிர்க்க ஒரு வழி என் நண்பர்கள் வாய்ஸ் ஆன் விங்ஸ் மற்றும் எஸ்.கே. கூறியுள்ளனர். இனிமேல் என் பின்னூட்டங்கள் என் படம் மற்றும் ப்ளாக்கர் எண்ணுடன் வரும். பார்ப்போம் என்ன ஆகின்றதென்று.
 
எழுதிக்கொள்வது: Dundu

முதலில் என்னைப்பற்றி நன்கு புரிந்து கொண்டதற்கு நன்றி. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அனைவரும் சென்னையில்தான். அனைவரும் பிராமனர்கள்தான். இவ்வாறு செய்பவர் யார் என்று எனக்கும் எனது பிராமன நண்பர்களுக்கும் நன்றாகத் தெரியும். எனக்குப் பிடித்த விடயங்களில் சிலவற்றைப் பட்டியல் இடுகிறேன்.

1)அரசியல் கட்சிகளில் எனக்கு பிராமனர்களைத்தான் பிடிக்கும். உதாரணமாக ஜெ, பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத்.

2)நாளிதழ்களில் தினமலர். இது பிராமின் நடத்துவது.

3)வார இதழ்களில் துக்ளக். சோ ராமசாமி என்றால் எனக்கு கொள்ளை உயிர். காரணம் அவரும் பிராமின்.

4)நடிகர்கள் என்றால் கமலகாசன். அவர்தான் பிராமின். ரஜினி பிடிக்காது. அவர் பிராமின் இல்லை.

5)வலைப்பதிவில் எனது நண்பர்கள் என்றால் எல்லோரும் பிராமனர்களே. மற்றவர்களையும் என் நண்பர்களாக பாவிப்பதில் பிரச்னை ஒன்றும் இல்லை. ஆனால் அவர்கள் பிராமனர்களை வாழ்த்தி எழுத வேண்டும். பெரியாரை இகழ வேண்டும்.

6)முன்னைய அரசியல் வாதிகளில் நேதாஜி ரொம்ப பிடிக்கும். அவர்தான் பிராமனர். காமராஜரை பிடிக்காது. காரணம் அவரும் பெரியாரும் ஒத்த காசு மிட்டாய் வாங்கி காக்காய் கடி கடித்து சாப்பிட்டனர்.

7) நான் சில யாகூ குரூப் செல்வேன். அவை பிராமன சார்பாக இயங்குகின்றன. அவற்றில் நான் சென்று பெரியாரை திட்டிவிட்டு ஓடி வந்துவிடுவேன். அதன்பின் செல்ல மாட்டேன். எனக்கு எப்போது பிரச்னையோ அப்போது அங்கே சென்று என் நண்பர்களை அழைத்து கூக்குரலிடுவேன். அதன் பின் அந்த குரூப்புக்கே செல்ல மாட்டேன்.

8)எனக்கு விடுதலைப் புலிகளைப் பிடிக்காது. காரணம் அவர்கள் ராஜீவைக் கொன்றார்கள். எனவே எந்த உதவியும் இந்தியாவிடமிருந்து கேட்க அவர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது. இது எனது முடிவு மட்டும் இல்லை. ஒட்டுமொத்த பிராமனர்களின் முடிவு.

9)எனக்கு இஸ்ரேல் பிடிக்கும். பாலஸ்தீனம் பிடிக்காது. காரணம் என்றால் இஸ்ரேல் கிறிஸ்துவர். பாலஸ்தீனமோ முஸ்லிம்கள். ஒன்று எனக்கு முஸ்லீம் புடிக்காது. இரண்டு எனக்கு சோறு போட்டது இஸ்ரேல். மூன்றாவது இஸ்ரேல் அமெரிக்காவின் நண்பன்.

10)நான் நிறைய தலித் நண்பர்களுடன் ஒன்றாக காப்பி குடித்து இருக்கிறேன். எப்படி தெரியுமா? நான் வேலை பார்த்த அலுவலகத்தில் அவர்களைக் கூப்பிட்டு காசு கொடுத்து அவர்களை தனியே வாங்கி குடித்து விட்டு எனக்கு பிராமனாள் காப்பிக்கடையில் பிளாஸ்க் கொடுத்து வாங்கி வரும்படி சொன்னேன். அவர்கள் வாங்கி வந்ததும் குடித்தேன்.

இன்னும் நிறைய இருக்கிறது. ஒவ்வொன்றாய்ச் சொல்வேன். என்னைப் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பர்களே.

அன்புடன்,
டுண்டு ராகவன்
(எலிக்குட்டியைப் பிடித்து உப்பு மிளகாய் வெங்காயம் போட்டு பிரட்டல் செய்து சாப்பிடவும்)

10.18 27.6.2005
 
எழுதிக்கொள்வது: Navan

//அட.. இது நல்ல விளையாட்டாயிருக்கே.... என் தளத்தையும் கொஞ்சம் நிறுத்தி வையுங்களேன் ப்ளீஸ். எனக்கும் கொஞ்ச நாளா பொழுதே போக மாட்டேங்குது.//

இப்படிச்சொன்னது நான். என் பெயர் நவன் பகவதி. எனது தளம்

http://www.tamil.navakrish.com

10.23 27.6.2005
 
"(எலிக்குட்டியைப் பிடித்து உப்பு மிளகாய் வெங்காயம் போட்டு பிரட்டல் செய்து சாப்பிடவும்)"
அந்த மனம் பிறழ்ந்தவர் என்னவேல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் பாருங்கள்? இனிமேல் என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். மேலும் அவை என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments


அன்புடன்,
டோண்டு ராகவன்
 
எழுதிக்கொள்வது: test

Comments:
பொடியளே
நீங்களே எல்லாருக்கும் அள்ளி வைச்சுப்போட்டு,உப்பிடி ரீல் விடுவதில் கெட்டிக்காரர்ரப்பா!அவனுக்கு எச்சரிக்கை,இவனுக்கு எச்சரிக்கை.சிங்களம் தமிழரிண்ட பிரச்சினைக்குத் தீர்வு.புத்தம் கச்சையாமே.எண்டெல்லாம் சூப்பராய் அவிட்டுப்போட்டு... ஐயோ நாங்க விடேல்லப் பின்னூட்முங்க எண்டு புலம்பிக்கிட்டு இருக்கிறீங்கள்.உங்கட காரியத்தை இதோட நிறுத்துங்கப்பா.சும்மா கண்டவன் பெயரில பின்னூட்டமிட்டுப்போட்டு,அவங்களையே வம்புக்கிழுத்து என்னதான் பண்ணப்போறீங்க?எதையுமே வௌஸ்தைகெட்டமாதிரியல்ல எழுதுகிட்டிருக்கீங்க.நீங்கெல்லாம் யாரப்பா?கிந்தி படி,இங்கிலீசுப்படின்னுவேறு வம்பு பண்ணுங்கிறீங்களே பையன்களே.நீங்க எல்லாரும் புலிகளிண்ட பினாமீங்க.அவங்கட ஆக்கள்தான்.சும்மா வேவு பார்க்கிறீங்களாக்கும்.ஆரூடா புலியை எதிர்க்கிறான்னு வலைவிரிச்சுக்கிட்டிருக்கீங்க.பட்டதும் அப்புடியே அமுக்கிறத்துக்கு.ரொம்பத்தான் ரீலுவோய் ஒங்கட வேலை.நான் நெனைக்கிறேன் நீங்களெல்லாரும்(ஈழநாதன்,வசந்தன்,கொழுவி...)சேர்ந்து திட்டம்போட்டு இப்படி வந்திருக்கீங்க.ஒங்களுக்குள்ள பேசிப்றைஞ்சு எல்லாம் செஞ்சிகிட்டிருக்கீங்க.கொழுவி தன்ர பதிவைப்பற்றி மூச்சே விடேல்ல.இதிலிருந்து ஒங்கட கூட்டுத் தெரியுது.மத்தவங்களல்ல பாரத்தைப் போட்டுக் கடாசி விட்டு நீங்க நல்ல பிள்ளைவேடம் போடுறது தெரியுது சாமி.


4.7 28.6.2005
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது